ஃபுல் ரொமான்ஸ் மூடில் இருக்கும் ஆனந்தி.. குடுகுடுப்புக்காரன் போடட் குண்டால் தவிக்கும் குடும்பம்.. சிங்கப்பெண்ணே அப்டேட்
ஆனந்தி, அன்பு மீது வைத்திருக்கும் காதலை வெளிப்படுத்தும் சமயத்தில், ஆனந்தி குடும்பம் அசிங்கத்தை சந்திக்க நேரிடும் என குடுகுடுப்புக்காரன் எச்சரித்துவிட்டு செல்கிறான்.
அன்பு தான் அழகன் என்பதை தன்னுடன் வேலை செய்யும் நண்பர்களுக்கும் ஹாஸ்டல் நண்பர்களுக்கும் கூற வேண்டும் என்று ஆசைப்பட்ட ஆனந்தி அனைவரையும் ஹோட்டல் ஒன்றிற்கு வருமாறு கூறினாள்.
மகேஷை கோபப்படுத்திய ரெஜினா
இதைக் கேட்டு ஷாக்கான காயத்ரியும், ரெஜினாவும் ஆனந்தி அழகனை கண்டுபிடித்து விட்டதாகவும், அவனைக் காண நீங்களும் வருமாரும் மகேஷிடம் கேட்டுள்ளனர்.
அழகன் தன் வாழ்வில் திரும்பத் திரும்ப வருவதை ஏற்றுக் கொள்ள முடியாத மகேஷ் கோபமடைகிறான். அத்துடன் ரெஜினாவிடம் முதலில் நீங்கள் அழகன் யார் என்பதை பார்த்துவிட்டு பின் என்னிடம் சொல்லுங்கள் எனக் கூறினான்.
மகேஷை தடுக்கும் ரெஜினா
இதற்கிடையில், அன்பு தான் அழகன் என்பதை அறிந்த ரெஜினாவும் காயத்ரியும் மகேஷ் ஹோட்டலுக்கு வருவதைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்கின்றனர். ஆனால், மகேஷ் அவர்களை விடுவதாக இல்லை. ஆனந்தியை சந்திக்க வேண்டும் என முயற்சி செய்கிறான்.
குண்டைப் போட்ட குடுகுடுப்புக்காரன்
இது ஒருபக்கம் இருக்க, வீட்டில் சுப நிகழ்ச்சி நடந்தே ஆக வேண்டும். இல்லையென்றால், குடும்பமே அசிங்கப்பட்டு நிற்க வேண்டிய நிலை வரும் என ஆனந்தி வீட்டு முன்பு குடுகுடுப்பைக்காரன் கூறிவிட்டு சென்றான். இதைக் கேட்ட ஆனந்தி குடும்பம், என்ன ஆகப் போகிறதோ என்ற பயத்தில் உள்ளனர்.
காதலைப் பொழியும் ஆனந்தி
இந்த சமயத்தில், அன்புவுடன் தனியாக மொட்டை மாடியில் இருக்கும் ஆனந்தி, அன்புவிடம் காதலைப் பொழிகிறாள். ஆனந்தி அழகன் மேல் வைத்த காதலை விட, அன்பு ஆனந்தி மேல் வைத்த காதல் மிகவும் பெரியது என கண்கலங்கி கூறிய ஆனந்தி, அன்புவின் மடியில் படுத்துக் கொள்கிறாள். இதுகுறித்த ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
அழகனை கண்டுபிடித்த ஆனந்தி
கார்மெண்ட்சில் வேலை செய்யும் ஆனந்திக்கு, அழகன் என்ற பெயரில் கடிதம் வந்த வண்ணம் இருந்தது. நாளுக்கு நாள் அந்த கடித போக்குவரத்து ஆனந்திக்கு காதலாக மாறியது.
இந்நிலையில், அந்த அழகன் யார் என்பதை கண்டுபிடிக்க ஆனந்தி மிகவும் முயற்சி எடுத்தார். அதன் விளைவாக தன் நெருங்கிய நண்பன் அன்பு தான் அழகன் என்பதை கண்டுபிடித்தார்.
இதையடுத்து, ஆனந்தியை பிரிந்து வங்கதேசம் செல்ல இருந்த அன்புவை, தடுத்து நிறுத்தி தன் காதலை வெளிப்படுத்தினார் ஆனந்தி. இந்த சமயத்தில், தன்னை சுற்றி சுற்றி வரும் மகேஷிற்கு இந்த உண்மை தெரிய வேண்டும் என நினைத்து அவருக்கு போன் செய்கிறார். பின் ஆனந்தியும் அன்புவும் இருக்கும் கோயிலுக்கு மகேஷ் மித்ராவுடன் வந்தார்.
மித்ராவின் சூழ்ச்சியை அறிந்த மகேஷ்
அப்போது, அன்புவும் ஆனந்தியும் ஒன்றாக இருப்பதைப் பார்த்து மித்ரா மகேஷை ஏற்றி விடுகிறாள். அன்பு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். அதனால் அவரை அடிக்கவும் சொல்கிறார்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த மகேஷ், மித்ராவை பளார் என அறைகிறான். நடப்பது புரியாமல் தவித்த மித்ராவிடம் அழகன் பெயரில் பார்சல் அனுப்பி, அன்புவையும் மகேஷையும் பிரிக்க அன்பு கையெழுத்திலேயே கடிதம் எழுதியது மித்ரா தான் என்ற உண்மை தனக்கு தெரியும் என்றும், நீயும் என் அம்மாவும் பேசியதை தான் கேட்டதாகவும் கூறி, இனி மித்ராவை தன் கண்முன்னே இருக்க கூடாது எனவும் திட்டுகிறான்.
மன்னிப்பு கேட்ட மகேஷ்
இதையடுத்து, அன்பு ஆனந்தி அழகான நட்பை நான் தவறாக புரிந்துகொண்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என இருவரிடமும் மன்னிப்பு கேட்டான். அத்துடன் அன்பு வங்கதேசம் போக வேண்டாம். பழையபடி, எனக்கு துணையாக கார்மெண்டிசில் வந்து பணியாற்ற வேண்டும். எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என மகேஷ் கூறுகிறான்.
டாபிக்ஸ்