காருக்குள் அட்ராசிட்டி செய்யும் கயல்.. கடுப்பாகும் சரவண வேலு.. கயல் சீரியல் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  காருக்குள் அட்ராசிட்டி செய்யும் கயல்.. கடுப்பாகும் சரவண வேலு.. கயல் சீரியல் அப்டேட்

காருக்குள் அட்ராசிட்டி செய்யும் கயல்.. கடுப்பாகும் சரவண வேலு.. கயல் சீரியல் அப்டேட்

Malavica Natarajan HT Tamil
Published Nov 27, 2024 06:37 AM IST

சொந்த ஊருக்கு வந்த கயல், எழிலுடன் சேர்ந்து ஊரை சுற்றிப் பார்க்கிறார். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் சரவண வேலு கோபமடைகிறார்.

காருக்குள் அட்ராசிட்டி செய்யும் கயல்.. கடுப்பாகும் சரவண வேலு.. கயல் சீரியல் அப்டேட்
காருக்குள் அட்ராசிட்டி செய்யும் கயல்.. கடுப்பாகும் சரவண வேலு.. கயல் சீரியல் அப்டேட்

இங்கு வந்த அவர், தன்னை நெருங்கி வந்த பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து எழிலுடன் நேரத்தை செலவழிக்க விரும்புகிறார்.

எழிலுடன் ஊரை சுற்றும் கயல்

இதனால், தனக்கு உதவி செய்ய வந்த சரவண வேலுவையே டிரைவராக்கி ஊரை சுற்றிக் காண்பிக்குமாறு கூறுகிறார். கயலை கல்யாணம் செய்வது தான் தன் வாழ்நாள் லட்சியம் என பல வருடங்களாக காதலுடன் காத்திருந்த சரவண வேலுவிற்கு இது கோவத்தை ஏற்படுத்தினாலும், அவன் அதை கயலுக்காக ஏற்றுக் கொள்கிறான்.

பின், காரில் ஊரைச் சுற்றி வரும் கயல், எழிலுடன் பல சேட்டைகள் செய்கிறார். காரில் எழிலும், கயலும் நின்று கொன்டு ஊரைச் சுற்றிப் பார்த்து சந்தோஷப்பட்டு வருகின்றனர்.

வயிறு எரியும் சரவண வேலு

இதை துளி அளவும் பொறுத்துக் கொள்ள முடியாத சரவண வேலு கோபமடைகிறார். அத்துடன், இவர்களைப் பார்த்து வயிறு எரிவதாகவும், இன்னும் ஒரே வாரத்தில் எழல் வயிறு எரிய வைக்கப் போவதாகவும் மனதிற்குள்ளே சபதம் இடுகிறான்.

இது ஒருபுறம் இருக்க, கயலின் அப்பா மீது விழுந்த அத்தனை பழிக்கும் அவரது பெரியப்பா தான் காரணம் எனத் தெரிந்தால் அவ்வளவு தான் என அவரது பெரியப்பா தர்மலிங்கமும் பெரியம்மா வடிவும் பயப்படுகின்றனர். இதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.

கயல் குடும்பத்திடம் சண்டையிடும் மக்கள்

முன்னதாக, கோயிலுக்கு சென்ற கயல் குடும்பத்தை அவரது தந்தை ஊரில் உள்ளவர்களின் பணத்தை ஏமாற்றி சென்றதாகவும், கயல் குடும்பம் உடனடியாக ஊரைவிட்டு வெளியே போக வேண்டும் எனவும் ஊரில் உள்ளவர் சண்டைக்கு வருகின்றனர். இதனால் என்ன செய்வது என அறியாமல் கயல் குடும்பம் தவித்து வந்தது. இந்த சமயத்தில் கயல் குடும்பம் ஊருக்கு வந்ததை அறிந்த சரவண வேலு, பல வருடங்களுக்குப் பின் ஊருக்கு வந்த கயலைப் பார்க்க மிகவும் ஆர்வமாக இருந்தாார்.

சரவண வேலுவின் திட்டம்

ஆனால், கோயிலுக்கு சென்று பார்க்கும் போது தான் தெரிந்தது கயலுக்கு திருமணம் ஆனது. இதனால், ஒரு பக்கம் கோபமடைந்தாலும், முதலில் ஊர் மக்களிடம் இருந்து கயலை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், ஊரார் முன் கயல் குடும்பத்திற்காக பரிந்து பேசினார்.

கயலின் உறுதி

இதையடுத்து, கயல் இன்னும் ஒரு வருடத்தில் என் அப்பா கொடுக்க வேண்டிய பணத்தை கொடுப்பதாகவும் அத்துடன் என் அப்பா எந்த தவறும் செய்யாதவர் என்பதை நிரூபிப்பதே என் வாழ்நாள் லட்சியம் என்றும் கயல் கூறுகிறார்.

வஞ்சத்துடன் பழகும் சரவண வேலு

ஆனால், கயலுக்கு உதவுவது போல் வந்த சரவண வேலு, கயலை எப்படியாவது எழிலிடம் இருந்து பிரிக்க வேண்டும். தான் இத்தனை நாள் காத்திருந்த எழிலை எப்படியாவது அடைய வேண்டும் என்ற வஞ்சத்தில் இருக்கிறான், இதையடுத்து, இன்னும் ஒரே வாரத்திற்குள் கயலிடமிருந்து எழிலை பிரிப்பதாகவும் மனதிற்குள் சவால் விட்டுக் கொள்கிறான்.