கயலுக்கு தொல்லை கொடுக்க வரும் புது வில்லன்.. எத்தனை பேரத்தான் டீல் செய்றது? கயல் சீரியல் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கயலுக்கு தொல்லை கொடுக்க வரும் புது வில்லன்.. எத்தனை பேரத்தான் டீல் செய்றது? கயல் சீரியல் அப்டேட்

கயலுக்கு தொல்லை கொடுக்க வரும் புது வில்லன்.. எத்தனை பேரத்தான் டீல் செய்றது? கயல் சீரியல் அப்டேட்

Malavica Natarajan HT Tamil
Nov 19, 2024 07:29 AM IST

கயல் எழில் காதலைப் பிரிக்க புது வில்லன் வர உள்ளதாகக் கூறி சன் டிவி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கயலுக்கு தொல்லை கொடுக்க வரும் புது வில்லன்.. எத்தனை பேரத்தான் டீல் செய்றது? கயல் சீரியல் அப்டேட்
கயலுக்கு தொல்லை கொடுக்க வரும் புது வில்லன்.. எத்தனை பேரத்தான் டீல் செய்றது? கயல் சீரியல் அப்டேட்

பல 100 வருஷம் சேர்ந்து வாழனும்

பின், விருந்து முடித்து வீட்டிற்கு வந்த கயலும் எழிலும் காதல் கொஞ்ச பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது, எழில் நாம் இருவரும் பல 100 வருஷம் இதே அன்போடு எப்போதும் மாறாமல் இருக்க வேண்டும் என கூறுகிறார்.

ஆட்டத்தைக் கலைக்க வரும் புது வில்லன்

இதைக் கேட்ட கயல், நம் இருவரையும் அவ்வளவு எளிதில் யாராலும் பிரிக்க முடியாது என உறுதியாகக் கூறுகிறார். நிலமை இப்படி இருக்கையில், கயலுக்கும் எழிலுக்கும் தொல்லை கொடுத்து அவர்களை பிரிக்க புது வில்லன் ஒருவன் வரப் போவதாக சன் டிவி இன்று வெளியிட்ட ப்ரோமோவில் தெரியவருகிறது.

நடக்கும் நிகழ்வுகளை வைத்துப் பார்த்தால். கயல் தன் அப்பா கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முயற்சி செய்ய உள்ள சமயத்தில், புதிதாக வந்த வில்லன் அதைத் தடுக்க முற்படுவது போன்று தெரியவருகிறது.

இருப்பினும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வில்லன் என்ன செய்ய காத்திருக்கிறான் என்பதை இனிவரும் நாட்களில் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

விருந்துக்கு செல்லும் கயல்

பைனான்சியர் பிரச்சனையில் இருந்து தன் குடும்பத்தைக் காப்பாற்றிய பெரியப்பாவின் பாசத்தை இனியும் இழக்கத் தயாராக இல்லை என முடிவெடுத்த கயல், எழலிலுடன் அவரது வீட்டிற்கு கல்யாண விருந்துக்கு வர சம்மதிக்கிறார். கயலுடன் அவரது குடும்பத்தினரும் அவரது பெரியப்பா தர்மலிங்கம் வீட்டிற்கு வருகின்றனர்.

கோவத்தில் கத்திய சுப்ரமணி

ஏற்கனவே, கயல் வீட்டிற்கு வருவதை விரும்பாத தர்மலிங்கத்தின் மகன் சுப்ரமணி, அம்மா, அப்பாவை திட்டி வருகிறான்.. நீங்கள் எல்லாம் நல்லவங்களா மாறிட்டா என் வாழ்ககையை கெடுப்பிங்களா என சண்டையிடவும் செய்தான். இதற்கிடையில், இத்தனை நாள் மறைத்து வைத்திருந்த உண்மையை கயலிடம் சொல்லவும் முடிவு செய்தார். ஆனால், இதற்கு அவரது மனைவி வடிவு மறுப்பு தெரிவிக்கிறார்.

சாப்பிடும் போதே ஆரம்பித்த சண்டை

இந்நிலையில், தர்மலிங்கம் வீட்டிற்கு வந்த கயலும் எழிலும் சுப்ரமணியை தேடுகின்றனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த சுப்ரமணி மிகவும் காட்டமாக கயலிடம் சண்டைக்கு செல்கிறான். அத்தோடு நில்லாமல் கயல் குறித்து மிக மோசமாகவும் கூறுகிறார்.

கயல், பணத்துக்கு ஆசைப்பட்டு தான் எழிலை கல்யாணம் செய்து கொண்டாள் என எழிலிடம் மிகவும் கோபமாக கூறுகிறான். அத்துடன் கயலின் திட்டம் குறித்து எதுவும் தெரியாமல் எழில் கயல் பின்னாலே சுற்றுவதாகவும் அவர் குற்றம் சாட்டினான். சுப்ரமணியின் கோவத்தைப் பார்த்த மூர்த்தியும், தர்மலிங்கமும் அவனை கயலின் அருகில் போகாமல் இருக்க பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.

வாழ்நாள் எதிரியே நீ தான்

இதைப் பார்த்துக் கொண்டிருந்த கயல், என் கூடப் பிறந்தால் தான் சகோதரப் பாசம் இருக்கும் என அவசியம் இல்லை. நீ பாசமாகத் தான் இருந்து பாரேன் என கூறுகிறார். இதைக் கேட்ட உடன் மீண்டும் கோபமடைந்த சுப்ரமணி, என் வாழ்நாள் எதிரியே நீ தான். உன்னை சும்மா விட மாட்டேன் என சத்தமிடுகிறான். பின் அவனை சமாதானம் செய்து அனைவரும் அங்கிருந்து கூட்டிச் செல்கின்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.