‘மகாத்மா காந்தி பாகிஸ்தானின் தேச பிதா’ சர்ச்சை கருத்தால் பாடகருக்கு பறந்த நோட்டீஸ்!
பின்னணிப் பாடகர் அபிஜித் பட்டாச்சார்யா ஒரு பேட்டியில், ‘மகாத்மா காந்தி இந்தியாவிற்கு அல்ல, பாகிஸ்தானுக்குத் தேசப்பிதா’ என்று கூறியிருந்தார். அதற்கு தற்போது எதிர்வினை எழுந்துள்ளது.

பாடகர் அபிஜித் பட்டாச்சார்யா மகாத்மா காந்தியை பாகிஸ்தானின் தேசப்பிதா என்று கூறியதற்காக சட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆசிம் சரோட், பட்டாச்சார்யாவுக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பி, அவரது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
டிசம்பர் 2024 இல் அவர் அளித்த பேட்டியின் போது அவர் கூறிய கருத்து தொடர்பாக இந்த விவகாரம் எழுந்துள்ளது. அவர் பேட்டியில், "பஞ்சம் டா [RD பர்மன்] மகாத்மா காந்தியை விடப் பெரியவர், அவர் இசையின் ராஷ்ட்ரபிதா. மகாத்மா காந்தி இந்தியாவிற்கு அல்ல, பாகிஸ்தானுக்குத் தேசப்பிதா. இந்தியா எப்போதும் இருந்தது. பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது. தவறுதலாக, மகாத்மா காந்தி நமது தேசத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டார்.” என்று பேட்டியளித்தாக கூறப்படுகிறது.