Ilayaraja Vs Manjummel boys: இளையராஜாவின் அடுத்த செக்.. மஞ்சும்மல் பாய்ஸ் பட நிறுவனத்திற்கு பறந்த நோட்டீஸ்!
Ilayaraja Vs Manjummel boys: குணா பட பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும் என மஞ்சும்மல் பாய்ஸ் பட நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

Ilayaraja Vs Manjummel boys: கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனதுடன் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூலை பெற்ற படமாக மஞ்சும்மல் பாய்ஸ் உள்ளது.
கேரளாவில் இருந்து தமிழ்நாட்டின் கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் நண்பர்கள், அங்கிருக்கும் குணா குகையில் தவறி விழும் தனது நண்பனை எப்படி மீட்டார்கள் என்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது.
படத்தின் க்ளைமாக்ஸில் குணா படத்தில் வரும், கண்மணி அன்போடு என்ற பாடல் இடம் பெற்று இருந்தது. இது தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது. முன்னணி நடிகர்கள் யாரும் இல்லாமல் புதுமுக நடிகர்கர்கள் நடித்திருந்த இந்த படம் கேரளாவை விட தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் ரசிகர்கள் படத்தை வெகுவாக கொண்டாடினார்கள். கோலிவுட் பிரபலங்கள் பலரும் படத்தை பாராட்டினார்கள்.
இளையராஜா நோட்டீஸ்
இந்நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு புது சிக்கல் எழுந்து இருக்கிறது. இந்த பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக மஞ்சும்மல் பாய்ஸ், படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு, இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் வழக்கறிஞர் சரவணன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் பதிப்புரிமை சட்டப்படி பாடலின் முழு உரிமையாளர் என்பதால், முறையாக உரிமை பெற்று பாடலை பயன்படுத்த வேண்டும் அல்லது பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும், பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும் அந்த நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இல்லாவிட்டால், பதிப்புரிமையை வேண்டுமென்றே மீறியதாகக் கருதி, உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நோட்சில், “ பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் இளையராஜா பதிப்புரிமை சட்டப்படி பாடலின் முழு உரிமையாளர் ஆவார். அதனால் அவரிடம் முறையாக உரிமை பெற்று பாடலை பயன்படுத்தியிருக்க வேண்டும். அல்லது பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும்.
பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும். இல்லாவிட்டால், பதிப்புரிமையை வேண்டுமென்றே மீறியதாகக் கருதி, உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என குறிப்பிடப்பட்டு உள்ளது.
மஞ்சும்மல் பாய்ஸ்
பெரிய நடிகர்கள் யாரும் இல்லாமல் ரூ. 20 கோடி பட்ஜெட்டில் உருவாக்கபட்டது மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம். இந்த படத்தை சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கியுள்ளார். படத்தின் கதைக்களம் தமிழ்நாடு என்பதால் பெரும்பாலான காட்சிகள் தமிழில் இடம்பிடித்திருக்கும்.
இந்த படம் பெற்ற வரவேற்ப்பை தொடர்ந்து கமல்ஹாசன் படக்குழுவினரை அழைத்து பாராட்டினார்.
மஞ்சும்மல் பாய்ஸ் ஓடிடி ரிலீஸ்
மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடி தளம் பெற்று இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படும் இந்தப்படத்தின் அதிகாரப்பூர்வ ஓடிடி தேதியை ஹாட் ஸ்டார் ஓடிடி தளம் தற்போது வரை அறிவிக்க வில்லை. ஆனால், இந்தப்படம் மே 3 ம் தேதி டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook: https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்