Actor Vinay: ‘எனக்கு எப்படி ரியாக்ட் பண்றதுனே தெரியல..’ தன் கடந்த கால நிகழ்வுகளை பகிர்ந்த நடிகர் வினய்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Vinay: ‘எனக்கு எப்படி ரியாக்ட் பண்றதுனே தெரியல..’ தன் கடந்த கால நிகழ்வுகளை பகிர்ந்த நடிகர் வினய்

Actor Vinay: ‘எனக்கு எப்படி ரியாக்ட் பண்றதுனே தெரியல..’ தன் கடந்த கால நிகழ்வுகளை பகிர்ந்த நடிகர் வினய்

Malavica Natarajan HT Tamil
Feb 02, 2025 03:50 PM IST

Actor Vinay: நான் சாதாரணமா ஒரு நாளைக்கு 25 சிகரெட்டும் வீக் எண்ட்ல 60 சிகரெட் வரைக்கும் பிடிச்சிருக்கேன். ஆனா வாழ்க்கை எல்லாத்தையும் கத்து கொடுக்கும் என நடிகர் வினய் கூறியிருக்கிறார்.

Actor Vinay: ‘எனக்கு எப்படி ரியாக்ட் பண்றதுனே தெரியல..’ தன் கடந்த கால நிகழ்வுகளை பகிர்ந்த நடிகர் வினய்
Actor Vinay: ‘எனக்கு எப்படி ரியாக்ட் பண்றதுனே தெரியல..’ தன் கடந்த கால நிகழ்வுகளை பகிர்ந்த நடிகர் வினய்

இந்நிலையில், வினய் ரெட்நூல் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் எப்படி புகைப்பழக்கத்தில் இருந்து மீண்டு வந்திருக்கிறார் என்பது குறித்தும் பேசி உள்ளார்.

சைன் ஸ்மோக்கர்

அந்தப் பேட்டியில், "நான் உன்னாலே உன்னாலே படம் பண்ணும் போது நான் நிறைய சிகரெட் பிடிப்பேன். அதுக்கு அப்புறம் அதெல்லாத்தையும் நான் விட்டுட்டேன். அதுக்கு அப்புறம் கொஞ்ச நாள்ல எனக்கு ஒரு ஆக்சிடெண்ட் எல்லாம் நடந்தது. அதுக்கு அப்புறம் சுத்தமா இதெல்லாத்தையும் விட்டுட்டேன்.

நான் சிகரெட்ட நிறுத்த ஆரம்பிச்சதுக்கு அப்புறம் எனக்கே என்ன பிடிச்சது. என்னோட சிரிப்பு பிடிச்சது. நான் சிகரெட் பிடிச்ச அப்போ, என் மேல எப்போவும் சிகரெட் வாடை அடிக்கும். அதுனால நான் சிரிச்சாலும் அந்த வாடை தான் வரும். புதுசா ஃப்ரஷ்ஷா ஒருத்தனா மாறிட்டேன். என் நாக்குக்கு சரியான டேஸ்ட் எல்லாம் தெரிய ஆரம்பிச்சது.

அப்புறம் நான் டாக்டர் படம் பண்ணும் போது வேப்பர் கொடுத்தாங்க. அது மறுபடியும் பழக்கம் ஆகிடுச்சு. கொஞ்ச நாள் மறுபடியும் ஸ்மோக் பண்ண ஆரம்பிச்சேன். ஆனா இப்போ அதையும் விட்டுட்டேன். காரணம் என்னென்னா இப்போ 40 வயசு ஆகிடுச்சு.

ஒரு நாளைக்கு 60 சிகரெட்

உடம்ப பாத்துக்கணும். அதுனால எல்லாத்தையும் விட்டுட்டேன். நான் சிகரெட் பிடிச்ச டைம்ல எல்லாம் சாதாரண நாள்ல 20- 25 சிகரெட் பிடிப்பேன். வீக் எண்ட்ல வெளிய எங்கயாவது போனா 40- 60 ஆக கூட மாறும். அப்போ பார்ட்டி பண்ணிட்டு ஜாலியா சுத்திட்டு இருந்தேன். ஆனா அதுக்கு அப்புறம் வாழ்க்கை நம்மள மாத்திடும். நம்ம உடம்பாலயே அதெல்லாம் ஏத்துக்க முடியாது.

கடவுள் நம்பிக்கை

அதே சமயம் நான் ரொம்ப கடவுள் நம்பிக்கை இருக்க ஆளு. அதுவே என்ன மனசு அளவுல அமைதியா வச்சுக்க ஆரம்பிச்சது. நான் விளையாட போனா கூட என் வீட்ல இருக்க விநாயகர் சிலைய தொட்டு கும்புட்டுட்டு தான் போவேன்.

லக்குல வந்த சான்ஸ்

நான் சினிமா இன்டஸ்ட்ரிக்குள்ள வந்தது ஒரு லக்குல தான். அந்த லக் எனக்கு 18 வருஷமா நல்லா தான் இருக்கு. அது எப்போ முடியும்ன்னு தெரியாது. நான் நடிக்க ஆரம்பிச்சப்போ நான் இதுவரைக்கும் டிவில பாத்த ஆளு எல்லாம் என் கூட பக்கத்துல இருக்காங்க. எனக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னே தெரியல.

டாக்டர் படம்

நான் 3 வருஷம் பிரேக் எடுத்ததுக்கு அப்புறம் டாக்டர் படம் பண்ணேன். அந்த படத்தோட கதை எனக்கு தெரியாது. என்னோட சீன் மட்டும் தான் எனக்கு தெரியும். அது எல்லாம் கோவாவுல ஷூட் பண்றோம். செட்ல போய் பாத்தா, நெல்சன், சிவா, ரெடின், தீபான்னு எல்லாரும் செம ஜாலியா கலாட்டா பண்ணிட்டு இருக்காங்க. அப்போவே தெரிஞ்சது படம் நல்லா ஜாலியா தான் இருக்கும்ன்னு. ஆனா, ரிலீஸ் அப்போ கூட எனக்கு முழு படத்தோட கதை தெரியல.

இப்படி எந்த படத்தையும் பாக்கல

தியேட்டர்ல போய் படம் பாத்திட்டு இருக்கேன். அப்போ எனக்கு பாத்ரூம் போகனும். அந்த டைம்ல பாத்தா நீளமா ஒரு காமெடி சீன் போகுது. எனக்கு படத்த பாக்கனும்ன்னு ஆசையாவும் இருக்கு. ஆனா பாத்ரூமும் போகனும். அப்புறம் வேகமா போயிட்டு தியேட்டர்குள்ள ஓடி வர்றேன். இதுவரைக்கும் நான் எந்த படத்தையும் அப்படி பாத்ததே இல்ல" என தன் அனுபவத்தை கூறினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.