Nora Fatehi: பற்றி எரியும் காட்டு தீ.. தப்பித்த பாகுபலி பட நடிகை.. வீட்டில் இருந்தவாறே நடிகை பகிர்ந்த அதிர்ச்சி விடியோ
பாகுபலி முதல் பாகத்தில் மனோகரி பாடலில் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை கிறங்கடித்த நடிகை நோரா ஃபதேஹி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தனக்கு ஏற்பட்ட துயரத்தின் விடியோவைப் பகிர்ந்துள்ளார். லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் பற்றி எரியும் காட்டு தீயில் இருந்து தப்பித்ததாக மிரட்சியுடன் கூறியுள்ளார்.

பற்றி எரியும் காட்டு தீ.. தப்பித்த பாகுபலி பட நடிகை.. வீட்டில் இருந்தவாறே நடிகை பகிர்ந்த அதிர்ச்சி விடியோ
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத்தீயில் நடிகை நோரா ஃபதேஹி சிக்கினார், இதனால் அவர் உடனடியாக தனது இடத்தை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தீ காரணமாக அங்கு நடக்கும் பேரழிவு சூழ்நிலையை அச்சறுத்தலாக இருப்பதாக தெரிவித்தார். இதேபோல் நடிகை பிரியங்கா சோப்ராவும் தனது லாஸ் ஏஞ்சலிஸ் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள மலைகள் தீப்பிடித்து எரியும் விடியோவை பகிர்ந்துள்ளார்.
காட்டுத்தீயிலிருந்து தப்பிய நோரா ஃபதேஹி
வியாழக்கிழமை, நோரா தனது துயரத்தைப் பகிர்ந்து கொள்ளும் வீடியோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் இடுகையிட்டு தனது நல்வாழ்வு குறித்த புதுப்பிப்பை வழங்கினார்.