‘விஷாலுக்கு உதவி பண்ண யாரும் தயாரா இல்ல.. இது அவர பிடிச்ச ஏழரை சனி’- பயில்வான் பகீர்
விஷாலின் நிலையை பார்த்து அவருக்கு உதவி செய்ய யாரும் தயாராக இல்லை என பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் 6 பேக், 8 பேக் என மாஸாக வலம் வந்தவர் விஷால். 6 அடி உயிரம், கட்டுக்கோப்பான உடல்வாகு இதுதான் இவரது அடையாளமாக இருந்தது. ஆனால், அந்த அடையாளம் சமீப காலங்களில் மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது.
அவரது ரத்னம் படம் வெளியான சமயத்திலேயே அவர் உடல்நிலையை பார்த்து பலரும் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்வி 12 ஆண்டுக்கு பின் வெளியாக இருக்கும் மதகஜராஜா படத்தின் நிகழ்ச்சியில் பேசுபொருளானது.
விஷால் உடல்நிலை
நடுங்கும் கைகள், குரல் என்பது மட்டுமின்றி, நிற்கக் கூட முடியாத நிலையிலும் தன் படத்தின் புரொமோஷனுக்கு வந்தார் விஷால். இப்படி இவரை பார்த்த ரசிகர்கள் இவருக்கு என்ன ஆனது என்ற கேள்வியை எழுப்பாமல் இல்லை.
இதனால், இப்போது தமிழ் சினிமாவின் ஹாட் டாப்பிக்காக மாறி இருக்கிறார் விஷால். இந்நிலையில், விஷாலின் உடல்நிலை குறித்து பத்திரிகையாளர் பயில்வான் மெட்ரோ மெயில் எனும் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்,
மன உளைச்சல்
அதில், "விஷால் ஏற்கனவே மதுப்பழக்கம் உள்ளவர், இப்போ மன உளைச்சல்லயும் இருக்காரு. ஏகப்பட்ட கடன்கள் இருக்கு. அதுக்கு பதில் சொல்ல முடியாத நிலையில இருக்குறதால இப்படி அவருக்கு கை கால் நடுக்கம் ஏற்பட்டிருக்கலாம்.
ரஜினிக்கு அப்புறம் கருப்பா இருந்து மக்கள் மத்தியில பிரபலமான ஹீரோவா வந்தவரு விஷால், தன்னுடைய படம் எப்படி ரீச் ஆகுதுன்னு தெரிஞ்சு வியாபாரம் பண்ணனும். நடிச்சமா, காசு வாங்குணோமா, போனோமான்னு இருந்தா பிரச்சனையே இல்ல. இங்க சொந்தப்படம் எடுக்குறேன்னு சொல்லி வந்துட்டு விஷால் ஏகப்பட்ட பிரச்சனைய சந்திச்சாரு.
எல்லா படமும் பிளாப்
நான் தான் எல்லா செலவும் பண்ணுவேன். நான் தான் கணக்கு பாப்பேன்னா மன உளைச்சல் வரும். கரணம் என்னென்னா எல்லா படமும் பிளாப் தான். அதுமட்டுமில்லாம விஷால் வாழ்க்கையிலயும் செட்டில் ஆகல. 3 முறை திருமண ஏற்பாடு நடந்து அது நின்னு போச்சு. விஷால் அரசியலுக்கு வரேன்னு சொல்லி தாக்கல் பண்ணுன வேட்புமனுவையே செல்லாததா ஆக்கிட்டாங்க. அரசியல்வாதிங்க எல்லாம் புத்திசாலிங்க. இவரு புதுசா வந்தா தாக்குபிடிக்க முடியுமா?
மதகஜராஜா ரிலீஸ்
மதகஜராஜா படத்த தயாரிச்ச கம்பெனிக்கு இருந்த கடனால தான் படம் ரிலீஸ் தள்ளி போச்சு. இப்ப அந்த பிரச்சனை முடிஞ்சதா இல்ல விஷாலே படத்த வாங்கிட்டாரான்னு தெரியல.
அவரால எனக்கு தெரிஞ்சு படத்த வாங்க முடியாது. புதுசா படத்துல நடிக்கவும் முடியாது. ஏன்னா அவர் வாங்கி வச்சிருக்க கடன் அப்படி. ஏதாவது ஒரு படத்துல நடிச்சா என்னோட கடன கொடுத்துட்டு படத்த ரிலீஸ் பண்ணட்டும்ன்னு கேஸ் வரும்.
எல்லா இடத்துலயும் கடனாளி
விஷால் உடம்புக்கு எல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல. எல்லாம் மனசுக்கு தான். கிரிக்கெட் போட்டி, நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம்ன்னு ஒன்னு விடாம எல்லாத்தையும் கடனாளியா ஆக்கிட்டாரு. அவருக்கு உதவி பண்ண ஒருத்தரும் தயாரா இல்ல.
விஷாலோட வார்த்தை தான் அவருக்கு எமன். நடிகர் சங்க கட்டிடம் கட்டிட்டு தான் கல்யாணம்ன்னு சொன்னாரு. பில்டிங்கும் கட்டல. கல்யாணமும் நடக்கல. ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடக்கூடாது. சினிமா ஒரு வட்டம். குடும்பமே சினிமாவுல இருந்தும் விஷால் சொந்த கார் கூட இல்லாத நிலைமைல தான் இருக்காரு.
இது ஏழரை சனி
ஒரு படம் தயாரிச்சு நஷ்டம் அடைஞ்சா அடுத்து மத்த புரொடக்ஷன்ல நடிக்கனும். ஆனா, இவரு தெரிஞ்சே அடுத்தடுத்து படம் தயாரிச்சு இந்த நிலைக்கு போயிட்டாரு. நாம நடிச்ச படத்தால வேற யாரும் சம்பாதிக்க கூடாதுன்னு நெனச்சு செஞ்ச வேலை தான் இப்படி வந்து நிக்குது. இது தான் அவரை பிடிச்ச ஏழரை சனி.
வாய வச்சிட்டும் சும்மா இருக்குறது இல்ல. மைக் கிடச்சா என்ன வேணும்னாலும் பேசுறது. உதயநிதியும் விஷாலும் நல்ல பிரண்ட்ஸ் தான். அவர்கிட்ட எதாவது பேசனும்ன்னா தனியா பேசிருக்கனும். அதவிட்டுட்டு மேடை ஏறி மைக்ல பேசுனா மொத்த சினிமா வாழ்க்கையே போயிடும்.
இது தான் என் ஆசை
தமிழ் சினிமாவுல 8 பேக்ஸ், படத்துக்காக உயிர கொடுத்து நடிக்குறவங்கள்ல விஷாலும் ஒருத்தர், ஆனா அதனால என்ன யூஸ், 6 பேக்ஸோ இல்ல 8 பேக்ஸோ வச்சா படம் ஓடிடுமா. வெறும் பவுடரும் தண்ணியும் குடிச்சா உடம்பு மட்டும் சரியா தான் இருக்குமா? எந்த நேரத்துல சாப்டனுமோ அந்த நேரத்துல சாப்டணும். இல்லன்னா இப்படி தான் ஆகும். ஆனா அவர் திரும்ப வந்து படம் நடிக்கனும்ன்னு எனக்கும் ஆசை தான் " என்றார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்