இளையராஜாவை யாரும் விமர்சிக்கவே கூடாது.. அவருடைய சாதனைகள் தெரியுமா? வைரலாகும் பார்த்திபன் பேட்டி
இசைஞானி இளையராஜாவை யாரும் விமர்சிக்க கூடாது. அவருடைய சாதனைகள் அந்தளவு உள்ளது என இயக்குநர் பார்த்திபன் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இசைஞானி இளையராஜா சமீப காலமாக பல விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். இந்நிலையில், இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், இசைஞானி இளையராஜா குறித்து இந்தியாகிளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.
நான் தலைகீழாக நடப்பேன்
இளையராஜாவை யாரும் விமர்சிக்கவே கூடாது என்பது என்னுடைய விருப்பம். அவர் செய்த சாதனைகளை எல்லாம் நான் செய்திருந்தால் நான் தலைகீழாகத் தான் நடந்திருப்பேன்.
அவர் எவ்வளவு சாதனைகளை செய்திருக்கிறார். ஆனால், அவர் அத்தனையையும் விட்டுவிட்டு அடக்கமாக இருந்து வருகிறார். அவரு தலைகணத்தோடு இருக்காருன்னு பலபேர் சொல்லி கேட்ருக்கேன். இதெல்லாம் அவங்களோட சிந்தனை.
இளையராஜாவிற்கு இதெல்லாம் தெரியாது
அவருக்கு கவர்ச்சியாக பேசி சபையில் இருப்பவர்களைக் கவரத் தெரியாது. அதுதான் அவரிடமிருக்கும் பிரச்சனை. எல்லாரும் காப்பி அடிச்சு இப்போ மியூசிக் போடுறாங்க இல்ல. நான் அந்த மாதிரி எல்லாம் பண்றது கிடையாது.
ஆஸ்கார் விருது வாங்குன மரகதமணிய வச்சிகிட்டு அன்னைக்கு இளையராஜா பேசுறாரு, உங்க கிட்ட இருந்து ஒரு ட்யூன் வேணும்னா என்னோட பாட்ட காட்டி இந்த மாதிரி வேணும்னு கேப்பாங்க. ஆனா என்கிட்ட வந்து பாட்ட கேக்கணும்ன்னா யாரோட பாட்ட எடுத்துட்டு வந்து கேப்பாங்கன்னு கேட்டாரு. இதக்கேட்ட மரகதமணி அப்படியே அவரப் பாக்குறாரு. இளையராஜாவுக்கு எப்படி மத்தவங்ககிட்ட பேசி ஐஸ் வைக்கணும்ன்னு தெரியாது. அவருக்கு தெரிஞ்சது எல்லாம் இசை மட்டும் தான்.
நீங்க என்ன கேக்க போறீங்க
இளையராஜாவுக்கு இந்த பாட்டு மாதிரி இசை வேணும்ன்னு கேட்டா பிடிக்கவே பிடிக்காது. அப்படி கேக்குறவங்க கிட்ட நீ படத்துக்கான சுச்சுவேஷன சொல்லு. உனக்கு எப்படி மியூசிக் வேணும்ன்னு நான் சொல்றேன்னு மியூசிக் போடுவாரு.
அடி ஆத்தாடி இள மனசொன்னு பாட்டுக்கு இப்படி தான் மியூசிக் வேணும்ன்னு பாராதிராஜாவா கேட்டாரு. அத நான் தான் போட்டேன். நீங்க என்கிட்ட கேட்டுட்டு வர மியூசிக் எல்லாம் ஏற்கனவே என்கிட்ட இருக்குறது. நீங்க புதுசா என்ன கேக்குறீங்க அத மட்டும் சொல்லுங்கன்னு தான் எப்போவும் சொல்வாரு. இதை எல்லாம் நான் பயங்கரமா ரசிப்பேன்.
சில பேரு எல்லாம் நம்ம மனசுக்குள்ள அப்படியே நின்னுடுவாங்க. அவங்கள ரசிச்சிட்டே இருக்கலாம். ராஜா சார்ன்னா ராஜா சார் தான் என புகழ்ந்து பேசியுள்ளார்.
விருதுக்குச் சொந்தக்காரர்
1970களில் வெளியான அன்னக்கிளி எனும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இளையராஜா ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமல்ல அவர் சிறந்த பாடலாசிரியரும் கூட. இவரது கலைத் திறமையை பாராட்டி, அவருக்கு இந்திய அரது பத்ம் பூஷன் மற்றும் பத்ம விபூஷன் விருதை வழங்கியது. மேலும் தேசிய விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, இசைஞானி எனும் பட்டம், தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, முனைவர் பட்டம் என பல விருதுகளை குவித்துள்ளார்.
இவர் தமிழ்நாடு அரசின் விருதுகள் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒடிசா மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். பல்வேறு சர்வதேச விருதுகளையும் பெற்று அதிக விருதுகள் பெற்ற ஒரே இசையமைப்பாளர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.
ஆண்டாள் கோயில் விவகாரம்
முன்னதாக, இன்று ஆண்டாள் கோயிலில் கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபம் பகுதியில் ஜீயர்களுடன் இளையராஜாவும் உள்ளே செல்ல முயன்றார். அப்போது அவர் தடுத்து நிறுத்தப்பட்டது மிகப்பெரிய விஷயமாக மாறியது.
இந்நிலையில், ஆண்டாள் கோயிலில் கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபம் பகுதியையும் கருவறை போன்றே பாவித்து வருகிறோம். அர்த்த மண்டபத்திற்குள் ஜீயர்களை தவிர பொதுமக்களுக்கு அனுமதி தரப்படுவது இல்லை.
சம்பவத்தன்று ஜீயர் உடன் இளையராஜாவும் அர்த்த மண்டபத்தில் தவறுதலாக நுழைந்து உளளார் என கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்