Tamil News  /  Entertainment  /  Nixon Latest Interview After Kamal Haasan Bigg Boss Season 7 Tamil His Favourite Contestant Is Maya Tamil News

Nixon: ‘அர்ச்சனாவ வேணா அந்த இடத்துல.. மாயாட்ட இருக்குற அந்த விஷயம்.. அவங்க மாதிரி..’ - மாயா புராணம் பாடிய நிக்சன்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 25, 2024 05:34 PM IST

முதலில் எனக்கு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லாவித திறமைகளையும் காண்பிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவை அனைத்தையும் நான் வெளிப்படுத்தி விட்டேன்.

நிக்சன் பேச்சு!
நிக்சன் பேச்சு!

ட்ரெண்டிங் செய்திகள்

அதில் அவர் பேசும் போது, “ பிக்பாஸ் நிகழ்ச்சியில் உண்மையாக இவர்கள் இருந்தார்கள் என்று சொல்ல முடியாது. சில இடங்களில் அவர்கள் உண்மையாகவும், சில இடங்களில் பொய்யாகவும் இருந்தார்கள். 

உண்மையில் நிகழ்ச்சியில் யார் வலிமையான போட்டியாளர் என்பதை உள்ளே இருக்கும் போட்டியாளர்களால் கணிக்க முடியாது என்பது என்னுடைய கருத்து. காரணம் என்னவென்றால் எந்த அடிப்படையில் அவர்களை நீங்கள் கணிப்பீர்கள். அப்படி பார்க்கும் பொழுது, மக்கள் அர்ச்சனா அக்காவை ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்திருக்கிறார்கள். ஆகையால் அவர் வேண்டுமென்றால் வலிமையான போட்டியாளராக இருக்கலாம்.

முதலில் எனக்கு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லாவித திறமைகளையும் காண்பிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவை அனைத்தையும் நிகழ்ச்சியில் நான் வெளிப்படுத்தி விட்டேன். 

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை, நாம் ஒரு சினிமாவிற்கு முயற்சி செய்கிறோம் என்றால், ஒவ்வொரு படிக்கட்டிலும் ஒவ்வொரு விதமான மனிதர்கள் இருப்பார்கள். அவர்களுடைய கேரக்டர் என்ன என்பதை பொறுத்து, நாம் ரியாக்ட் செய்வோம் ஆனால் அதை எல்லாம் மொத்தமாக ஒரு இடத்தில் நாம் சந்திக்க முடியுமென்றால் அதுதான் பிக் பாஸ் நிகழ்ச்சி. 

நான் முழுக்க முழுக்க முழுக்க நல்லவன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். என்னிடம் நிறைய குறைகள் இருந்திருக்கிறது. அந்த குறைகள் அனைத்தும  பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளிப்பட்டு விட்டது. அதை நான் திருத்திக் கொள்ள முயற்சி செய்கிறேன்.

எனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் பிடித்த போட்டியாளர் என்றால் அது மாயா தான். அவருக்கு கலை சார்ந்த அறிவு நிறைய இருப்பதாக எனக்கு தெரிகிறது. அதில் 20 சதவீதம் எனக்கு இருந்தாலே போதும். நான் என்னுடைய பாதையில் பெரிய வெற்றி அடைவேன் என்று நினைக்கிறேன். 

உண்மையில் அந்த வீட்டில் நான் போதும், போதும் என்ற அளவிற்கு இருந்து விட்டேன். கமல் சாருக்கு எப்போது பாட்டு அப்போதே அந்த நிகழ்ச்சிக்கு நான் வந்த நோக்கமானது நிறைவேற்றி விட்டது.” என்று பேசினார். 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.