Nivin Pauly: துபாயில் பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்?..“அந்த நேரத்தில் நிவின் எங்களுடன்”- பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்
Nivin Pauly: மலையாள இயக்குநர்கள் வினித் ஸ்ரீனிவாசன் மற்றும் அருண் ஆகியோர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். - நிவின் பாலி பாலியல் வழக்கில் திருப்பம்!
நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து இயக்குநர்கள் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.
பரபரப்பை ஏற்படுத்திய ஹேமா அறிக்கை:
கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதியன்று, நீதிபதி கே.ஹேமாவின் அறிக்கை கேரளாவில் வெளியானது. அதில், நடிகைகள் பல முன்னணி நடிகர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பதை உறுதிசெய்யப்பட்டது. இந்த அறிக்கை வெளியானதற்குப் பின், பலதரப்பட்ட நடிகைகளும் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லையை வெளியில் பேசிவருகின்றனர். கேரளாவின் முன்னணி நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான முகேஷ், இயக்குநர் சித்திக், இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் மீது அடுத்தடுத்து பாலியல் சார்ந்த புகார்கள் வந்தன.
இதை விசாரிக்க வேண்டிய கேரளாவின் நடிகர் சங்கமான அம்மா சங்கத்தின் தலைவர் மோகன் லால், தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் பல நிர்வாகிகளும் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதனால், அம்மா சங்கம் முற்றிலுமாக கலைந்தது. அதனை தொடர்ந்து பல நடிகைகள் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர்கள் மீது புகார்கள் அளித்து வரும் நிலையில், அண்மையில் ‘பிரேமம்’ படத்தின் மூலம் அனைவருக்கும் அறிமுகமான நடிகர் நிவின் பாலி மீது பெண் ஒருவர் எர்ணாகுளம் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
அந்த புகாரில் அந்த பெண் தன்னை திரைப்படத்தில் நடிக்க வைப்பதாகக் கூறி, நடிகர் நிவின் பாலி துபாய்க்கு அழைத்துச்சென்று, நவம்பர் 2023ஆம் ஆண்டு, பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டு இருந்தார். அதன்பேரில், எர்ணாகுளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் நிவின் பாலி மற்றும் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் உட்பட ஆறுபேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்தப் புகார் குறித்து பதிலளிக்க செய்தியாளர்களைச் சந்தித்த நிவின் பாலி தன் மீது வைக்கப்பட்டு இருக்கும் குற்றசாட்டு போலியானது என்றார்.
இயக்குநர்கள் விளக்கம்
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மலையாள இயக்குநர்கள் வினித் ஸ்ரீனிவாசன் மற்றும் அருண் ஆகியோர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். மேலும் குற்றம்சாட்டபட்ட நாளில் நிவின்பாலி படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
இயக்குநர் வினித் சீனிவாசன் இயக்கத்தில் கொச்சியில் நடைபெற்ற படப்பிடிப்பில் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி காலை வரை படப்பிடிப்பில் நிவின் பாலி கலந்து கொண்டார் என்றும், பின்னர் கொச்சியில் இயக்குநர் அருண் இயக்கத்தில் நடந்த 'பார்மா' எனும் இணைய தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த விளக்கத்தின் மூலம், அந்த நாட்களில் நிவின் பாலி தனது திரைப்படம் மற்றும் விரைவில் வெளியாகவிருக்கும் இணைய தொடர் ஒன்றின் படப்பிடிப்பிற்காக கேரளாவில் இருந்தார் என்பது தற்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தன் மீது பாலியல் ரீதியான புகார் வந்த சில நிமிடங்களில் ஊடகங்களை சந்தித்த நிவின் பாலி, அந்த பெண்ணிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்திருப்பதாக தெரிவித்தார்.
முன்னதாக நடிகர் நிவின் பாலி அளித்த மறுப்பு பேட்டி இங்கே!
பேட்டியில் கூறியதாவது, ''என்னைப் பற்றிய ஒரு செய்தியை நான் பார்த்தேன். அப்படி ஒரு பெண்ணை எனக்குத்தெரியாது. இதுவரை பார்த்ததில்லை. பேசக்கூட இல்லை.
அப்போது இது ஒரு அடிப்படை ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டாகும். நான் முன்பே சொன்னதுபோல, அந்தப்பெண்ணை முன்பே பார்க்கவோ, பேசவோ இல்லை. இப்படி ஒரு குற்றச்சாட்டை நான் முதன்முறையாக எதிர்கொள்கிறேன். என்னைப் பற்றி ஃபிளாஷ் நியூஸாக டிவியில் வரும்போது, அது என்னைப் பலரீதியாக பாதிப்படையச் செய்கிறது. எனக்கும் குடும்பம் இருக்கிறது. நியூஸ் போடுவது தவறில்லை. ஆனால், அதனுடைய அடிப்படை என்ன என்பதை உறுதிப்படுத்திவிட்டு செய்தியாக வெளியிட்டால் நல்லது என்று கருதுகிறேன்.
பிறகு,உங்களை இப்படி அழைத்ததற்குக் காரணம் இந்த விஷயத்தை இப்படியே வைத்திருக்க நினைக்கவில்லை. எனக்கு ஓடி ஒளியவும் அவசியமில்லை. என் தரப்பில் நியாயம் உண்டு. நான் அப்படி ஒரு காரியம் செய்யவில்லை என்று நூறு விழுக்காடு நம்பிக்கை கொண்டு இருப்பதால் தான், ஊடகத்தினரை அழைத்து நான் பேசுகிறேன். எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்துவிட்டதாக சொன்னார்கள்.
எஃப்.ஐ.ஆர் என்பது ஒரு சட்ட நடவடிக்கை. எனவே, அதனை நான் சட்டப்படி எதிர்கொள்வேன். அப்போது சட்டத்தின் எல்லா வழிகளின்படியும் நான் பயணிக்க வேண்டியிருக்கும். அது எத்தனை நாட்கள் ஆகும் என்று எனக்குத் தெரியாது. இவ்விவகாரத்தில் நான் சட்டப்படி சண்டையிடுவேன். இதற்காக, நான் எந்த எல்லைக்கும் சென்று சட்டப்படி சண்டையிடுவேன். உண்மையைச் சொன்னால், என் கையில் எதுவும் இல்லை.
நான் என்னை நிரூபிக்க எல்லா வழிகளிலும் முயற்சிப்பேன். இப்படி ஒரு போலி குற்றச்சாட்டுகள் வரத்தொடங்கினால் எப்படி.. எல்லாரும் வாழவேண்டும் இல்லையா.. நாளை இப்படி ஒரு போலி குற்றச்சாட்டுகள் யாருக்கும் வரலாம்.
இப்படி நிறைய போலி குற்றச்சாட்டுகள் வந்தது நம் மாநிலத்திலுள்ளது. அது அவ்வாறு இல்லை என்று நிரூபணம் செய்யப்பட்ட சம்பவங்களும் இங்கு உள்ளன. இனி, இப்படி ஒரு போலி குற்றச்சாட்டுகள் நாளை யாருக்கு எதிராகவும் வரலாம். அவர்களுக்காகவே நான் இப்படி வந்து பேசுகிறேன்’’ என்றார்,நடிகர் நிவின் பாலி.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்