தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Nivetha Pethuraj Refutes Lavish Spending Claims By Udhayanidhi Stalin, Seeks Responsible Journalism

Nivetha Pethuraj: 50 கோடி ரூபாயில் உதயநிதி வாங்கிகொடுத்த பங்களா?.. கொளுத்திப்போட்ட சவுக்கு! - விளக்கம் கொடுத்த நிவேதா!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 05, 2024 04:56 PM IST

இந்த தவறான செய்தியால், சில நாட்களாக நானும், என்னுடைய குடும்பமும் இதன் காரணமாக கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறோம். தவறான செய்தியை பரப்பும் முன்னதாக தயவு செய்து கொஞ்சம் யோசியுங்கள்.

நிவேதா பெத்துராஜ்!
நிவேதா பெத்துராஜ்!

ட்ரெண்டிங் செய்திகள்

அண்மையில் இவர் தன்னுடைய யூடியூப் சேனலில் அமைச்சர் உதயநிதி தன்னுடைய ரசிகையாக நிவேதா பெத்துராஜிற்கு துபாயில் 50 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கி கொடுத்திருப்பதாக பேசினார். இவரது பேச்சு சமூகவலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நிவேதா பெத்துராஜ் அதனை மறுத்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த பதிவில், “ சமீபகாலமாக எனக்கு அதிகமாக பணம் செலவிடப்படுவதாக ஒரு தவறான செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. நான் இது வரை அமைதியாக இருந்ததற்கான காரணம், இந்த விவகாரத்தை பற்றி பேசுபவர்கள், ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கும் முன்னதாக, அதன் உண்மைத்தன்மையை ஆராய்வார்கள் என்று நினைத்தேன்.

இந்த தவறான செய்தியால், சில நாட்களாக நானும், என்னுடைய குடும்பமும் இதன் காரணமாக கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறோம். தவறான செய்தியை பரப்பும் முன்னதாக தயவு செய்து கொஞ்சம் யோசியுங்கள்.

நான் மிகவும் கண்ணியமான குடும்பத்தில் இருந்து வந்தவள். 16 வயதில் முதல் நான் பொருளாதார ரீதியாக தன்னிச்சையாகவும், உறுதியாகவும் வாழ்ந்து வருகிறேன்.

என்னுடைய குடும்பம் இன்னும் துபாயில்தான் வசிக்கிறது. நாங்கள் 20 வருடங்களுக்கும் மேலாக துபாயில் இருக்கிறோம்.

திரையுலகில் கூட, நான் இதுவரை எந்த தயாரிப்பாளரிடமோ, இயக்குநரிடமோ, ஹீரோவிடமோ நடிப்பதற்கு பட வாய்ப்புகளை கேட்டதில்லை. நான் 20 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். அந்த வாய்ப்புகள்தான் என்னை கண்டுபிடித்தது. நான் எப்போதும் வேலை அல்லது பணத்திற்காக பேராசை கொண்டதில்லை.

என்னைப் பற்றி இதுவரை பேசப்பட்ட எந்தத் தகவலும் உண்மை இல்லை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். நாங்கள் 2002 ஆம் ஆண்டு முதல், துபாயில் வாடகை வீட்டில் வசிக்கிறோம்.

2013ம் ஆண்டு முதல் ரேசிங்தான் என்னுடைய ஆர்வமாக இருந்தது. சென்னையில் நடக்கும் பந்தயங்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நீங்கள் என்னை வெளிப்படுத்தும் அளவுக்கு நான் முக்கியமானவள் இல்லை. நான் மிகவும் சாதரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன்.

உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை போலவே வாழ்க்கையில் கடுமையான போராட்டங்களை சந்தித்து, இறுதியாக நான் மனரீதியாகவும், எமோஷனலாகவும் நல்ல இடத்தில் இருக்கிறேன். இதனை நான் தொடர விரும்புகிறேன்.

தவறான செய்தியை பரப்பியதற்காக, நான் சட்டரீதியாக எந்த வித முன்னெடுப்பை எடுக்கப்போவதில்லை. ஏனென்றால், பத்திரிகை துறையில் இன்னும் கொஞ்சம் மனிதாபிமானம் இருக்கிறது. இனி இது போன்ற தவறான தகவல்களை யாரும் பரப்ப மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

ஒரு குடும்பத்தின் நற்பெயரைக் கெடுக்கும் முன், நீங்கள் பெறும் தகவல்களைச் சரிபார்த்து, எங்கள் குடும்பத்தை இனி எந்தக் காயங்களுக்கும் ஆளாக்க வேண்டாம் என்று பத்திரிகையாளர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

எனக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.” என்று பதிவிட்டு இருக்கிறார்!

IPL_Entry_Point

டாபிக்ஸ்