Nithya Menen: 'விட்டா போதும் ஓடிடுவேன்.. சினிமா பிடிக்கல.. என்ன மீறி என்னவோ இருக்கு ' நித்யா மேனன் ஓபன்ஸ்
Nithya Menen: தனக்கு சினிமா பிடிக்காது. என்னை விட்டால் போதும் என்று அந்தத் துறையில் இருந்தே ஓடிவிடுவேன் என்று தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார்.
Nithya Menen: குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நித்யா மேனன், தமிழ், மலையாளம் போன்ற தென்னிந்திய படங்களில் நடித்து, அவர் நடிப்பு ராட்சசி என்ற பெயரை பெற்றுள்ளார்.
இவரது நடிப்புத் திறமைக்கு அங்கீகாரம் கொடுக்கும் விதமாக மத்திய அரசு அவருக்கு தேசிய விருதும் அளித்தது. இந்நிலையில், நித்யா மேனன், ஜெயம் ரவி நடிப்பில் உருவான காதலிக்க நேரமில்லை திரைப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக உள்ளது. இந்தப் படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கி உள்ளார்.
நம் கண்ணுக்கு வேறு எதுவும் தெரியாது
இந்நிலையில், நடிகை நித்யா மேனன், பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்திருந்தார். அந்தப் பேட்டியில் அவர் பல விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். அந்தப் பேட்டியில், " தனக்கு அரசியல் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால், கிருத்திகா உதயநிதியை பார்த்தால் ஒரு அரசியல்வாதி குடும்பத்தில் இருந்து வந்தவர் போல தெரியவில்லை. வீட்டை விட்டு வெளியில் வந்தால் அவருடைய அடையாளம் வெறும் கிருத்திகா என்பது மட்டும் தான்.
மன அழுத்தமா இருக்கு
நான் சின்ன வயசுல இருந்து நிறைய விஷயத்துக்காக கஷ்டப்பட்டுருக்கேன். ஒருவேளை அதுதான் என்னை இந்த இடத்துக்கு கூட்டிட்டு வந்ததா என்று தெரியல. நான் வீட்டுக்கு ஒரே பிள்ளை. அதுனால எப்போவும் தனியா இருக்க மாதிரி இருக்கும். அதுவே ஒரு வித மன அழுத்தத்த கொடுத்தது. ஆனா, சினிமாவுல நான் எந்த கஷ்டமும் படல. வாய்ப்புகள் கூட அதுவே தான் என்னைத் தேடி வந்தது.
எனக்கு சந்தோஷம் கிடைக்கல
எங்க வீட்ல அப்பா, அம்மா ரெண்டு பேருமே எனக்கு ரொம்ப சப்போர்ட்டா இருப்பாங்க. என்னோட எந்த முடிவுலயும் அவங்க தலையிட மாட்டாங்க. எனக்கு சொல்லப்போன சினிமா சுத்தமா பிடி்க்காது. இப்போ வரைக்குமே எனக்கு சினிமா பிடிக்காது. எனக்கு எல்லோரும் வாழுற சாதாரண வாழ்க்கைய வாழ ஆசை. ஆனா, நான் நடிகையா இருக்குறதால அந்த சந்தோஷம் எல்லாம் எனக்கு கிடைக்கவே இல்ல.
வேற யாருமே இல்ல
இத வெளிய கூட சொல்ல முடியல. அப்படி சொன்னா சினிமாவ நான் அசிங்கப்படுத்துற மாதிரி இருக்கும். இதெல்லாம் வெளிய சொன்னா என்னம்மா இப்படி சொல்றீங்க நீங்க இன்னும் நிறைய படம் நடிக்கனும்ன்னு சொல்லுவாங்க. ஆனா, எங்க அம்மாவோ அப்பாவோ, பிடிக்கல்னா விட்டுடுன்னு சொல்லுவாங்க. அவங்கள தவிர யாரும் இந்த வார்த்தைய சொன்னதே இல்ல.,
ஒருகட்டதுல நான் ஓகே பண்ண படத்த மட்டும் முடிச்சிட்டு வந்துட்டு இனிமே சினிமாவுல நடிக்கவே கூடாதுன்னு நெனச்சு ரெஸ்ட் எடுக்க இருந்தேன். அந்த சமயத்துல தான் தேசிய விருது கிடைச்சது. அதுனால அங்க இருந்து போக முடியாத நிலை வந்துடுச்சு.
எங்க அம்மாவோட வெறி
நான் சினிமாவுக்கு வர காரணம் ஒருவேள எங்க அம்மாவால இருக்கலாம், எங்க தாத்தா ரொம்ப ஸ்ட்ரிட். எங்க அம்மா தலை குனியாம தான் நடக்கனும். அப்படி கொஞ்சம் தலை நிமிந்திட்டாலும் முடிஞ்சது கதை. எங்க அம்மாவுக்கு டான்ஸ் ஆடுறதுன்னா ரொம்ப பிடிக்கும். எங்க தாத்தா 14 வயசுக்கு மேல அவங்கள டான்ஸ் ஆட விடல. அவங்க அந்த கோவத்துல அடுத்த ஜென்மத்துல நான் பெரிய டான்சரா வருவேன்னு சவால் எல்லாம் விட்டாங்க.
அதுனாலயே எங்க அம்மா என்ன டான்ஸ் கிளாஸ்க்கு எல்லாம் அனுப்புனாங்க. ஆனா, எனக்கு ஸ்டேஜ் மேல ஏற பயம். கேமரா முன்னாடி நிக்கவும் பயம். ஆனா, இப்போ நான் ஒரு பெரிய நடிகையா இருக்கேன்" என்றார்.