Nithya Menen: ஏன் அந்த முத்தம்.. மிஷ்கினின் மறுமுகத்தை வெளிப்படுத்திய நித்யா மேனன்.. சைக்கோ ஷுட்டிங்கில் நடந்த சம்பவம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nithya Menen: ஏன் அந்த முத்தம்.. மிஷ்கினின் மறுமுகத்தை வெளிப்படுத்திய நித்யா மேனன்.. சைக்கோ ஷுட்டிங்கில் நடந்த சம்பவம்

Nithya Menen: ஏன் அந்த முத்தம்.. மிஷ்கினின் மறுமுகத்தை வெளிப்படுத்திய நித்யா மேனன்.. சைக்கோ ஷுட்டிங்கில் நடந்த சம்பவம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 12, 2025 01:59 PM IST

காதலிக்க நேரமில்ல ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் கூடி இருக்க எல்லோர் முன்னிலையும் இயக்குநர் மிஷ்கினுக்கு அன்பு முத்தம் கொடுத்தார் நித்யா மேனன். இப்போது ஷுட்டிங்கின் போது அவரது வெளிப்படுத்திய மனிதாபமான மிக்க செயல் குறித்து வெளிப்படுத்தியுள்ளார்.

மிஷ்கினின் மறுமுகத்தை வெளிப்படுத்திய நித்யா மேனன்
மிஷ்கினின் மறுமுகத்தை வெளிப்படுத்திய நித்யா மேனன்

இதையடுத்து சினிமா விகடன் ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியின், சினிமாத்துறையில் நிலவி வரும் மனிதாபிமானம் இல்லாத செயல்கள் குறித்து பேசினார். ஆனால் இயக்குநர் மிஷ்கின் அதிலிருந்து எப்படி மாறுபட்டவராக இருக்கிறார் என்பதையும் வெளிப்படுத்தினார்.

திரையுலகில் நிலவும் மனிதாபிமானமற்ற செயல்

இதுகுறித்து நித்யா மேனன் கூறியதாவது, " திரைத்துறையில் பொதுவாகவே சிறிதளவு மனிதாபிமானமற்ற செயல்கள் நடக்கும். உங்கள் உடல்நிலை சரியாக இருக்கிறதோ இல்லையோ, எவ்வளவு கடினமான விஷயமாக இருந்தாலும்

ஷுட்டிங்குக்கு வந்துவிட்டால் நீங்கள் ஏதாவது கண்டிப்பாக செய்து விட்டு செல்ல வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். ஆனால், மிஷ்கனின் சைக்கோ படத்தில் நடித்தபோது எனக்கு முற்றிலும் மாறுபட்ட அனுபவம் கிடைத்தது.

என் வலியை புரிந்து கொண்டார்

படப்பிடிப்பின் போது மாதவிடாய் வலி ஏற்பட்டது. அது முதல் நாள் என்பதால் வலி அதிகமாக இருந்தது. இதுபற்றி முதல் முறையாக ஆண் இயக்குநரான மிஷ்கினிடம் தெரிவித்தேன். அப்போது அவர் என்னிடம் முதல் நாளில் இருக்கிறீர்களா என அக்கறையுடன் கேட்டார்.

அப்போதுதான், அவர் எனது வலியை புரிந்து கொண்டதாகவும், மிகவும் இரக்கமுள்ளவராகவும் அவரை உணர்ந்தேன். நீங்கள் வேண்டுமானால் இந்த காட்சியை மட்டும் முடித்துவிட்டு ரெஸ்ட் எடுங்கள் என சொன்னார்" என்றார்.

இந்த பேட்டியில் இயக்குநர் மிஷ்கினும் கலந்து கொண்ட நிலையில், நித்யா மேனன் பேசியதற்கு பின்னர் குறுக்கிட்டு, "அன்று நித்யா அசௌகரியமாக உணர்ந்தார். அவர் விரும்பாத ஒன்றைச் செய்வதை நான் விரும்பவில்லை, எனவே அவர் நன்றாக உணரும்போதே இந்த முயற்சியை மேற்கொள்ளலாம் என நினைத்தேன்" என்று கூறினார்.

மிஷ்கின் இயக்கிய சைக்கோ படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் நித்யா மேனன், ஐபிஎஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருப்பார்.

நித்யா மேனன் படங்கள்

நித்யா மேனன் நடிப்பில் இந்த ஆண்டில் வரிசை கட்டி படங்கள் வெளியாக இருக்கின்றன. பொங்கல் ரிலீஸாக காதலிக்க நேரமில்லை வரவிருக்கும் நிலையில் தனுஷுடன் இணைந்து இட்லி கடை படத்தில் நடித்து வருகிறார். டியர் எக்ஸஸ் என்ற பெயரில் உருவாகும் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார்.

அதேபோல் மிஷ்கின் இயக்கத்தில் உருவான பிசாசு 2 படத்திலும் நடித்துள்ளார். அத்துடன் விஜய் சேதுபதியுடன் இணைந்து ட்ரெயின் என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

சினிமா பிடிக்கல, விட்டா ஓடிடுவேன்

சமீபத்தில் நித்யா மேனன் அளித்த பேட்டியில் தனக்கு சினிமா பிடிக்கவில்லை என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, "நான் சின்ன வயசுல இருந்து நிறைய விஷயத்துக்காக கஷ்டப்பட்டுருக்கேன். ஒருவேளை அதுதான் என்னை இந்த இடத்துக்கு கூட்டிட்டு வந்ததா என்று தெரியல. நான் வீட்டுக்கு ஒரே பிள்ளை. அதுனால எப்போவும் தனியா இருக்க மாதிரி இருக்கும். அதுவே ஒரு வித மன அழுத்தத்த கொடுத்தது. ஆனா, சினிமாவுல நான் எந்த கஷ்டமும் படல. வாய்ப்புகள் கூட அதுவே தான் என்னைத் தேடி வந்தது.

எங்க வீட்ல அப்பா, அம்மா ரெண்டு பேருமே எனக்கு ரொம்ப சப்போர்ட்டா இருப்பாங்க. என்னோட எந்த முடிவுலயும் அவங்க தலையிட மாட்டாங்க. எனக்கு சொல்லப்போன சினிமா சுத்தமா பிடி்க்காது. இப்போ வரைக்குமே எனக்கு சினிமா பிடிக்காது. எனக்கு எல்லோரும் வாழுற சாதாரண வாழ்க்கைய வாழ ஆசை. ஆனா, நான் நடிகையா இருக்குறதால அந்த சந்தோஷம் எல்லாம் எனக்கு கிடைக்கவே இல்ல.

இத வெளிய கூட சொல்ல முடியல. அப்படி சொன்னா சினிமாவ நான் அசிங்கப்படுத்துற மாதிரி இருக்கும். இதெல்லாம் வெளிய சொன்னா என்னம்மா இப்படி சொல்றீங்க நீங்க இன்னும் நிறைய படம் நடிக்கனும்ன்னு சொல்லுவாங்க. ஆனா, எங்க அம்மாவோ அப்பாவோ, பிடிக்கல்னா விட்டுடுன்னு சொல்லுவாங்க. அவங்கள தவிர யாரும் இந்த வார்த்தைய சொன்னதே இல்ல.,

ஒருகட்டதுல நான் ஓகே பண்ண படத்த மட்டும் முடிச்சிட்டு வந்துட்டு இனிமே சினிமாவுல நடிக்கவே கூடாதுன்னு நெனச்சு ரெஸ்ட் எடுக்க இருந்தேன். அந்த சமயத்துல தான் தேசிய விருது கிடைச்சது. அதுனால அங்க இருந்து போக முடியாத நிலை வந்துடுச்சு.

எனக்கு ஸ்டேஜ் மேல ஏற பயம். கேமரா முன்னாடி நிக்கவும் பயம். ஆனா, இப்போ நான் ஒரு பெரிய நடிகையா இருக்கேன்" என்றார்

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.