Ninaithen Vandhai : ‘கனவில் காதலி! நேரில் கண்டாரா காதலன்’ வெள்ளி விழா ஆண்டை பூர்த்தி செய்த நினைத்தேன் வந்தாய்!
Ninaithen Vandhai : காதல்தான் படத்தின் கருப்பொருள். மூன்று பேருக்குள் நடக்கும் காதல். விஜய் கனவில் ஒரு பெண்ணின் இடுப்பில் உள்ள மச்சத்தை பார்த்துவிட்டு, அந்தப்பெண்ணை தேடி அலைவார். ஆனால் அவரது தந்தையோ அவருக்கும், தேவயானிக்கும் திருமணம் நிச்சயம் செய்துவிடுவார்.
முக்கிய கதாபாத்திரத்தில் விஜய், விஜயின் ஆரம்ப காலங்களில் அவருக்கு கைகொடுத்த படங்களுள் ஒன்று. தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனாதால் படமும் ஹிட். விஜயின் கெரியர் கிராஃப் ஏறுமுகத்தில் செல்வதற்கு தேவாவின் இசையும் முக்கிய காரணம். அந்த வகையில் இந்தப்படத்தின் பாடல்களும் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்த பாடல்கள்.
காதல்தான் படத்தின் கருப்பொருள். மூன்று பேருக்குள் நடக்கும் காதல். விஜய் கனவில் ஒரு பெண்ணின் இடுப்பில் உள்ள மச்சத்தை பார்த்துவிட்டு, அந்தப்பெண்ணை தேடி அலைவார். ஆனால் அவரது தந்தையோ அவருக்கும், தேவயானிக்கும் திருமணம் நிச்சயம் செய்துவிடுவார்.
திருமணத்தில் விருப்பமில்லை என்பதை சொல்வதற்காக விஜய் ஒவ்வொரு முறை தேவயானி வீட்டுக்கு வரும்போதும், அவர் தன்னைத்தான் பார்க்க வருவதாக எண்ணி தேவயானி கற்பனைகளை வளர்த்துக்கொண்டு விஜயை காதலிக்கத் துவங்குவார்.
இதற்கிடையில் விஜய், ஒரு நிகழ்ச்சியில் வைத்து, தன் கனவில் வரும் பெண்ணை கண்டுபிடித்துவிடுவார். அந்த கதாபாத்திரத்தில் ரம்பா நடித்துவிடுவார். ஆனால், அந்தப்பெண்ணிடம் விஜய் தனது கனவு குறித்து கூறுவதற்கு முன் அவர் சென்றுவிடுவார்.
இந்நிலையில் விஜய் இசை கற்றுக்கொடுக்கும் இடத்தில் அந்தப்பெண் மாணவியாக இருப்பார். இதனால் விஜய் கூடுதல் மகிழ்ச்சியடைந்துவிடுவார். தேடி அலைந்த பெண் தன் கண் முன்னே இருக்கும்போது, பேசிப் பழகி இருவரும் காதலிக்கத் துவங்கிவிடுவார்கள்.
இந்நிலையில், படத்தின் முக்கிய திருப்புமுனையாக தேவயானியும், ரம்பாவும் சகோதரிகளாக இருப்பார்கள். இருவரும் காதலிப்பது ஒருவரைத்தான் என்பது தெரியாமலே தங்களின் காதலன் குறித்து இருவரும் பேசி மகிழ்வார்கள். இந்நிலையில் திருமண நாளும் நெருங்கிவிடும். விஜயும் திருமணத்தை நிறுத்த பல்வேறு வழிகளில் முயற்சி செய்வார்.
ஆனால் முடியாமல் போய்விடும். ஒரு கட்டத்தில் ரம்பாவுக்கு, தனது சகோதரிக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டவர்தான், தனது காதலர் என்பது தெரியவர நொறுங்கிவிடுவார். இந்நிலையில் விஜயை யார் திருமணம் செய்வார்கள் என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.
படம் மியூசிக்கல் ஹிட் என்று கூறப்படும் அளவுக்கு, ‘உனை நினைத்து நான் எனை மறப்பது அதுதான் அன்பே காதல், வண்ண நிலவே, என்னவளே என்னவளே, மல்லிகையே, உன் மார்பில் விழிமூடி தூங்குகிறேன், பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா என பாடல்கள் அனைத்துமே படு ஹிட்.
படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் தவிர நகைச்சுவைக்கு சார்லி, மணிவண்ணன், செந்தில், ஆர்.சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடித்திருப்பார்கள். குணச்சித்தர வேடத்தில் வினுசக்ரவர்த்தி, மலேசியா வாசுதேவன், வில்லனான ரஞ்சித், ரம்பாவை ஒரு தலையான காதலித்து துரத்தும் கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார். நல்ல ஒரு விறுவிறுப்பான, திருப்புமுனைகள் நிறைந்த காதல் படமாக இருந்ததால் இந்தப்படம் ஹிட்டானது.
இந்தப்படம் பெல்லி சன்டாடி என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும். படத்தை செல்வபாரதி இயக்கியிருப்பார். இதன் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த். இந்தப்படம் 1998ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆனது. நல்ல பொழுதுபோக்கான குடும்ப படமாக அமைந்த இந்தப்படத்தை செய்தி பத்திரிக்கைகளும் பாராட்டின.
என்றென்றும் காதல், மின்சார கண்ணா என தொடர்ந்து ரம்பா விஜயுடன் நடித்து வந்த காலத்தில் இந்தப்படத்திலும் விஜயுடன் ஜோடியாக நடித்தார். 90களில் விஜய் – சிம்ரன் ஜோடிக்கு இருந்த அளவுக்கு வரவேற்பு விஜய் – ரம்பா ஜோடிக்கும் இருந்தது. 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்தப்படம் குறித்து ஒரு சிறிய நினைவை ஹெச்.டி தமிழ் அப்படம் வெளியான இந்த நாளில் பகிர்ந்துகொள்கிறது.