Nilavuku Enmel Ennadi Kobam OTT: தனுஷ் இயக்கிய நிவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nilavuku Enmel Ennadi Kobam Ott: தனுஷ் இயக்கிய நிவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

Nilavuku Enmel Ennadi Kobam OTT: தனுஷ் இயக்கிய நிவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

Malavica Natarajan HT Tamil
Published Mar 16, 2025 01:39 PM IST

Nilavuku Enmel Ennadi Kobam OTT: தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது.

Nilavuku Enmel Ennadi Kobam OTT: தனுஷ் இயக்கிய நிவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?
Nilavuku Enmel Ennadi Kobam OTT: தனுஷ் இயக்கிய நிவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்

இதையடுத்து, அவர் தனது சகோதரி மகன் பவிஷ் நாராயணனை நாயகனாக வைத்து இயக்கிய திரைப்படம் தான் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ (NEEK) திரைப்பம். கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியான இந்த காதல் காமெடி படம் மக்களிடம் கலவையாண வரவேற்பைப் பெற்றது. இதே படம் தெலுங்கில் ‘ஜாபிலம்மா நீக்கு அந்த கோபமா’ என்ற பெயரில் இந்தப் படம் வெளியானது.

இந்த வாரமே ஸ்ட்ரீமிங்

தற்போது படம் ஓடிடி ஸ்ட்ரீமிங்கிற்குத் தயாராக உள்ளது. ‘நீக்’ படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமங்களை அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி பெற்றுள்ளது. இந்தப் படம் வரும் மார்ச் 21 ஆம் தேதி பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங்கிற்கு வர உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்த சமயத்தில் இன்னும் இரண்டு நாட்களில் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பு வர வாய்ப்புள்ளது எனத் தகவல் வெளியாகி வருகிறது.

அமேசானுடன் ஒப்பந்தம்

‘நீக்’ படம் திரையரங்குகளில் வெளியான நான்கு வாரங்களுக்குப் பிறகு ஸ்ட்ரீமிங்கிற்கு வரும்படி அமேசான் பிரைம் வீடியோ ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிகிறது. அதனால்தான் மார்ச் 21 ஆம் தேதி ஸ்ட்ரீமிங்கைத் திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அன்றுதான் இந்தப் படம் ஸ்ட்ரீமிங்கிற்கு வரும் வாய்ப்புள்ளது. தெலுங்கு பதிப்பான ‘ஜாபிலம்மா நீக்கு அந்த கோபமா’வும் தமிழ் பதிப்புடன் சேர்ந்துதான் வெளியாக உள்ளது.

‘நீக்’ படத்தில் பவிஷ்ஷிற்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்துள்ளார். பிரியா ப்ரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், சரத் குமார், ரபியா காதூன், ரம்யா ரங்கநாதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை தனுஷ் காதல் காமெடியாக இயக்கியுள்ளார். காதல், காதலில் பிரிவு, பழைய காதல் போன்ற கருப்பொருளில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

நீக் வசூல்

‘நீக்’ படம் சுமார் 15 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சுமார் 16 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததுடன், தொடக்கமும் நன்றாக இருந்தது. ஆனால் அதன் பிறகு வசூலில் சரிவு ஏற்பட்டது. ‘டிராகன்’ படம் போட்டியில் இருந்ததால் ‘நீக்’ படத்தின் மீது அதிக தாக்கம் ஏற்பட்டது.

‘நீக்’ படத்தை வொண்டர்பார் பிலிம்ஸ், ஆர்.கே. புரொடக்‌ஷன்ஸ் ஆகிய பேனரின் கீழ் தனுஷ், கஸ்தூரி ராஜா, விஜயலட்சுமி கஸ்தூரி ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

தனுஷின் அடுத்த படங்கள்

தனுஷ் தற்போது ‘இட்லி கடை’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அவரே இயக்குகிறார். ஷேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரா’ படத்திலும் தனுஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் நாகார்ஜுனா, ரஷ்மிகா மந்தனா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பாலிவுட்டில் ‘தேரே இஷ்க் மெயின்’ படமும் தனுஷ் பட வரிசையில் உள்ளது. இளையராஜா பயோபிக் படத்திலும் நடிக்க உள்ளார். இப்படி தொடர்ச்சியான படங்களில் நடித்து வருவதால் அவர் மிகவும் பிஸியாக உள்ளார்.