பட்ஜெட் படங்களின் பிரதான நாயகி.. கைகொடுத்த விளம்பரம்.. ஆதியுடன் சூட்டிங்கில் ரொமான்ஸ்.. நிக்கி கல்ராணியின் காதல் கதை
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பட்ஜெட் படங்களின் பிரதான நாயகி.. கைகொடுத்த விளம்பரம்.. ஆதியுடன் சூட்டிங்கில் ரொமான்ஸ்.. நிக்கி கல்ராணியின் காதல் கதை

பட்ஜெட் படங்களின் பிரதான நாயகி.. கைகொடுத்த விளம்பரம்.. ஆதியுடன் சூட்டிங்கில் ரொமான்ஸ்.. நிக்கி கல்ராணியின் காதல் கதை

Marimuthu M HT Tamil Published Jan 03, 2025 06:23 AM IST
Marimuthu M HT Tamil
Published Jan 03, 2025 06:23 AM IST

பட்ஜெட் படங்களின் பிரதான நாயகி.. கைகொடுத்த விளம்பரம்.. ஆதியுடன் சூட்டிங்கில் ரொமான்ஸ்.. நிக்கி கல்ராணியின் காதல் கதையை, அவரது பிறந்த நாளான இன்று பார்ப்போம்.

பட்ஜெட் படங்களின் பிரதான நாயகி.. கைகொடுத்த விளம்பரம்.. ஆதியுடன் சூட்டிங்கில் ரொமான்ஸ்.. நிக்கி கல்ராணியின் காதல் கதை
பட்ஜெட் படங்களின் பிரதான நாயகி.. கைகொடுத்த விளம்பரம்.. ஆதியுடன் சூட்டிங்கில் ரொமான்ஸ்.. நிக்கி கல்ராணியின் காதல் கதை

யார் இந்த நிக்கி கல்ராணி?: சிந்தி குடும்பத்தைச் சேர்ந்த மனோகர் மற்றும் ரேஷ்மா தம்பதியரின் இளையமகளாக ஜனவரி 3,1992ஆம் ஆண்டில் பெங்களூருவில் பிறந்தவர், நிக்கி கல்ராணி. இவரது அக்காவின் பெயர் சஞ்சனா கல்ராணி.

நிக்கி கல்ராணி தனது பள்ளிப்படிப்பை பெங்களூருவில் இருக்கும் பிஷப் காட்டன் பள்ளியிலும், கல்லூரியில் பேஷன் டிசைனிங் எடுத்து படிப்பினை முடித்துள்ளார். பின்னர், நிறைய விளம்பரங்களில் மாடலாக இருந்த அவர் 2014ஆம் ஆண்டு திரைத்துறைக்குள் வந்தார்.

நிக்கி கல்ராணியின் திரைப்பயணம்:

2014ஆம் ஆண்டு, நிக்கி கல்ராணி முதன்முதலாக 1983 என்கிற மலையாளப்படத்தில் நிவின் பாலியுடன் நடித்தார். பின், அஜித் என்னும் கன்னட படத்தில் நடித்தார். இவர் நடிப்பில் 2012ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த முதல் திரைப்படம், டார்லிங். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடிபோட்டு நடித்தார். இப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.

நிக்கி கல்ராணி 2016ஆம் ஆண்டு, தமிழில் சிறந்த அறிமுக நடிகைக்கான எடிசன் விருதினை, டார்லிங் படத்தில் நடித்ததற்காக வென்றார்.

அதன்பின் தான் முதன்முதலில் தமிழில் நடிக்கத்தொடங்கிய, யாகவராயினும் நா காக்க படம் நிக்கி கல்ராணிக்கு பெயர் சொல்லும் வகையில் ரிலீஸானது. அதன்பின் கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்டை சிவா கெட்ட சிவா, மரகத நாணயம், கலகலப்பு 2, பக்கா, சார்லி சாப்ளின் 2, ராஜவம்சம், இடியட், விர்ருன்னு ஆகிய முக்கியப் படங்களில் நடித்தார். தவிர மலையாளம், கன்னடம் படங்களிலும் பிஸியாக இடைவிடாது நடித்து வந்தார், நிக்கி கல்ராணி.

நிக்கி கல்ராணியின் காதலும் கைகூடிய திருமணமும்:

நிக்கி கல்ராணி தான் முதன்முதலாக தமிழில் அறிமுகமாக நடித்த படம், யாகவராயினும் நா காக்க(ஆனால், டார்லிங் திரைப்படம் முதலில் ரிலீஸானது). இப்படத்தில் உடன் நடித்த ஆதியும் நிக்கியும் ஆரம்பத்தில் நெருங்கிப் பழகி வந்தனர். இப்படம் ரிலீஸான 2015ஆம் ஆண்டே இருவரும் ஒருவர் மேல் ஒருவர் காதலில் விழுந்துள்ளனர்.

பின்னர், இந்த ஜோடி மரகத நாணயம் திரைப்படத்திலும் மீண்டும் ஜோடி சேர்ந்தது. இருவருக்கும் இடையில் ஒரிஜினல் காதல் இருந்ததாலோ என்னவோ, இப்படத்தில் நடித்த காட்சிகள் ஆகட்டும் இப்படத்தில் இடம்பெற்ற ‘நீ கவிதைகளா’ என்னும் பாடலின் மேக்கிங் ஆகட்டும் இரண்டிலும் அனைத்திலும் காதல் நிரம்பி வழிந்தது. பின் இருவரும் 2022ஆம் ஆண்டு, மே 18ஆம் தேதி திருமணம் செய்துகொண்டு, சென்னையில் வசித்து வருகின்றனர். தற்போதும் நிக்கி கல்ராணி தொடர்ந்து விளம்பரம் மற்றும் மாடலிங்கில் பிஸியாக இருக்கிறார்.

நிக்கி கல்ராணி தமிழில் இயக்குநர்களின் நடிகையாகவும், குறைந்த பட்ஜெட்டில் நடிக்கும் நடிகையாகவும் இருப்பதால் இன்னும் இவருக்கு தமிழ் சினிமாவில் மவுசு இருந்து வருகிறது.

இப்படி எப்போதும் மவுசுடன் இருக்கும் நடிகை நிக்கி கல்ராணி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கூறுவதில் பெருமிதம் அடைகிறது இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!