Santhanam: மதகஜராஜா கொடுத்த மாஸ் வெற்றி.. மல்லுக்கட்ட தயாரான சந்தானம்.. ரீலிஸ் மாதத்துடன் வெளியான போஸ்டர்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Santhanam: மதகஜராஜா கொடுத்த மாஸ் வெற்றி.. மல்லுக்கட்ட தயாரான சந்தானம்.. ரீலிஸ் மாதத்துடன் வெளியான போஸ்டர்!

Santhanam: மதகஜராஜா கொடுத்த மாஸ் வெற்றி.. மல்லுக்கட்ட தயாரான சந்தானம்.. ரீலிஸ் மாதத்துடன் வெளியான போஸ்டர்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 21, 2025 03:13 PM IST

Santhanam: படம் பார்த்த பலரும் சந்தானம் தேவையில்லாமல் ஹீரோவாக நடித்து வருகிறார். மதகதராஜா படங்களில் நகைச்சுவை கேரக்டரில் நடித்தது போல, அவர் மீண்டும் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

Santhanam: மதகஜராஜா கொடுத்த மாஸ் வெற்றி.. மல்லுக்கட்ட தயாரான சந்தானம்.. ரீலிஸ் மாதத்துடன் வெளியான போஸ்டர்!
Santhanam: மதகஜராஜா கொடுத்த மாஸ் வெற்றி.. மல்லுக்கட்ட தயாரான சந்தானம்.. ரீலிஸ் மாதத்துடன் வெளியான போஸ்டர்!
டிடி நெக்ஸ் லெவல்
டிடி நெக்ஸ் லெவல்

திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் பிரேம் ஆனந்த், "'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்போடு பெரும் வெற்றி பெற்றது. அதன் அடுத்த பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை ஒரு வருடமாக தொடர்ந்து செய்து முடித்தோம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிரித்து, ரசித்து மகிழும் திரைப்படமாக இதுவும் இருக்கும்," என்றார்.

அதிக பொருட்செலவில்

தொடர்ந்து பேசிய அவர், "மிக அதிக பொருட்செலவில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் கதை ஒரு சொகுசு கப்பலில் தொடங்கி, தீவு ஒன்றில் நடைபெறும் வகையில் அமைந்துள்ளது. இதற்காக பிரம்மாண்ட பட்ஜெட்டில் அரங்கங்களை அமைத்தோம்.

இப்படத்தை தயாரிப்பதற்காக நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், நடிகர் ஆர்யா மற்றும் சந்தானம் இணைந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தை விட அதிக குதூகலத்தையும் உற்சாகத்தையும் ரசிகர்களுக்கு இப்படம் வழங்கும்," என்று கூறினார்.

'டிடி நெக்ஸ்ட் லெவல்'

சந்தானம் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் அடுத்த பாகமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' முதல் பார்வை சந்தானத்தின் பிறந்த நாளான இன்று வெளியிடப்பட்டு இருக்கிறது.

ஆர்யா வழங்க சந்தானம் நாயகனாக நடிக்கிறார்.

நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் மற்றும் தி ஷோ பீப்பிள் நிறுவனங்கள் பிரமாண்ட பட்ஜெட்டில் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை, நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நாயகனாக நடிக்கிறார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மே மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த், 'டிடி நெக்ஸ்ட் லெவெல்' திரைப்படத்தையும் இயக்குகிறார். முக்கிய வேடங்களில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்ற‌னர்.

'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் ஒளிப்பதிவை தீபக் குமார் பதி கையாள, ஆஃப்ரோ இசையமைக்கிறார். பரத் படத்தொகுப்புக்கும் ஏ ஆர் மோகன் கலை இயக்கத்திற்கும் பொறுப்பேற்றுள்ளனர்.

மதகஜராஜா கொடுத்த மாஸ் வெற்றி

விஷால், சந்தானம் இணைந்த மதகஜராஜா திரைப்படம் கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பிறகு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியானது. பொங்கல் பண்டிகை என்பதால், புதிய திரைப்படங்கள் பல வெளியான; ஆனாலும், சந்தானத்தின் காமெடி சரவெடியால் மதகஜராஜா திரைப்படம் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. வசூலிலும் சக்கை போடு போட்டு வருகிறது. 

படம் பார்த்த பலரும் சந்தானம் தேவையில்லாமல் ஹீரோவாக நடித்து வருகிறார். மதகதராஜா படங்களில் நகைச்சுவை கேரக்டரில் நடித்தது போல, அவர் மீண்டும் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். மதகஜராஜா திரைப்படத்தை பிரபல இயக்குநர் சுந்தர் சி இயக்கி இருக்கிறார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.