Nifya Furniture Mohammed: ‘நிஃப்யா பர்னிச்சர்ல பாத்தீங்கன்னா..’ - LIC - செட்டில் அலப்பறை கிளப்பிய முகமது!
அங்குள்ள ஒவ்வொருவரையும் முகமது சோஃபாவாக பாவித்து பேசி வீடியோ ஒன்றை பேசி இருக்கிறார்.
இன்ஸ்டாவில் தன்னுடைய சோஃபா கடையான நிஃப்யா பர்னிச்சரை பிரபலபடுத்தும் வகையில் சிறுவன் முகமது பேசிய வீடியோக்கள் இணையத்தில் வைரல் ரகத்தை சேர்ந்தவை. இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் எல்.ஐ.சி படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு திருமூர்த்தி அணை அருகில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் எல்.ஐ.சி படக்குழுவை பிரபலப்படுத்தும் வகையில் அங்குள்ள ஒவ்வொருவரையும் முகமது சோஃபாவாக பாவித்து பேசி வீடியோ ஒன்றை பேசி இருக்கிறார். இந்த வீடியோவை விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
முன்னதாக, அஜித்தின் 62 வது படத்தில் இயக்குநராக கமிட் ஆன விக்னேஷ் சிவன், தயாரிப்பு தரப்பிடம் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக, அந்த படத்தில் இருந்து விலகினார். இந்த நிலையில், இவர் லவ் டுடே புகழ் பிரதீப்புடன் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து விக்னேஷ் சிவன் வீடியோ வெளியிட்டு அந்த தகவலை உறுதிபடுத்தினார்.
எல்.ஐ.சி.' (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி கமிட் செய்யப்பட்டு இருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்.
பிரபல இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘மகான்’, ‘லியோ’ உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த லலித் குமார் இந்தப்படத்தை தயாரிக்கிறார். இந்தப்படத்தின் தலைப்பை இயக்குநர் எஸ்.எஸ். குமரன் முன்னதாகவே பதிவு செய்திருந்ததாகவும், தன்னுடைய அனுமதி இல்லாமல் விக்னேஷ் சிவன் பயன்படுத்தி இருப்பதாகவும் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்