Nidhhi Agerwal: விடாமல் டார்ச்சர்.. கொலைமிரட்டல்..பொங்கி எழுந்த நிதி அகர்வால் போலீசில் புகார் - நடந்தது என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nidhhi Agerwal: விடாமல் டார்ச்சர்.. கொலைமிரட்டல்..பொங்கி எழுந்த நிதி அகர்வால் போலீசில் புகார் - நடந்தது என்ன?

Nidhhi Agerwal: விடாமல் டார்ச்சர்.. கொலைமிரட்டல்..பொங்கி எழுந்த நிதி அகர்வால் போலீசில் புகார் - நடந்தது என்ன?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 09, 2025 02:31 PM IST

Nidhhi Agerwal: சமூக வலைத்தளங்களில் விடாமல் பின் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வரும் நபர் மீது சைபர் க்ரைம் போலீசிடம் நடிகை நிதி அகர்வால் புகார் அளித்துள்ளார். அந்த நபரால் மனஅழுதத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

விடாமல் டார்ச்சர்.. கொலைமிரட்டல்..பொங்கி எழுந்த நிதி அகர்வால் போலீசில் புகார் - நடந்தது என்ன?
விடாமல் டார்ச்சர்.. கொலைமிரட்டல்..பொங்கி எழுந்த நிதி அகர்வால் போலீசில் புகார் - நடந்தது என்ன?

தொடர் மிரட்டலால் மனஅழுத்தம்

இதுதொடர்பாக நடிகை நிதி அகர்வால் அளித்துள்ள புகாரில், சமூக வலைத்தளங்கள் தொடர்ந்து தன்னை ஒருவர் மிரட்டி வருகிறார். அவர் தன்னையும், குடும்பத்தினரையும் குறிவைத்து தொடர்ந்து மிரட்டல் விடுக்கிறார். இதன் காரணமாக தான் மிகுந்த மனஅழுத்தத்தில் இருக்கிறேன். எனவே சம்மந்தப்பட்ட நபர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் துன்புறுத்தல்

இந்த புகாரின் பேரில் ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் வன்கொடுமை, கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் போன்ற பிரிவுகளில் நடிகை நிதி அகர்வால் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரையடுத்து சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். அவற்றில் எந்தவொரு தகாத அல்லது அச்சுறுத்தும் நடத்தையை சந்திக்க நேரிட்டால் உடனடியாக போலீசிடம் புகாரளிக்கவும் அவர் நடிகை நிதி அகர்வால் வலியுறுத்தியுள்ளார்.

நிதி அகர்வால் படங்கள்

ஹைதராபாத்தை சேர்ந்த நிதி அகர்வால் மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்துள்ளார். பாலிவுட் சினிமாவான முன்னா மைக்கேல் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து சவ்யசாச்சி என்ற படம் மூலம் தெலுங்கு சினிமாவுக்கு வந்தார்.

தமிழில் சிம்பு ஜோடியாக ஈஸ்வரன் படத்தில் நடித்த இவர், ஜெயம் ரவியுடன் பூமி, உதயநிதியுடன் கலக தலைவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ஹரி ஹர வீர மல்லு: பார்ட் 1 - ஸ்வார்டு vs ஸ்பிரிட் படத்தில் நடித்து முடித்திருக்கும் நிதி அகர்வால், தி ராஜா சாப் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சிம்புவுடன் திருமண வதந்தி

காதல் கிசு கிசுக்களில் சிக்கிய நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் நிதி அகர்வால், கோலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோவான சிம்புவை காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. சிம்புவுடன் அவர் லிவிங் டூ கெதரில் இருப்பதாகவும் வதந்திகள் பரவின.

இந்த விவகாரத்தில் மெளனம் காத்து வந்த நிதி அகர்வால் பின்னர், "நம்மை பற்றி எப்போதும் ஏதாவது எழுதப்பட்டு கொண்டே தான் இருக்கும். அதில், உண்மையும் இருக்கலாம், சில விஷயங்கள் உண்மைக்கு மாறனவையாகவும் இருக்கலாம்.

எது உண்மை, எது உண்மை இல்லை என்பது நம் பெற்றோருக்கு தெரிந்தால் போதும். மக்கள் பேசுவதெல்லாம் பள்ளியில் நிகழ்த்தப்படும் நாடகம் போன்றவைதான்" என கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

நிதி அகர்வாலுக்கு கோயில்

தமிழில் மூன்றே படங்களில் நடித்திருந்தாலும், தனக்காக கோயில் கட்டும் அளவுக்கு ரசிகர்களை சம்பாதித்துள்ளார் நிதி அகர்வால். காதலர் தின பரிசாக அவரது ரசிகர்கள் சென்னையில் நிதி அகர்வாலுக்கு கோயில் கட்டி, சிலை வைத்து அதற்கு அபிஷேகம் செய்து ஆரத்தி எடுத்து கும்பிட்டுள்ளனர்.

இதுபற்றி கேள்விப்பட்டு அறிக்கை வெளியிட்ட நிதி அகர்வால், "ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் உண்மையான மற்றும் நிபந்தனையற்ற அன்பை கண்டு மிகவும் நெகிழ்ந்து போயுள்ளேன். எப்போதும் அவர்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர்.

எனது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் நிறைய உதவிகளை செய்து வருகின்றனர் என்பது பாராட்டக்கூரிய விஷயம். மேலும் எனக்காக கட்டியுள்ள கோயிலை, ஏழைகள் தங்க, உணவளிக்க, கல்விக் கூடமாக பயன்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.