Nicholai Sachdev: ‘சாப்பாடு.. தண்ணி.. பொண்டாட்டி..வரலட்சுமி பெயர் பின்னால் என்னுடைய பெயர் இருக்காது’ - நிக்கோலாய்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nicholai Sachdev: ‘சாப்பாடு.. தண்ணி.. பொண்டாட்டி..வரலட்சுமி பெயர் பின்னால் என்னுடைய பெயர் இருக்காது’ - நிக்கோலாய்

Nicholai Sachdev: ‘சாப்பாடு.. தண்ணி.. பொண்டாட்டி..வரலட்சுமி பெயர் பின்னால் என்னுடைய பெயர் இருக்காது’ - நிக்கோலாய்

Kalyani Pandiyan S HT Tamil
Jul 15, 2024 03:06 PM IST

Nicholai Sachdev: சென்னைதான் என்னுடைய வீடு.. வரலட்சுமி திருமணத்திற்கு பின்னர் அவருடைய பெயரை மாற்ற வேண்டும் என்று நினைத்தார். கண்டிப்பாக அவரது பேரின் நடுவில் இருக்கும் சரத்குமார் என்ற பெயரை நீக்க மாட்டார் என்பது தெரியும். - நிக்கோலாய்

Nicholai Sachdev: ‘சாப்பாடு.. தண்ணி.. பொண்டாட்டி..வரலட்சுமி பெயர் பின்னால் என்னுடைய பெயர் இருக்காது’ - நிக்கோலாய்
Nicholai Sachdev: ‘சாப்பாடு.. தண்ணி.. பொண்டாட்டி..வரலட்சுமி பெயர் பின்னால் என்னுடைய பெயர் இருக்காது’ - நிக்கோலாய்

தமிழை வேகமாக கற்றுக்கொள்கிறேன் 

நிகழ்ச்சியில், நிக்கோலாய் சச்தேவ் பேசும் போது, “ வணக்கம்.. மன்னித்துக்கொள்ளுங்கள்.. என்னால் சரளமாக தமிழில் பேச முடியாது. ஆனால், முடிந்த வரை தமிழை வேகமாக கற்றுக்கொள்கிறேன். எனக்கு தமிழில் தெரிந்தது.. சாப்பாடு, தண்ணீர், பொண்டாட்டி... நான் சீக்கிரமாகவே தமிழை கற்றுக்கொள்ள முயற்சி செய்கிறேன். காரணம் நீங்கள் அனைவரும் என்னுடைய மக்களாகி விட்டீர்கள். மும்பை என்னுடைய வீடு கிடையாது. 

சென்னைதான் என்னுடைய வீடு.. வரலட்சுமி திருமணத்திற்கு பின்னர் அவருடைய பெயரை மாற்ற வேண்டும் என்று நினைத்தார்.  கண்டிப்பாக அவரது பேரின் நடுவில் இருக்கும் சரத்குமார் என்ற பெயரை நீக்க மாட்டார் என்பது தெரியும். ஆனால், அதனுடன் என்னுடைய பெயரில் இருந்து சச்தேவ் என்பதை வைக்க வேண்டும் என்று சொன்னார். ஆனால் எனக்கு அது வேண்டாம். 

என்னுடைய பெயரை அவரது பெயருடன் சேர்க்க வேண்டாம் 

அவர் வரலட்சுமி சரத்குமார் என்ற பெயரிலேயே அழைக்கப்படுவார். நான் அவரது பெயரை என்னுடைய பெயருடன் சேர்த்துக்கொள்கிறேன். அதன்படி, என்னுடைய பெயரில், அவரது பெயரை சேர்த்து, நிக்கோலாய் வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என்று அழைக்கும் வகையில் பார்த்துக்கொள்கிறேன்”  என்று பேசினார். 

மேலும் அவர் பேசும் போது, “சரத்குமார் மற்றும் வரலட்சுமியின் பாராம்பரியம் அப்படியே தொடரட்டும். இதனை நான் என்னுடைய மனைவிக்காக செய்கிறேன். அவருக்கு சினிமாதான் முதல் காதல்.. நான் இரண்டாவதுதான். நாங்கள் தற்போது திருமணம் செய்து கொண்டு இருக்கிறோம். அவர் நாளையில் இருந்து வழக்கம் போல ஷூட்டிங்கிற்கு செல்ல இருக்கிறார். அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பார். அவரது ஆக்டிங் வேற லெவலில் இருக்கும்.” என்று பேசினார். 

என்னுடைய காதல்தான் நிக்கோலாய் சச்தேவ்

நிகழ்ச்சியில் வரலட்சுமி சரத்குமார் பேசும் போது, “இங்கு வந்திருக்கும் எல்லோருக்கும் நன்றி. கல்யாணத்தின் போது உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போதுதான் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய காதல் நிக்கோலாய் சச்தேவ்தான். ஆனால் என்னுடைய உயிர் சினிமா என்பது எல்லோருக்கும் தெரியும். நிறைய பேர் நீங்கள் கல்யாணம் செய்து கொண்ட பின்னர் நடிப்பீர்களா என்று கேட்டு இருந்தார்கள்.

என் கணவர் பேசியதில் இருந்தே நீங்கள் அதற்கான பதிலை தெரிந்து கொண்டிருப்பீர்கள். நான் நிச்சயமாக தொடர்ந்து நடிப்பேன். நீங்கள் எனக்கு எப்போதும் தொடர்ந்து ஆதரவு கொடுத்துக்கொண்டே இருக்கிறீர்கள். எப்போதுமே என்னைப் பற்றி நல்ல விதமாக பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். நான் என்ன படம் செய்தாலும், அதற்கான பாராட்டை நீங்கள் கொடுத்து இருக்கிறீர்கள். அது இன்னும் தொடரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசினார்.

இரண்டாவது திருமணம்

முன்னதாக, தமிழ், தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களில் நடித்து வருபவரும், பிரபல நடிகரான சரத்குமாரின் மகளுமானவர் வரலட்சுமி சரத்குமார். இவருக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான நிக்கேலாய் சச்தேவ் என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடந்து முடிந்தது. திருமண வரவேற்பில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். வரலட்சுமியின் வருங்கால கணவரான நிக்கோலாய் சச்தேவ் ஆர்ட் கேலரி நடத்தி வருகிறார். கிட்டதட்ட 14 ஆண்டுகள் இருவரும் பழகி வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். நிக்கோலாய் சச்தேவிற்கு ஏற்கனவே திருமணமாகி மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய காதல் கதையை கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேசி இருந்தார்.

இது குறித்து அவர் பேசும் போது, “ அவர் என்னை எப்பொழுதும் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார். என்னுடைய கேரியருக்கு அவ்வளவு சப்போர்ட்டாக இருந்திருக்கிறார். அவர் என் மீதும், என் குடும்பத்தின் மீதும், அளவு கடந்த அன்பும், அக்கறையும் கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு முன்பாகவே, நானும் அவரும் சந்தித்துக் கொண்டோம். அப்பொழுதே எங்களுக்குள் ஏதோ ஒன்று இருந்தது போல தோன்றியது. ஆனால் அதை நாங்கள் அடுத்த கட்டத்தை நோக்கி எடுத்துச் செல்லவில்லை.

காரணம், அது எங்களுக்கு சரியான நேரமாக இருக்கவில்லை. இருப்பினும், கிட்டத்தட்ட 14 வருடங்களாக நாங்கள் தொடர்பிலேயே இருந்தோம். ஆனால் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளவில்லை. அண்மையில் சந்தித்தோம்; பேசினோம். அதன் பின்னர் எல்லாமே இயல்பாக நடந்து விட்டது.அவர்தான் என்னிடம் முதலில் காதலைச் சொன்னார். அது மிகவும் சுவாரசியமானது. அவர் என்னுடைய அப்பா, அம்மா ராதிகா அத்தை உள்ளிட்ட அனைவரையும் நார்வே நாட்டிற்கு வரவழைத்து அவர்கள் முன்னிலையில், காதலை சொன்னார்.

இந்த விஷயத்தைப் பற்றி யாருக்குமே எதுவுமே தெரியாமல் இருந்ததற்கு காரணம் அவர்தான். அவருக்கு பெரிதாக சோசியல் மீடியாவில் விருப்பமெல்லாம் கிடையாது. அவர் ஒரு தனிமை விரும்பி. அவரது பர்சனல் சார்ந்த விஷயங்கள் எதையும் அவர் சோசியல் மீடியாவில் பெரிதாக போஸ்ட் செய்தது கிடையாது. அதனால்தான் எங்கள் விஷயம் இவ்வளவு சீக்ரெட்டாக இருந்தது ” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.