Sowdha Mani: ‘கணவர் போனதுக்கு அப்புறமா பல பேர்..டிவி சேனலுக்குள் செக்ஸ் டார்ச்சர்; சொல்லவே கூச்சமா இருக்கு?’-செளதாமணி!
கணவர் இறந்த பிறகு, நான் வேலை பார்த்த இடத்திலேயே என்னை திருமணம் செய்து கொள்ள சிலர் அணுகினார்கள். ஆனால் எனக்கு இரண்டாம் கல்யாணம் செய்து கொள்வதில் விருப்பமில்லை.

ஆசிரியை, செய்திவாசிப்பாளர், தொழில் முனைவர், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் என பல முகங்களுக்கு சொந்தக்காரர் செளதாமணி.
பிறப்பில் மலையாளியாக இருந்தாலும், இவர் வசித்தது, வளர்ந்தது என எல்லாமே கன்னியாகுமரி மாவட்டம்தான். இவர் அண்மையில் கலாட்டா பிங்க் சேனலுக்கு பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய போது, தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான தொந்தரவு குறித்து பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ என்னுடைய கணவர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக, கடந்த 2010ம் ஆண்டு உயிரிழந்தார். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். அவர்கள் வெளிநாட்டில் படிக்கின்றனர்.
கணவர் இறந்த பிறகு, நான் வேலை பார்த்த இடத்திலேயே என்னை திருமணம் செய்து கொள்ள சிலர் அணுகினார்கள். ஆனால் எனக்கு இரண்டாம் கல்யாணம் செய்து கொள்வதில் விருப்பமில்லை. காரணம், யார் என்னுடைய வாழ்க்கையில் வந்தாலும், அவர்கள் என்னுடைய குழந்தைகளை, அவர்களுடைய குழந்தைகளாக பாவிப்பார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.
என்னுடைய வாழ்க்கையானது என்னுடைய குழந்தைகளுக்காக மட்டும்தான் என்று அப்போதே முடிவு செய்து விட்டேன்.என்னுடைய கணவர் இறந்த பின்னர், நான் வழக்கம் போல செய்தி வாசிப்பதற்கு சேனலுக்கு சென்றபோது, எனக்கு வழக்கத்திற்கு மாறாக வாசிப்பதற்கு செய்திகள் குறைவாக இருந்தன. இதனையடுத்து அந்த செய்திகளை வழங்கும் தலைமையிடம் சென்று இது குறித்து கேட்டேன். ஆனால் அவரோ, ‘நீ என்ன என்னை கண்டுக்கவே மாட்டுகிறாய்’ என்று ஜாடை மாடையாக பேசினார்.
இது மட்டுமில்லாமல் போனில் அழைத்து, உன்னுடைய குழந்தைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். உன்னுடைய செலவை நான் கவனித்துக் கொள்கிறேன் என்றெல்லாம் பேசினார். எனக்கு மட்டுமல்ல, அங்கு இருக்கும் பல பெண்களுக்கு அவர் இவ்வாறு பாலியல் ரீதியான துன்புறுத்தலை கொடுத்திருக்கிறார்.
இதனையடுத்து நான் ஒரு மாதத்திலேயே அங்கிருந்து வெளியே வந்து விட்டேன். அதன் பிறகு சன் டிவி என்றாலே எனக்கு உடம்பெல்லாம் கூசும். இவ்வளவு அருவருப்பானவர்கள் அங்கு இருக்கிறார்களா? என்று தோன்றும்.
அகிலா கண்ணன் என்பவர் அவர் மீது புகார் ஒன்றை காவல்நிலையத்தில் கொடுத்தார். அவருக்கு நடந்த அந்த பாலியல் ரீதியான துன்புறுத்தல், அங்கிருந்த பலருக்கும் நடந்திருக்கிறது. ஆனால் யாரும் அகிலாவிற்கு சப்போர்ட்டுக்கு வரவில்லை. கடைசியில் நான்தான் அவரிடம் சென்று, உங்களுக்காக நான் கோர்ட்டில் வந்து சாட்சி சொல்கிறேன் என்று கூறினேன். இந்த முடிவை என்னுடைய கணவர் இருந்திருந்தால், நான் எடுத்திருக்க முடியுமா என்பது சந்தேகம் தான்” என்று பேசினார்.
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்