விஜய் பட டைட்டிலில் என்ட்ரி கொடுக்கும் புதிய சீரியல்.. டைம் மாறும் ஜீ தமிழ் சீரியல்கள்.!!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  விஜய் பட டைட்டிலில் என்ட்ரி கொடுக்கும் புதிய சீரியல்.. டைம் மாறும் ஜீ தமிழ் சீரியல்கள்.!!

விஜய் பட டைட்டிலில் என்ட்ரி கொடுக்கும் புதிய சீரியல்.. டைம் மாறும் ஜீ தமிழ் சீரியல்கள்.!!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 29, 2025 02:14 PM IST

இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் மீண்டும் 10:00 மணி வரை ஒரு மணி நேர எபிசோடாக ஒளிபரப்பாக உள்ளது.

விஜய் பட டைட்டிலில் என்ட்ரி கொடுக்கும் புதிய சீரியல்.. டைம் மாறும் ஜீ தமிழ் சீரியல்கள்.!!
விஜய் பட டைட்டிலில் என்ட்ரி கொடுக்கும் புதிய சீரியல்.. டைம் மாறும் ஜீ தமிழ் சீரியல்கள்.!!

சேனலும் தொடர்ச்சியாக புதுப்புது சீரியல்களை களமிறக்கி வருகின்றது. சமீபத்தில் அயலி என்ற சீரியல் ஒளிபரப்பாக தொடங்கி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அடுத்ததாக வாரிசு என்ற புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

எப்போது ஒளிப்பரப்பு

இந்த சீரியல் வரும் ஜூன் 30-ம் தேதி முதல் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாரிசு சீரியல் காரணமாக மௌனம் பேசிய பேசிய சீரியல் இனி 3 மணி முதல் 3.30 மணி வரை ஒளிபரப்பாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாயகனின் பாட்டி, தனது திறமையாலும் தியாகத்தாலும் கட்டி உருவாக்கிய சாம்ராஜ்யத்தை தனது பேரன் அக்கறையில்லாமல் இருப்பதால், தனக்கு அடுத்ததாக சரியாக வழிநடத்திக் கொண்டு செல்லப் போவது யார் என்று தெரியாமல் தவிக்கிறார்.

தமிழும் சிபியும் எப்படி சேர்ந்தார்கள்?

இந்த சமயத்தில் பணக்கார குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நாயகி தமிழுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்க கழுத்தை நெரிக்கும் கடன் காரணமாக அவரது அப்பா தலைமறைவாகி விடுகிறார். இந்த கல்யாணம் நின்று போகின்றது. இதனால் தமிழ் தனது குடும்ப பொறுப்பு மொத்தத்தையும் தாங்கி செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.

இப்படியான சூழலில் ஹீரோ சிபி உடன் தமிழ் எப்படி ஜோடி சேருகிறாள்? பாட்டி சாம்ராஜ்யத்தை வழி நடத்த வந்த தமிழ் குடும்பத்தையும் ஒன்றிணைத்து செய்வாளா? என்பது தான் இந்த சீரியலின் கதைக்களம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு புறம் இருக்க இதே ஜூன் 30 தான் தேதியில் இருந்து இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் மீண்டும் 10:00 மணி வரை ஒரு மணி நேர எபிசோடாக ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.