Pongal Movies: பொங்கலுக்கு வீடு தேடி வரும் சூப்பர் ஹீரோக்கள்!எந்த டிவியில் எந்த படம்? பொங்கலோடு தயாராகுங்கள்!
Pongal Movies:பொங்கல் பண்டிகைக்கு தமிழ் டிவி சேனல்களில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களின் படம் ஒளிபரப்பாக உள்ளது.

ஒரு விழா என்றாலே அதன் கொண்டாட்டம் தான் முக்கியமான செயலாகும். ஒவ்வொரு பாண்டிகையும் ஒவ்வொரு விதமான கொண்டாட்டத்தில் இருக்கும். தீபாவளி என்றால் பட்டாசு வெடித்து கொண்டாடுவதும், பொங்கல் என்றால் பொங்கல் செய்து சூரியனை வழிபடுவதும் என இருக்கும். ரம்ஜான் என்றால் பிரியாணி சாப்பிடுவது என இருக்கும். ஆனால் எந்த பண்டிகையாக இருந்தாலும் மாறாத ஒரு விஷயம் என்றால் அது சினிமா தான். விடுமுறை விட்டாலே ஏதேனும் ஒரு புது படத்திற்கு செல்வது வழக்கமான ஒன்றாகும். சினிமா மக்களின் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.
டிவி மீதான எதிர்பார்ப்பு
அதிலும் குறிப்பாக நமது வீடுகளில் பண்டிகை வந்தாலே டிவிகளில் ஒளிபரப்பாகும் படங்களை பார்ப்பதும் அந்த பண்டிகையின் கொண்டாட்டத்தில் ஒரு பகுதியாக மாறிவிட்டது. கடந்த பல ஆண்டுகளாகவே டிவியில் ஒளிபரப்பாகும் புது படங்களின் வருகைக்காக பல ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர். தீபாவளி, பொங்கல் என்றால் கூறவே வேண்டாம் அந்த சமயத்தில் வெளியாகி சில மாதங்களோ, சில நாட்களோ ஆன புது படங்களை டிவியில் போடுவதை தொலைக்காட்சி சேனல்களும் வழக்கமாகக் கொண்டுள்ளன. அதிலும் பொங்கல் விழா என்பது தொடர்ந்து மூன்று நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். இந்த விழாக்களில் நாம் பாரம்பரிய முறைகளில் விழாவை கொண்டாடினாலும் தினமும் வீட்டில் டிவியில் எந்த படம் போடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் நம்மிடையே உண்டு.
அந்த வரிசையில் இந்த வருடம் பொங்கலிலும் சூப்பர் ஹிட் படங்களை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு உள்ளன. உங்கள் வீட்டில் பொங்கல் பண்டிகையோடு சேர்த்து சூப்பர் ஹீரோக்களின் படங்களும் திரையிடப்பட உள்ளது. இதனை உங்கள் குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்ச்சியாக பார்க்கலாம். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் மற்றும் சிவாகார்த்திகேயன் உட்பட பலரது படங்கள் இந்த மூன்று நாட்களில் ஒளிபரப்பாக உள்ளது.
சூப்பர் ஹிட் படங்கள்
பண்டிகை காலங்களில் படங்கள் என்றாலே அனைவரது நினைவிருக்கும் வருவது சன் டிவி தான். அந்த அளவிற்கு சன் டிவியில் ஒவ்வொரு பண்டிகை அன்றும் அந்த வருடம் சூப்பர் ஹிட் ஆன படங்களை தொகுத்து ஒளிபரப்புவது வழக்கமான ஒன்றாகும். இந்த வரிசையில் இந்த வருடமும் மூன்று நாட்களும் சூப்பர் ஹிட் படங்களை ஒளிபரப்ப சன் டிவி தயாராகியுள்ளது.
2024 வது வருடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வெளியான படம் என்றால் அது வேட்டையன் படமே ஆகும். ஜெய் பீம் பட இயக்குனர் த. செ.ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார்.ரஜினியின் மற்ற படங்களை காட்டிலும் இப்படத்தில் புதுவிதமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார். மேலும் போலி என்கவுண்டர் குறித்தான விழிப்புணர்வு தொடர்பாகவும் படத்தின் கதை அமைந்திருக்கும். இந்த நிலையில் இந்த படம் ரூ.160 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது. தற்போது சன் டிவியில் இந்த படம் நாளை ஜனவரி 14ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
ஜீ தமிழில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் நேற்று ஜனவரி 12 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஒளிபரப்பானது. இப்படமே மீண்டும் நாளை மாலை ஒளிபரப்பாக உள்ளது. இந்த பொங்கல் தளபதி பொங்கலாக இருக்க ஜீ தமிழ் முடிவு செய்துள்ளது.இதனை அடுத்து கலைஞர் டிவியில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் ஆ வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு படம் மாலை ஒளிபரப்பாக உள்ளது. சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் பெரும் வெற்றி படமாக அமைந்த அமரன் திரைப்படம் விஜய் டிவியில் நாளை மாலை ஒளிபரப்பாக உள்ளது.

டாபிக்ஸ்