Mohini Aattam Arambam: “மோகினி ஆட்டம் ஆரம்பம்”! காதலும்-அமானுஷ்யமும் மோதிக் கொள்ளும் காதல் கதை
Mohini Aattam Arambam: காதலும்-அமானுஷ்யமும் மோதிக் கொள்ளும் காதல் கதை ஆக மோகினி ஆட்டம் ஆரம்பம் என்ற புதிய தமிழ் டப்பிங் சீரியல் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.
காதல் அனைத்தையும் வெல்லும். ஆனால் ஒரு சூனியக்காரியின் சூழ்ச்சியை வெல்லுமா? என்கிற கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக புதிய தொடரான “மோகினி ஆட்டம் ஆரம்பம்” என்ற புதிய தொடரின் கதைக்களம் அமைந்துள்ளது. இந்த சீரியல் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
காதல் - அமானுஷ்யம் கலந்த கதை
இந்த புதிய கற்பனைக் கதை நிஷாந்தி (நியா ஷர்மா) என்ற தீய மந்திரக்காரியின் சூழ்ச்சிகளுக்கு எதிராக, தமக்கு நெருக்கமானோரை காக்கும் போராட்டத்தை மையமாகக் கொண்டுள்ளது. நிஷாந்தி, "சோலா ஷ்ரிங்கார்" எனப்படும் 16 அதிசய ஆபரணங்களைத் தேடி, நிரந்தர அழகையும் இளமையையும் பெற முயற்சிக்கிறாள்.
16 ஆபரணங்களை அடைய, அழகான ஒவ்வொரு பெண்களின் கணவரையும் யாகத்துக்கு பலி கொடுக்கிறாள். அதனால் அவளது தீய சக்திகள் மேலும் வலுபெறுகின்றன.
இப்போது, அவள் தனது 16வது குறியாக மோகனைக் (செய்ன் இபாத் கான்) இலக்காகக்கொண்டு, இறுதி ஆபரணத்தை பெற திட்டமிடுகிறாள். ஆனால் நிஷாந்திக்கு எதிராக தியா (டெப்சந்திரிமா சிங் ராய்) எனும் துணிச்சலான பெண் மோகனை காப்பாற்ற முன்வருகிறாள்.
காதல் ஜோடி மோகன் - தியா
மோகனும் தியாவும் சிறுவயது நண்பர்கள், காதலர்கள். மேலும் மோகன் தனது படிப்பை முடித்து வெளிநாட்டிலிருந்து திரும்பியவுடன் அவர்கள் திருமணம் செய்யத் தீர்மானிக்கின்றனர்.
நிஷாந்தியின் கொடிய சூழ்ச்சிகளிலிருந்து மோகனை காப்பாற்ற முயற்சிக்கும் தியாவின் போராட்டமே “மோகினி ஆட்டம் ஆரம்பம்” தொடரின் மையக் கதையாக மாறுகிறது.
இவை அனைத்தையும் விறுவிறுப்போடும், திகீர் திருப்பங்களோடும் சுவாரசியமாக உங்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. மாய மோகினியின் காதல் ஆட்டமாக அமைய இருக்கும் “மோகினி ஆட்டம் ஆரம்பம்” சீரியலை காணத் தவறாதீர்கள்."
கலர்ஸ் தமிழ் டிவியின் மற்ற சீரியல்கள்
சுவாரஸ்யமான திரைக்கதையோடு, மிகுந்த பொருள்செலவோடு தயாராகி திங்கள் முதல் வெள்ளிவரை நாள்தோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஆன்மிக புராண தொடராக சிவசக்தி திருவிளையாடல் இருந்து வருகிறது.
தற்போது இந்த தொடரானது சிவன் - பார்வதி ஒன்றாக இணைவது, அரக்கன் தாரகாசுரன் செய்ய போகும் சதி ஆகியவற்றை பின்னணியாக கொண்டு இந்த தொடரின் கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது.
இந்த தொடரில் திகிர் திருப்பங்கள், பாரத தேசத்தின் ஆன்மிக புராண செய்திகள் அனைத்தும் சேர்த்து விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் கூட்டியிருக்கிறது. கண்களை ஆச்சர்யத்தில் பளபளப்பாக்கும் செட் அமைப்புகள், நேர்த்தியான கதாப்பாத்திரத் தேர்வுகள், மாயாஜாலம் நிகழ்த்தும் சிஜி வேலைப்பாடுகள் ஆகியன, கைலாயத்தையும் வானுலகையும் நேரில் காண்பதுபோல, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு விருந்தாக்கி வருகிறது.
அத்துடன் சங்கடம் தீர்க்கும் சனிஸ்வரன் என்ற ஆன்மிக தொடரும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. பெருவாரியான டிவி ரசிகர்களை கவர்ந்த நாகினி தொடரின் இரண்டாம் பாகமான நாகினி 2 தொடரும் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/