என்னது ஜன நாயகன் பட டீசர் ரிலீஸா? இண்டர்நெட்டில் அதிரி புதிரி செய்யும் விஜய் ரசிகர்கள்.. உண்மை என்ன?
நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகும் கடைசி படமான ஜன நாயகனின் டீசர் இம்மாத கடைசியில் வெளியாகும் என இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

நடிகர் விஜய் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ஜன நாயகன். இது விஜய்யின் சினிமா கெரியரில் கடைசி படமாக இருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தப் படத்தின் ஒவ்வொரு சின்ன சின்ன அப்டேட்களுக்காகவும் ரசிகர்கள் தவமாய் தவமிருந்து காத்துக் கிடக்கின்றனர்.
வைரலாகும் ஜன நாயகன் பட டீசர் அப்டேட்
இதனால் விஜய் ரசிகர்கள் படக்குழுவினர் அறிவிக்கும் முன்னே பல அப்டேட்களை எதிர்பார்த்து வருகின்றனர். ஆர்வ மிகுதியால் வெளிப்படும் ஃபேன் மேட் போஸ்டர்கள், தங்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். அதன்படி தற்போது ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் டீசர் வெளியீடு குறித்து பேசி வருகின்றனர். அதன்படி, ஜன நாயகன் படத்தின் டீசர் வரும் ஜூன் 22 ஆம் தேதி வெளியாகும் என கூறி வருகின்றனர்.