'முடிச்சு விட்டீங்க போங்க' ஓரமாக ஒதுங்கிய ரயான்.. அக்காவை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'முடிச்சு விட்டீங்க போங்க' ஓரமாக ஒதுங்கிய ரயான்.. அக்காவை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..

'முடிச்சு விட்டீங்க போங்க' ஓரமாக ஒதுங்கிய ரயான்.. அக்காவை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..

Malavica Natarajan HT Tamil
Dec 24, 2024 09:41 PM IST

ரயானுக்கு நெகட்டிவ்வான அட்வைஸ்களை கொடுத்து தனித்து விட்டதால் அவரது அக்காவை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

'முடிச்சு விட்டீங்க போங்க' ஓரமாக ஒதுங்கிய ரயான்.. அக்காவை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..
'முடிச்சு விட்டீங்க போங்க' ஓரமாக ஒதுங்கிய ரயான்.. அக்காவை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..

உன் நிழலையும் நம்பாத

அப்போது, பிக்பாஸ் வீட்டுல இருக்க யாரும் உன்ன நெனச்சி சந்தோஷப்படல. நீ உன் நிழல கூட நம்பக் கூடாது. நீ உன்னோட நண்பர்கள்ன்னு நினைச்சிட்டு இருக்க ஜாக்குலினும் சௌந்தர்யாவுமே உனக்கு எதிரா தான் பேசிட்டு இருக்காங்க.

இதுக்கு மேல தனிச்சு விளையாடு. எதுக்கு வந்தியோ அத மைண்ட்ல வை. அவ்ளோ தான். ஆனா அத உன்ன பண்ண விட மாட்டிங்குறாங்க. அத வெளிய இருந்து பாக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வர நீ எவ்ளோ கஷ்டப்பட்டன்னு எங்களுக்கு தான் தெரியும். ஆனா ராயன் இங்க வேற மாதிரி இருக்குறது கஷ்டமா இருக்கு.

தகுதியானவன் இல்லன்னு திணிக்குறாங்க

நாங்க எல்லாருமே 24x7பாக்குறோம். அதுனால இங்க நடக்குற எல்லாமே லைவ்வா தெரியுது. எங்க என்ன நடக்குதுன்னு தெரியாத எனக்கே எல்லாம் தெரியுது என அவரது அம்மாவும் அக்காவும் மாறி மாறி கூறினர்.

அத்துடன் போட்டியாளர்களிடம் ரயான் அக்கா பேசும் போது, நாமினேஷன் ஃபிரி பாஸ் கொடுத்துவிட்டு அதற்கு தகுதியானவன் கிடையாதுன்னு திரும்ப திரும்ப சொன்னது ரொம்ப கஷ்டமா இருந்தது. இங்க இருக்க சேர்ல்ல இருந்து பென்ச்ல இருந்து எல்லா பொருளுக்குள்ளவும் அத திணிச்சு வச்ச மாதிரி இருந்தது.

எங்களால ஏத்துக்க முடியல

கேர்ள்ஸ் டீம்ல இருக்கும் போதும் சரி, ஒவ்வொரு டாஸ்க்ல விளையாடும் போதும் சரி ரயான் அவரோட முழு உழைப்பையும் ஈடுபாட்டையும் கொடுத்தாரு. அத எல்லாருமே பாத்திருப்போம். ஆனா அப்படி இருந்தும் நாமினேஷன் பாஸ்க்கு தகுதி இல்லன்னு சொன்னத எல்லாம் ஏத்துக்க முடியல. ரொம்ப கஷ்டமா இருக்கு. ஒருவேள இதை எல்லாம் சரியா பண்ணாதவங்கள இப்படி சொல்லி இருந்தா பரவாயில்ல என போட்டியாளர்கள் அனைவரிடமும் கூறினர்.

ரயானை பார்த்து கவலைபட்ட போட்டியாளர்கள்

ராயன் நாமினேஷன் ஃபிரி பாஸ் டாஸ்க்க சரியா விளையாடன்னு நாம எல்லாம் சொன்னது அவங்களுக்கு கஷ்டமா இருந்திருக்கும் என சக போட்டியாளர்கள் பேசிக் கொண்டிருந்தனர். முத்துக்குமரன் இது சம்பந்தமா பேசியது குறித்து ராயனிடம் நேரடியாக முதலில் சொல்லியும் கேட்காததால் தான் மற்றவர்களிடம் கூறினார் என்றும் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ராயன் குடும்பத்தினரை அனுப்பி வைத்து விட்டு கதவு அருகிலேயே தலையை பிடித்துக் கொண்டு அப்படியே தனியே அமர்ந்து விட்டார். இதை பார்த்த மற்ற போட்டியாளர்கள் அவரின் நிலை குறித்து கவலை அடைந்தனர்.

கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

மேலும், சமூக வலைதளத்தில் ராயனின் அக்காவையும், ராயனின் சிந்தனைகள் இப்படி தான் இருக்கும் எனவும் பல்வேறு மீம்களை நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர். அத்துடன் ரயான் தற்போது ஜாக்குலின் மற்றும் சௌந்தர்யாவிடம் பேசாமல் இருந்து வருகிறார். இதனால் ரயான் மனதில் என்ன நினைக்கிறார். இனி எப்படி தன் விளையாட்டை கொண்டு செல்ல இருக்கிறார் என்பதைக் காண காத்திருக்கின்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.