தொடர் மரணம்.. கலைஞர்களை காவு வாங்கியதா இந்தியன் 2! எல்லை மீறும் நெட்டிசன்கள்.. கவலையில் படக்குழு
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் ஆரம்பித்த மரணங்கள் படம் வெளியாகி சில மாதங்களுப் பின்னும் தொடர்வதாக நெட்டிசன்கள் எல்லை மீறி கமெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன்- இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்தியன் 2 படம் போதிய வரவேற்பை பெறவில்லை. மேலும், இந்தப் படத்தின் மீது பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது இந்தியன் 2 படத்தை வேறு விதமாக மிகவும் மோசமாக சித்தரித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
தாக்கத்தை ஏற்படுத்திய இந்தியன்
நாட்டில் நடக்கும் ஊழலுக்கு எதிராக கமல் ஹாசன், இந்தியனாக கொடுத்த குரல் தமிழக மக்களிடம் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த தாக்கம் இன்றளவும் மக்கள் மனதில் நல்ல எண்ணங்களைக் கொண்டிருப்பதை உணர்ந்த, கமல் ஹாசனும், அப்படத்தின் இயக்குநர் ஷங்கரும் இந்தியன் படத்தின் அடுத்தடுத்த பாகத்தை எடுக்க தயாராகினர்.
இதனால், பிரம்மாண்ட இயக்குநர் இந்தியன் 2 படத்தில் என்ன சொல்ல வருகிறார் என்பதைக் காண மக்கள் ஆர்வமாக இருந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு மிகவும் பொறுமையாக நடந்து வந்தது. இரண்டாம் பாகத்துடன் சேர்த்து 3ம் பாகமும் எடுக்க இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டதால் இந்த கால தாமதம் என பேச்சுவார்த்தைகள் அடிபட்டது.