கொளுத்திப் போட்ட சிம்ரன்.. குறி வைக்கப்படும் நடிகைகள்.. பரபரப்பில் சோசியல் மீடியாக்கள்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கொளுத்திப் போட்ட சிம்ரன்.. குறி வைக்கப்படும் நடிகைகள்.. பரபரப்பில் சோசியல் மீடியாக்கள்..

கொளுத்திப் போட்ட சிம்ரன்.. குறி வைக்கப்படும் நடிகைகள்.. பரபரப்பில் சோசியல் மீடியாக்கள்..

Malavica Natarajan HT Tamil
Published Apr 21, 2025 02:21 PM IST

நடிகை சிம்ரன் தன்னை சக நடிகை ஒருவர் அவதூறாக விமர்சித்ததாக கூறிய நிலையில், அந்த நடிகை யாராக இருக்கும் என இணையவாசிகள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.

கொளுத்திப் போட்ட சிம்ரன்.. குறி வைக்கப்படும் நடிகைகள்.. பரபரப்பில் சோசியல் மீடியாக்கள்..
கொளுத்திப் போட்ட சிம்ரன்.. குறி வைக்கப்படும் நடிகைகள்.. பரபரப்பில் சோசியல் மீடியாக்கள்..

இது தான் பெட்டர்

விருது நிகழ்ச்சியில் பேசிய சிம்ரன், " நான் சமீபத்தில் என்னுடைய சக நடிகை ஒருவரிடம் நீங்கள் ஏன் இந்தப் படத்தில் நடித்தீர்கள். இந்தப் படத்தில் நீங்கள் நடித்தது என ஆச்சரியமாக இருந்தது எனக் கூறினேன். அப்போது அவர் கொஞ்சம் கூட யோசிக்காமல் என்னைப் பார்த்து, உங்களைப் போல ஆண்டி கதாப்பாத்திரத்தில் நடிப்பதை விட இது பெட்டர் தான் என்றார்.

இந்தப் பதில் என்னை ரொம்பவே அதிர்ச்சி அடையச் செய்தது. அவர் இப்படி கொஞ்சம் கூட புரிதல் இல்லாமல் பேசுவார் என எதிர்பார்க்கவில்லை. எனக்கு சற்றே நல்ல பதில் கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றார்.

25 வயதிலே ஆண்டி ரோல்

மேலும் பேசிய அவர், நான் எனக்கு 25 வயது இருக்கும் போதே கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தில் நீங்கள் சொன்ன ஆண்டி கதாப்பாத்திரத்தில் நடித்துவிட்டேன். இது படத்தில் டப்பா ரோலில் நடிப்பதற்கு எவ்வளவோ மேலானது. இப்படி முக்கிய ஆண்டி கதாப்பாத்திரத்தில் நடிக்கலாம். இல்லை என்றால் சும்மாவே இருக்கலாம் என்று தான் நான் நினைக்குறேன்.

உறுதியாக உள்ளேன்

நான் என்ன செய்கிறேன் என்பதில் நான் மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறேன். நான் பாலின பாகுபாடு பற்றி எல்லாம் பேச விரும்பவில்லை. நான் பெண்ணாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். ஆண்டி ரோலோ, அம்மா ரோலோ அல்லது வேறு எந்த ரோலாக இருந்தாலும் அது முக்கியமானதாக இருக்கும் என காட்டமாக கூறினார்.

குறி வைக்கப்படும் நடிகைகள்

இந்த வீடியோ விரைவாக சமூக ஊடகங்களில் வைரலாகி, அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்பது குறித்த ஊகங்களைத் தூண்டியது. சிம்ரன், யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இணையத்தில் ரசிகர்கள் ஜோதிகா, த்ரிஷா மற்றும் லைலாவை நோக்கி இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். ஆனால், சம்பந்தப்பட்ட நடிகைகள் யாரும் இதுவரை இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்கவில்லை.

யூகத்தில் சிக்கிய நடிகைகள்

சிம்ரன் தனக்கு மெசேஜ் அனுப்பிய நடிகரின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், இணையவாசிகள் துப்புகளைத் தேடி வருகின்றனர். சமீபத்தில் வெளியான சப்தம் படத்தில் லைலாவுடன் நடித்ததால், சிலர் சிம்ரன் லைலாவைத் தான் கூறுகிறார் என்றனர், குட் பேட் அக்லி படத்தில் த்ரிஷாவுடன் நடித்ததால் மற்றவர்கள் அவரது பெயரை கூறுகின்றனர். இன்னும் சிலர் சிம்ரன் 'டப்பா' என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் அது டப்பா கார்டெலாகத் தான் இருக்கும் என யூகித்து ஜோதிகாவைப் பற்றி பேசுகின்றனர் .

சிம்ரனுக்கு பெருகும் ஆதரவு

"அது த்ரிஷாவா அல்லது ஜோதிகா என்று தெரியவில்லை - எது எப்படியோ எங்களின் உண்மையான ராணி சிம்ரன். அவரைப் பற்றி கருத்து சொல்ல யாருக்கும் உரிமை இல்லை" என்று ஒருவர் சமூக வலைதளத்தில் கமெண்ட் செய்துள்ளார்.

ஒரு எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பயனர், "த்ரிஷா தான் சிம்ரனிடம் அப்படிச் சொன்னார்.. அப்படி ஒரு டாக்சிக் பெண்மணி அவள்." என்றார். மற்றொருவர் "ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர், இது ஜோதிகா அல்லது லைலாவா. யார் சொன்னாலும், அது மிகவும் உணர்ச்சியற்றதாக இருக்கும். இருப்பினும், ஜோதிகாவின் ரசிகர்கள் சமீபத்தில் ஒரு நேர்காணலில் சிம்ரனை தனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர் என்று குறிப்பிட்டிருக்கிறார் என்றும் கூறினார்.

"ஜோ மேம் மற்றும் சிம்ரன் மேம் ஒரு நல்ல உறவில் உள்ளனர், ஆனால் சில குழுக்கள் இங்கே தவறான கதைகளை உருவாக்குகின்றன. சூர்யா அண்ணா படம் நெருங்கும் போது எதிர்மறையை பரப்புவதும், அவரையும் அவரது குடும்பத்தையும் கீழே தள்ள முயற்சிப்பதும் இவர்களின் வழக்கமான பொழுதுபோக்கு. என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.