ஐயோ ஆத்தா.. நீ பாட மட்டும் செய்யாத ஆத்தா.. சுச்சியை கலாய்க்கும் நெட்டிசன்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இந்த வீடியோ தான்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஐயோ ஆத்தா.. நீ பாட மட்டும் செய்யாத ஆத்தா.. சுச்சியை கலாய்க்கும் நெட்டிசன்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இந்த வீடியோ தான்!

ஐயோ ஆத்தா.. நீ பாட மட்டும் செய்யாத ஆத்தா.. சுச்சியை கலாய்க்கும் நெட்டிசன்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இந்த வீடியோ தான்!

Malavica Natarajan HT Tamil
Dec 30, 2024 10:51 AM IST

பாடகி சுசித்ரா ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தனது இன்ஸ்டாகிராமில் பாடல் பாடி வெளியிட்ட வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர்.

ஐயோ ஆத்தா.. நீ பாட மட்டும் செய்யாத ஆத்தா.. சுச்சியை கலாய்க்கும் நெட்டிசன்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இந்த வீடியோ தான்!
ஐயோ ஆத்தா.. நீ பாட மட்டும் செய்யாத ஆத்தா.. சுச்சியை கலாய்க்கும் நெட்டிசன்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இந்த வீடியோ தான்!

சினிமாவில் பாடல் பாடுவதை தன் விருப்பப் பணியாக செய்துவந்த இவரின் குரலுக்கு இன்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். எத்தனை குரல்கள் இருந்தாலும் தன் காந்தக் குரலால் ரசிகர்களை தனியே கவர்ந்து இழுப்பவர் இவர்.

சினிமாவுக்கு மூட்டை கட்டி மும்பை பறந்த சுச்சி

அப்படி தனக்கென அடையாளத்தைக் கொண்டிருந்த இவர் தற்போது சுச்சி லீக்ஸ் விஷயத்தில் சிக்கி, குடும்ப வாழ்க்கை, திரைப்பட வாய்ப்புகள் என அனைத்தையும் இழந்து நிற்கிறார்.

பலகட்ட போராட்டங்களுக்குப் பின் இவர், தற்போது மும்பையில் குடியேறி உள்ளார். அங்கு குழந்தைகளுக்கான இதழ் ஒன்றில் பணியாற்றி வரும் சுசித்ரா, யூடியூப்களுக்கோ இன்ஸ்ட்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலோ தன் கணவர் கார்த்திக் குமார் பற்றியும், நடிகர் தனுஷைப் பற்றியும் இனி எவ்வித அவதூறு கருத்துகளும் சொல்லப் போவதில்லை. இனி தன் வேலைகளை மட்டும் பார்த்து நிம்மதியாக இருக்கப்போவதாக அறிவித்திருந்தார்.

மீண்டும் வந்த சுச்சி

ஆனால், அந்த வார்த்தைகளை சொல்லி கொஞ்ச நாள் கூட அவரால் அதை தாக்குப் பிடிக்க முடியவில்லை. தனுஷிற்கு எதிராக நயன்தாரா கூறிய கருத்துகளை ஆதரித்தது. தனுஷிற்கு எதிராக புகார்களை முன்வைக்காத நடிகைகளை கேள்வி கேட்பது, சூர்யாவை ஆதரிப்பது அதே சமயத்தில் அவரது மனைவி ஜோதிகாவை மிகக் கேவலமாக விமர்சிப்பது என கணிக்க முடியாத அளவு பேசி வருகிறார்.

இது இப்படி இருக்க அவ்வப்போது இன்ஸ்டகிராமில் லைவ் வரும்போது, ரசிகர்களின் கேள்விக்கும் பதிலளித்தும் வருகிறார். இந்நிலையில் தான் சுசித்ராவின் குரலில் மீண்டும் பாடல்களை பாடுமாறு கேட்டுள்ளார்.

கம்பேக் கேட்டவர்களை கலாய்த்த சுச்சி

இதைக் கவனித்த சுசித்ரா, சாகக் கிடந்து, தொண்டை அறுபட்டவன் போன்ற குரலில் தேவாரா படப் பாடலை பாடியுள்ளார். இதுதான் என்னை பாடச் சொல்பவர்களுக்கும் என்னை பாடகியாக கம்பேக் கொடுக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கும் நான் சொல்ல வேண்டியது எனக் கூறியும் இருந்தார்.

சௌந்தர்யாவிற்கு நன்றி

இப்படி பாடியதையும் விடாத நெட்டிசன்கள், இந்தக் குரல் நன்றாக இருக்கிறது. மீண்டும் ஒரு பாடல் பாடுமாறு கேட்டதற்கும் சளைக்காமல் இன்று சக்கரகக்ட்டி படத்தில் இருந்து டாக்ஸி டாக்ஸி பாடலை பாடி உள்ளார். என் கிரேஸி பிராக் வாய்ஸ் மக்களுக்கு பிடித்திருப்பதாகவும் கமெண்ட் செய்துள்ளார். மேலும், தான் இந்த குரலில் பாடுவதற்காக பிக்பாஸ் போட்டியாளராக உள்ள சௌந்தர்யா நஞ்சுண்டனுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.