'நீ புடுங்குறது பூராவும் தேவையில்லாத ஆணி தான்'.. பிக்பாஸ் வாய்ப்புக்காக போராடும் இளைஞரை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'நீ புடுங்குறது பூராவும் தேவையில்லாத ஆணி தான்'.. பிக்பாஸ் வாய்ப்புக்காக போராடும் இளைஞரை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்..

'நீ புடுங்குறது பூராவும் தேவையில்லாத ஆணி தான்'.. பிக்பாஸ் வாய்ப்புக்காக போராடும் இளைஞரை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்..

Malavica Natarajan HT Tamil
Published Apr 23, 2025 05:51 PM IST

சோசியல் மீடியாவில் வீடியோ போட்டு பிரபலமான இளைஞர் ஒருவர் தான் பிக்பாஸ் சீசன் 9ல் பங்கேற்க வேண்டும் என்பதற்காக செய்த நூதன காரியத்தை பார்த்து நெட்டிசன்கள் அவரை லெஃப்ட், ரைட் வாங்கி வருகின்றனர்.

'நீ புடுங்குறது பூராவும் தேவையில்லாத ஆணி தான்'.. பிக்பாஸ் வாய்ப்புக்காக போராடும் இளைஞரை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்..
'நீ புடுங்குறது பூராவும் தேவையில்லாத ஆணி தான்'.. பிக்பாஸ் வாய்ப்புக்காக போராடும் இளைஞரை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்..

பிக்பாஸ்

நிகழ்ச்சி ஆரம்பம் ஆனதில் இருந்தே, போட்டியாளர்கள் போட்டியை சுவாரசியமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதை நறுக் சுறுக் என பேசி, வாரம் வாரம் ட்ரில் எடுத்து வந்தார் விஜய் சேதுபதி. அத்துடன் ஆட்டமும் புதுசு ஆளும் புதுசு என்ற விளம்பரத்திற்கு ஏற்ப நாளுக்கு நாள் புதிது, புதிதாக டாஸ்க்குகளை பிக்பாஸும் கொடுத்து நிகழ்ச்சியை சுவார்சியமாக்க முயற்சி செய்து வந்தார்.

சரிந்த டிஆர்பி

இருந்தும் அதற்கு பலனில்லாமல் போனது. அதற்கு காரணம் கடந்த 7 சீசன்களைக் காட்டிலும் 8வது சீசனில் தான் டிஆர்பி இதுவரை இல்லாத அளவு சரிந்து போனது. அதற்கு ஓடிடி பயன்பாடு, செல்போன் நுகர்வு, இணையத்தில் லீக் ஆகும் முக்கிய காட்சிகள் என பல விஷயங்கள் காரணமாக இருந்தாலும், போட்டியாளர்கள் தேர்வும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

பிக்பாஸில் பிரபலமாகத் துடிக்கும் இளைஞர்

நிலைமை இப்படி இருக்க, பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்படியாவது போட்டியாளராக பங்கேற்று தன் வாழ்க்கையை பிரபலமாக்க வேண்டும் என ஒரு இளைஞர் துடியாய் துடித்து வருகிறார். இதற்காக அந்த இளைஞர், தமிழ்நாடு முழுவதும் முட்டி போட்டுக் கொண்டு பயணம் செய்து வருவதாகவும் வீடியோ போட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் a_to_z_e என்ற பெயரில் அக்கவுண்ட் வைத்திருக்கும் இவர் தமிழ் டார்லிங் என்ற பெயரை பயன்படுத்தி சோசியல் மீடியாவில் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார்.

முட்டி போட்டு பயணித்து வேண்டுகோள்

இதற்கிடையில், தான் மிகப்பெரிய சோசியல் மீடியா இன்ப்ளூயன்சர் என்றும், பிக்பாஸ் சென்றால் தன் வாழ்க்கை வேற லெவலில் மாறிவிடும் என்றும் ஆசைப்பட்டு வீடியோ வெளியிட்டு வருகிறார். இதை உலகம் முழுக்க தெரிய வைக்கும் விதமாக செருப்பை முட்டிக் காலில் கட்டிக் கொண்டு, முட்டி போட்டே நகர்ந்து பயணித்து வீடியோவும் வெளியிட்டு வருகிறார். அதில் விஜய் டிவி லோகோ, பிக்பாஸில் இடம்பெற்ற விஜய் சேதுபதி படம், அவரது இன்ஸ்டாகிராம் ஐடி என அனைத்தையும் பதிவிட்டுள்ளார்.

விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்

இந்த வீடியோ இணையத்தில் அதிக அளவு பரவியதை அடுத்து அவரது இன்ஸ்டாகிராம் பேஜிற்கு அதிக பார்வையாளர்களும் கிடைத்துள்ளனர். அதே சமயம் இளைஞரின் இந்த வீடியோவைப் பார்த்து அவரை விமர்சித்தவர்களும் திட்டியவர்களும் தான் அதிக அளவில் உள்ளனர். இதுபோன்ற செயல்காளால் எதுவும் நடக்காது என பலரும் அட்வைஸ் செய்தும் வருகின்றனர். ஆனால், பிக்பாஸ் செல்லும் தன் ஆசையை இளைஞர் விட்ட பாடில்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

கலர்ஸ் டிவியில் பிக்பாஸ்?

இது இப்படி இருக்கும் நிலையில். ஜியோ சினிமா ஆப்பும், ஹாட்ஸ்டார் ஆப்பும் தற்போது இணைந்து ஜியோஹாட்ஸ்டாராக மாறியிருக்கிறது. இதனால். விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகள் இந்த பொதுவான ஆப்பில் பதிவிடப்பட்டு வருகின்றன. இந்த ஆப் ஒன்றிணைப்பிற்கு பிறகு விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸை கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பி வருகின்றனர். இது ஒருபக்கம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இனி ஹிந்தி மொழி போல தமிழிலும் கலர்ஸ் டிவியில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுமா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.