Coolie Movie: கூலி அப்டேட் சொன்ன ரஜினி.. கூலி ரிலீஸில் கொளுத்திப் போட்ட நெட்டிசன்ஸ்..
Coolie Movie: கூலி படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும், படம் ரிலீஸ் ஆகும் தேதி குறித்தும் நெட்டிசன்ஸ் பல தகவல்களை கூறி வருகின்றனர்.

Coolie Movie: வேட்டையன் படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் கூலி. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன், நடிகர்கள் சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, அமீர் கான், சவுபின் சாஹிர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
அனிருத் இசை
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் கதாப்பாத்திரங்களின் பெயர்களை படக்குழு வெளியிட்டு வந்தது. கடந்த ஜூலை மாதம் கூலி படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து விசாகபட்டினத்தில் உள்ள துறைமுகத்தில் கூலி படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் நடைபெற்று முடிந்தது.
பின், பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது சென்னையில் கூலி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
லீக்கான ரிலிஸ் தேதி
இந்நிலையில், இணையத்தில் நடிகர் ரஜினி காந்த்தின் கூலி பட ரிலீஸ் குறித்து தகவல்கள் வெளிவந்த வண்ணமாகவே இருக்கிறது. அதன்படி, கூலி படத்தின் படப்பிடிப்பை 80 சதவீதம் முடிவடைந்ததாகவும், அதனால் கூலி படம் விரைவில் திரைக்கு வரும் எனவும் கூறுகின்றனர்.
இன்னும் சிலர், கூலி படத்தின் மொத்த ஷூட்டிங்கும் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிந்துவிடும். அதனால், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் எல்லாம் விரைந்து முடிக்கப்பட்டு ஆகஸ்ட் 10ம் தேதி அல்லது தீபாவளி பண்டிகைக்கு வெளிவரும் எனக் கூறி வருகின்றனர். இதனால், ரஜினி ரசிகர்கள் குஷியாகி வருகின்றனர்.
முன்னதாக நடிகர் ரஜினி காந்த்தின் 171வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். அதன்படி வரும் 2025ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதி கூலி படத்தை ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளது எனக் கூறி வந்தனர். ஆனால் படக்குழு படத்தின் ரிலீஸ் குறித்து தற்போது வரை எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கூலி அப்டேட் தந்த ரஜினி
இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் ஷீட்டிங் நடந்து வரும் சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து செய்தியாளர்களை சந்தித்து கூலி படத்தை பற்றி பேசியிருக்கிறார். பத்திரிகையாளர்கள் ரஜினியிடம் கூலி திரைப்படம் எப்படி வந்துருக்கு என கேட்டதற்கு, சிறப்பா வந்திருக்கு என கூறினார். மேலும் ஏர்போர்ட்டில் இன்னும் எத்தனை நாள் ஷூட்டிங் நடைபெறும் என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது கேள்வி கேட்ட நபரை ரஜினி குறுகுறுவென சில வினாடிகள் பார்த்தார்.
பின் இன்று ஒரு நாள் மட்டும் தான் இங்கு படப்பிடிப்பு நடைபெறும் எனவும் ரஜினி கூறினார். இந்த பேட்டியின் போது, ரஜினி காந்த் கேள்வி கேட்ட பத்திரிகையாளரை பார்த்த வீடியோவை பலரும் பகிர்ந்து அவரை கிண்டல் செய்து வருகின்றனர். மாணிக்கமாக இருந்த ரஜினி பாட்ஷாவாக மாறிவிட்டார் என்றும் கிண்டல் செய்துள்ளனர்.
லீக்கான காட்சிகள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோ நாகார்ஜுனா சைமன் என்ற முக்கியத்துவமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவரின் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த சமயத்தில், நாகார்ஜூனாவின் சண்டைக் காட்சியை காட்சியை ரசிகர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து ஆன்லைனில் லீக் செய்து படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்