Urvashi Rautela: ஊர்வசி ரவுத்தாலாவை விடாமல் துரத்தும் தாகு மகராஜ்.. சர்ச்சையில் அடிபட்ட பெயர்..
Urvashi Rautela: தாகு மகராஜ் பட ஓடிடி ரிலீல் அறிவிப்பில் ஊர்வசி ரவுத்தாலா படம் இடம் பெறாதது ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Urvashi Rautela: நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நாயகனாக நடித்த 'டாகு மகாராஜ்' படத்தில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். படத்தின் ப்ரோமோஷன்களிலும், வெற்றி விழாக்களிலும் அவர் ஆர்வமாக பங்கேற்றார். ஆனால், இப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்ட போஸ்டரில் ஊர்வசி ரவுத்தேலா இல்லாததால் நெட்டிசன்கள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
ஊர்வசி எங்கே?
பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ், வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி 'டாகு மகாராஜ்' படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை போஸ்டர் ஒன்று வெளியிட்டு தெரிவித்தது. அந்த போஸ்டரில் நந்தமுரி பாலகிருஷ்ணா, பாபி தியோல், பிரக்யா ஜெயிஸ்வால், ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். ஆனால், முக்கிய வேடத்தில் நடித்திருந்த ஊர்வசி ரவுத்தாலா புகைப்படம் இடம்பெறவில்லை. இதனால், ஊர்வசி எங்கே? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஊர்வசிக்காக கேள்வி எழுப்பும் நெட்டிசன்ஸ்
'டாகு மகாராஜ்' ஓடிடி ரிலீஸ் போஸ்டரில் ஊர்வசி ரவுத்தேலா இல்லாததற்கு பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், நடிகர் சைஃப் அலி கான் மீதான தாக்குதல் குறித்து ஊடகங்களிடம் பேசிய ஊர்வசி, விலைமதிப்புமிக்க பரிசுகள் பற்றி பேசியது சர்ச்சையானதை சுட்டிக் காட்டினார்.
மிஸ் ரோலக்ஸ்
மற்றொருவர், “முக்கிய வேடத்தில் நடித்த நடிகை எங்கே?” என்றும், “மிஸ் ரோலக்ஸ் எங்கே?” என்று மற்றொருவர் கேள்வி எழுப்பி ஊர்வசி ரவுத்தேலாவை கிண்டல் செய்துள்ளனர். சூப்பர் ஹிட் படத்தின் ஓடிடி போஸ்டரில் முக்கிய நடிகை இல்லாதது ஏன்? என்றும் மற்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். “ஊர்வசி நீங்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறீர்கள். ஆனால் போஸ்டரில் நீங்கள் இல்லை” என்று ஒரு பயனர் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார்.
கண்டுகொள்ளப்படாத ஊர்வசி
முன்னதாக, படத்தின் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஊர்வசி ரவுத்தேலாவை படக்குழுவினரும், நடிகர் பாலகிருஷ்ணாவும் கண்டு கொள்ளாமல் அவமதித்ததாகவும் அதனால் ஊர்வசியின் முகம் மாறியதாகவும் வீடியோ வெளியிட்டு அவருக்கு அதரவு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
டாகு மகராஜ்
டாகு மகாராஜ் படம் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தில் பாலகிருஷ்ணா ஆக்ஷன் மூலம் அசத்தியுள்ளார். பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். பாபி கொல்லி இயக்கியுள்ள இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் பேனர்கள் தயாரித்துள்ளன. இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஐ. ஜானகி வேடத்தில் ஊர்வசி ரவுத்தேலா நடித்துள்ளார். பிரக்யா ஜெயிஸ்வால், ஸ்ரத்தா ஸ்ரீநாத், சாந்தினி சவுத்ரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்