Udit Narayan: ‘இவருக்கு இதே வேலையா போச்சு’ உதித் கொடுத்த முத்தங்களை பட்டியலிட்டு கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்
Udit Narayann: பாடகர் உதித் நாராயன் ரசிகை மட்டுமல்லாது பொது இடங்களில் கொடுத்த முத்தங்களை பட்டியலிட்டு, அவருக்கு அட்வைஸ் கொடுத்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

Udit Narayanan: பிரபல பாடகர் உதித் நாராயண் ஒரு நிகழ்ச்சியில் ஒரு பெண்ணின் உதட்டில் முத்தமிட்ட வீடியோ வெளியான நிலையில், இணையத்தின் ஒரு பிரிவினரிடமிருந்து உதித் நாராயன் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். இந்நிலையில், உதித் நாராயன் ரசிகைகளை மட்டுமல்ல, பாடகிகளுக்கும் பொது மேடையில் முத்தமிட்ட வீடியோக்களை நெட்டிசன்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.
உதித் கொடுத்த முத்தங்கள்
பாடகர் உதித் நாராயன் பெண் ரசிகைக்கு முத்தம் கொடுத்த வீடியோக்கள் ஆன்லைனில் வெளிவந்த பின்னர், பல்வேறு நிகழ்வுகளில் பாடகிகள் அல்கா யாக்னிக் மற்றும் ஸ்ரேயா கோஷல் ஆகியோருக்கு உதித் நாராயன் முத்தமிடும் பழைய வீடியோக்களை இணையத்தில் தோண்டி எடுத்து சிலர் வெளியிட்டு வருகின்றனர்.
அல்காவிற்கு முத்தம்
ஒரு கிளிப்பில், உதித் இந்தியன் ஐடல் மேடையில் அல்கா யாக்னிக்கை முத்தமிட்டார். அந்த வீடியோவில் அவர் மேடையில் பாடிக் கொண்டிருந்தார், அப்போது உதித் அவரை அணுகி திடீரென அவரது கன்னத்தில் முத்தமிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அல்கா சட்டென்று அங்கிருந்து நகர்ந்தாள். மற்றொரு வீடியோவில், மற்றொரு நிகழ்வில் உதித் முத்தமிட்டபோது அல்கா முகத்தை மாற்றுவதைக் காண முடிந்தது.
ஸ்ரேயா கோஷலுக்கு முத்தம்
சில வருடங்களுக்கு முன்பு சிறந்த பாடகிக்கான விருதை ஸ்ரேயா கோஷல் வென்றார். இதை உதித் மற்றும் தொலைக்காட்சி பிரபலம் மலைக்கா அரோரா ஆகியோர் அவருக்கு வழங்கினர். ஸ்ரேயா மேடைக்கு வந்ததும், உதித் அவரை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டார். மலைக்காவிடமிருந்து விருதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு ஷ்ரேயா முகத்தை மாற்றினாலும் வீடியோக்களுக்காக புன்னகைத்தார்.
உதித்தின் செயலால் வெறுப்படைந்த நெட்டிசன்ஸ்
அல்கா மற்றும் ஷ்ரேயாவை உதித் முத்தமிடும் வீடியோக்களுக்கு எதிர்வினையாற்றிய ஒருவர், எக்ஸ் தள பக்கத்தில், ஷ்ரேயா சங்கடமாக உணர்ந்தது தெளிவாக தெரிகிறது. இருந்தாலும் சிரித்தார் என்றும் உதித்தின் நடத்தை உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் மற்றவர்களுக்கு தொந்தரவாக உள்ளது என்றும் கூறினார். அத்துடன். ஷ்ரேயா, மேடம், வெளிப்படையாக சங்கடமாக இருந்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது, மேலும் அந்த நபர் அவளது கையைப் பிடித்த விதம் மோசமானது என்றும் கூறினார்.
அசௌகரியத்தை தரும்
மற்றொருவர், "ஒருவரின் தனிப்பட்ட இடத்தை மதிப்பதற்கு பதிலாக உதித் அவளைப் பிடித்துக் கொண்டே தொடர்ந்து பேசினார், இது அசௌகரியத்தை மட்டுமே அதிகரித்தது. இதுபோன்ற செயல்கள் மரியாதை அற்றவை, அவற்றை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளக்கூடாது" என்று கூறினார்.
மேலும் ஒருவர் "அவருக்கு வீட்டில் ஒரு மனைவி இருக்கிறார், ஆனால் இன்னும், அவரும் அவரது மகனும் அல்காவுடன் பேசும் விதம் அவரது மனைவியை முற்றிலும் அவமதிப்பதாகும்." "அல்கா அதிருப்தியடைந்தவளாகத் தெரிகிறார். இந்த துன்புறுத்தலை நிறுத்துங்கள் உதித்." என்றார்
உதித்தின் விளக்கம்
உதித் நாராயன் ரசிகைக்கு முத்தமிட்ட வீடியோக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதகுறித்து விளக்கமளித்தார், அதில், "ரசிகர்கள் மிகவும் பைத்தியக்காரத் தனமாக இருப்பர். நாங்கள் அப்படி இல்லை, நாங்கள் ஒழுக்கமான மனிதர்கள். சிலர் இதை ஊக்குவித்து இதன் மூலம் தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள்.
கூட்டத்தில் நிறைய பேர் இருந்தனர், எங்களுக்கு மெய்க் காப்பாளர்களும் இருந்தனர். ஆனால் ரசிகர்கள் தங்களை சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று நினைக்கிறார்கள், எனவே ஒருவர் கைகுலுக்க தங்கள் கைகளை நீட்டுகிறார்கள், சிலர் கைகளை முத்தமிடுகிறார்கள்.. இதெல்லாம் பைத்தியக்காரத்தனம். அதில் இவ்வளவு கவனம் செலுத்தக் கூடாது" என்று கூறி உள்ளார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்