Urvasi Rautela: ஊர்வசியை ஒதுக்கிய நடிகர்.. வாடிப்போன முகம்.. கமெண்ட்டில் கொந்தளிக்கும் மக்கள்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Urvasi Rautela: ஊர்வசியை ஒதுக்கிய நடிகர்.. வாடிப்போன முகம்.. கமெண்ட்டில் கொந்தளிக்கும் மக்கள்..

Urvasi Rautela: ஊர்வசியை ஒதுக்கிய நடிகர்.. வாடிப்போன முகம்.. கமெண்ட்டில் கொந்தளிக்கும் மக்கள்..

Malavica Natarajan HT Tamil
Jan 30, 2025 02:46 PM IST

Urvasi Rautela: டாக்கு மகராஜ் படத்தின் வெற்றி விழாவில் நடிகை ஊர்வசி ரௌத்தேலாவை பாலைய்யா ஒதுக்கியதால் நெட்டிசன்கள் கொதித்து வருகின்றனர்.

Urvasi Rautela: ஊர்வசியை ஒதுக்கிய நடிகர்.. வாடிப்போன முகம்.. கமெண்ட்டில் கொந்தளிக்கும் மக்கள்..
Urvasi Rautela: ஊர்வசியை ஒதுக்கிய நடிகர்.. வாடிப்போன முகம்.. கமெண்ட்டில் கொந்தளிக்கும் மக்கள்..

வைரலாகும் வெற்றி விழா

அந்த விழாவில் படத்தின் முன்னணி நடிகர்கள் மேடையில் இருந்தனர். ஆனால், நடிகை ஊர்வசி ரௌத்தேலாவை நடிகர் பாலைய்யாவும், மற்ற படக்குழுவினரும் புறக்கணித்ததாகவும், அதனால் நடிகை ஊர்வசி ரௌத்தேலாவின் முகம் வாடியதாகவும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டாக்கு மகராஜ்

பழம்பெரும் டோலிவுட் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த டாக்கு மகாராஜ் படம் ஜனவரி 12ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. விமர்சகர்களிடமிருந்து கலவையான பதிலைப் பெற்ற இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது.

பாபி கோலி இயக்கிய இந்தப் படத்தை எஸ்.எஸ்.தமன் இசையின் மூலம் வேற லெவலுக்கு கொண்டு சென்றார். பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாகவும், பிரக்யா ஜெய்ஸ்வால், ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் சாந்தினி சவுத்ரி ஆகியோர் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். படத்தின் ஒரு ஐட்டம் பாடலில் ஊர்வசி ரௌத்தேலா நடத்திருப்பார்.

கண்டுகொள்ளாத பாலைய்யா

படம் வெளியாகி மூன்று வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் படக்குழு ஹைதராபாத்தில் படத்தின் வெற்றியை கொண்டாடினர். இதில், படத்தின் முன்னணி நடிகர்கள் மேடையில் இருந்தனர். ஆனால், அவர்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுப்பது, சிரித்து பேசுவது என இருந்தனர். ஆனால், மேடையிலேயே இருந்த ஊர்வசியை யாரும் கண்டுகொள்ளவே இ்லலை. இதனால், ஊர்வசியின் முகம் வாடியதுடன், அவர் கண்கள் அந்த நிகழ்ச்சியில் இருப்பதை விரும்பவில்லை என்பதை உறுதி செய்தது. முகபாவனைகள் மூலமே அவர் தனது அதிருப்தியை மேடையில் காட்டியுள்ளார்.

நெட்டிசன்கள் கருத்து

இதுகுறித்த வீடியோ, வெளியானதும் இணையவாசிகள் அனைவரும் பாலைய்யாவையும் படக்குழுவினரையும் விமர்சித்து வருகின்றனர். கலைஞர்களை ஒரே மாதிரியாக நடத்தும் மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதனால்தான் பெரும்பாலான நடிகைகள் மன அழுத்தத்திற்கு செல்கிறார்கள் என்றும் விமர்சித்து வருகின்றனர். அதேசமயம், அழகு ஒவ்வொரு முறையும் வேலை செய்யாது என்றும், முன்னணி நடிகர்களால் புறக்கணிக்கப்படும் முதல் நடிகை இவர் தானா என்று பலரும் கிண்டலாக கேள்வி எழுப்பினர்.

தபிடி திபிடி பாடல்

முன்னதாக டாக்கு மகராஜ் படத்தில் இடம்பெற்ற 'தபிடி திபிதி..' பாடல் வரிகளில் வரும் 'தப்பங்குச்சி' எனும் பாடல் வரிகள் பலராலும் விமர்சிக்கப்பட்டது. 64 வயதான பாலகிருஷ்ணா 30 வயதான நடிகை ஊர்வசி ரௌத்தேலாவுடன் மிகவும் மோசமாக நடனமாடுகிறார். ஒரு இளம் பெண் தனது தாத்தாவுடன் நடனமாடுகிறாள் இருந்தாலும் பாலைய்யாவுடன் ஊர்வசி ரௌத்தேலா மிகவும் தைரியமாக நடித்திருந்தார் என்றும் கூறி விமர்சித்து வருகின்றனர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.