Bigg Boss Title Winner: பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார் எனத் தெரியுமா? வைரலாகும் தகவல்.. குஷியில் ரசிகர்கள்..
Bigg Boss Title Winner: பிக்பாஸ் சீசன் 8ன் டைட்டில் வின்னர் யார் என்ற தகவல் வெளியே வந்ததாக நெட்டிசன்கள் சோசியல் மீடியா முழுவதும் கூறி வருகின்றனர்.

Bigg Boss Title Winner: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இப்போது பலரின் ஹாட் டாப்பிக்காக உள்ளது. வழக்கமாக இதுவரை ஒளிபரப்பப்பட்ட 7 சீசன்களை காட்டிலும் முற்றிலும் வித்யாசமான கோணத்தில் தொடங்கப்பட்டது தான் இந்த சீசன்.
விஜய் சேதுபதியின் பிக்பாஸ்
கடந்த அக்டோபர் 6ம் தேதி வெளியான பிக்பாஸ் 8வது சீசனை முதல் முறையாக தொகுத்து வழங்கி வருகிறார் விஜய் சேதுபதி. பிக்போஸ் வீட்டில் போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள் பெரும்பாலும் விஜய் டிவி வீட்டிற்குள் இருந்தே வந்ததால் அங்கேயே பலரின் எதிர்பார்ப்புகள் குறையத் தொடங்கியது. மேலும், விஜய் டிவி மட்டுமல்லாமல், ஹாட்ஸ்டார் லைவிலும் 24X7 மணி நேர ஒளிபரப்பாக பிக்பாஸ் ஓடுவதால் அந்நிகழ்ச்சியின் டிஆர்பி தொடக்கத்திலேயே சற்று குறையத் தொடங்கியது.
பிக்பாஸில் புது டாஸ்க்
இதனை எல்லாம் சரி செய்து பிக்பாஸ் போட்டியை நடத்த திட்டமிட்ட அணி, பிக்பாஸ் வீட்டை இரண்டாக பிரித்து ஆண்கள் வீடு, பெண்கள் வீடு என புதிய பந்தத்தை ஏற்படுத்தியது. அத்துடன், வீட்டில் உள்ள போட்டியாளர்களில் ஒருவர் வாரம் வாரம் அணி மாற வேண்டும், போட்டியும் ஆண்கள் அணி பெண்கள் அணி என நடைபெற வேண்டும் என பல டாஸ்க்குகளுக்கு புதுப்புது விதிகளையும் அறிவித்தது.
மக்களை கவராத பிக்பாஸ்
இதையடுத்து, போட்டியாளர்கள் உள்ளே நுழையும் போதே ட்ராபி கொடுப்பது போன்று சில புது யுக்திகளை கையாண்டாலும் போட்டியாளர்கள் மக்களைக் கவர தவறிவிட்டனர்.
உள்ளே இருப்பவர்கள் யாரும் மற்றவர்களை போட்டியாக நினைக்காமல், சண்டையிடாமல், அவர்களுடன் இணக்கமாக செல்ல நினைத்ததே இந்த நிலைக்கு காரணம்.
பரபரப்பை ஏற்படுத்தி Freeze task
இந்த சிந்தனை தான் பிக்பாஸ் எனும் நிகழ்ச்சி மக்களை இழுத்தது. இப்படியே நாட்கள் செல்ல செல்ல, பிக்பாஸ் வீட்டில் நடந்த freeze டாஸ்கிற்கு பின் தான் பலரும் தங்கள் விளையாட்டையே விளையாடத் தொடங்கினர். இதற்குள் வைல்டு கார்ட் சுற்றில் வந்த பாதி பேர் இருந்த இடம் தெரியாமலே காணாமல் போயினர்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முதல் நாள் எலிமினேஷன், அடுத்தடுத்த வாரத்தில் எலிமினேஷன், வைல்டு கார்டு என்ட்ரி, பழைய போட்டியாளர்கள் என்ட்ரி, டபுள் எலிமினேஷன் என பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் எண்ணிக்கை ஏறி இறங்கியது.
இறுதிப் போட்டி
இதையடுத்து பிக்பாஸ் சீசன் 8ல் ரயான் முதல் ஆளாக டிக்கெட் டூ பினாலே வென்றதால் இறுதி போட்டியில் உள்ளார். இவரைத் தொடர்ந்து இறுதி போட்டிக்கு முத்துக்குமரன், விஜே விஷால், சௌந்தர்யா, பவித்ரா ஆகியோர் அடுத்தடுத்து இறுதி நாளில் டைடில் வெல்ல காத்திருக்கின்றனர்.
நாளை பிக்பாஸ் வீட்டின் இறுதி நாள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார் என்ற கேள்வி தான் தமிழ்நாட்டு மக்களின் மனதில் எழுந்து வருகிறது.
டைட்டில் வின்னர்
இந்த சமயத்தில், நெட்டிசன்ஸ் பலரும் பிக்பாஸ் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர். ரயான் மக்களின் குறைான வாக்குகளை பெற்றுள்ளதாகவும், முத்து அதிக வாக்குகளை பெற்றுள்ளதாகவும் கூறினர்.
அத்துடன், டைட்டில் வின்னர் கோப்பையை கைப்பற்றிய முத்துக்குமரனுக்கு நாளை இறுதி நாள் நிகழ்ச்சியில் பரிசுத் தொகையும் வழங்கப்படும் எனக் கூறி வருகின்றனர். ஆனால், உண்மையான வெற்றியாளர் யார் என்பதை நாளை நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யும் போது தான் தெரியும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்