Netflix OTT: நெட்பிளிக்ஸில் இருந்து 90'ஸ் கிட்ஸின் ஃபேவரைட் படங்கள் நீக்கம்.. கடைசியா ஒருமுறை இதை எல்லாம் பாத்திடுங்க!
Netflix OTT: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் 90'ஸ் கிட்களின் ஃபேவரைட் படமான ஜுராசிக் பார்க் சீரிஸ் படங்கள், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் படங்கள் உள்பட பல ஜானர் படங்களை நீக்குவதாக அறிவித்துள்ளது.

Netflix OTT: ஓடிடி தளங்களில் முன்னணி இடத்தைப் பிடித்த நெட்ப்ளிக்ஸ் புதிய புதிய படங்கள், தொடர்களை தனது பட்டியலில் சேர்த்துக் கொண்டே இருக்கிறது. அதேசமயம் நெட்ப்ளிக்ஸ் அடிக்கடி தனது படங்கள் மற்றும் தொடர்களை நீக்குகியும் வருகிறது.
நெட்பிளிக்ஸில் இருந்து நீக்கப்படும் படங்கள்
இந்த முறை ஏப்ரல் மாதத்தில் நெட்ப்ளிக்ஸில் இருந்து சில படங்கள், தொடர்கள் நீக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை நெட்ப்ளிக்ஸில் இருந்து எந்தெந்த படங்கள் மற்றும் தொடர்கள் நீக்கப்படும் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. நீங்கள் இன்னும் இந்த படங்களைப் பார்க்கவில்லை என்றால், உடன் பார்த்துவிடுங்கள்.
இந்த படங்களுக்கு இதுவே கடைசி நாள்
ஏப்ரல் 8ம் தேதிக்குள் நெட்ப்ளிக்ஸ் 60க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் தொடர்களை நீக்கியுள்ளது. ஏப்ரல் 9 மற்றும் 10 ஆம் தேதிகளுக்கு இடையில் 12க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் தொடர்கள் நீக்கி உள்ளன. லா ஓரிஜினல்ஸ் (LA Originals 2020) ஏப்ரல் 9 ஆம் தேதி நெட்ப்ளிக்ஸில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதோடு, கோஸ்ட் பஸ்டர் ஆஃப்டர் லைஃப் (Ghostbusters Afterlife) படமும் ஏப்ரல் 9ம் தேதி நெட்ப்ளிக்ஸில் இருந்து நீக்கப்படும்.
90'ஸ் கிட் ஃபேவரைட் படங்கள்
நெட்ப்ளிக்ஸ்.காம்/ட்யூடம் படி எ க்குவைட் பிளேஸ் 2 (A Quiet Place 2) ஏப்ரல் 12ம் தேதி நெட்ப்ளிக்ஸில் இருந்து நீக்கப்படும். 2018 ஆம் ஆண்டில் வெளியான ஹெரிடிட்டரி (Hereditary), ஜூராசிக் பார்க் (Jurassic Park), ஜூராசிக் வேர்ல்டு ஃபாலென் கிங்டம் (Jurassic World Fallen Kingdom) மற்றும் ஜுராசிக் பார்க் லாஸ்ட் வேர்ல்டு (Jurassic Park The Lost World) ஆகிய படங்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி நெட்ப்ளிக்ஸில் இருந்து நீக்கப்படும்.
ஹாரர் படங்கள்
இவற்றைத் தவிர, ஹாரர் படமான ஸ்கிரீமின் (Scream) மூன்று பாகங்களும் ஏப்ரல் 17 ஆம் தேதி நெட்ப்ளிக்ஸில் இருந்து நீக்கப்படும். நீங்கள் இந்த மூன்று படங்களையும் இன்னும் பார்க்கவில்லை என்றால், உடனே பாருங்கள். பிரியங்கா சோப்ரா நடித்த பே வாட்ச் (Baywatch) படம் ஏப்ரல் 24ம் தேதி நெட்ப்ளிக்ஸில் இருந்து நீக்கப்படும். கூடுதலாக, ஏப்ரல் 25ம் தேதிக்குப் பிறகு டிரான்ஸ்பார்மர்ஸ் ரைஸ் ஆஃப் தி பீஸ்ட் (Transformers Rise of the Beasts) நெட்ப்ளிக்ஸில்் கிடைக்காது.
பட்டியலில் பாலிவுட் படங்கள்
நெட்ப்ளிக்ஸ் நீக்கவிருக்கும் படங்களின் பட்டியலில் சில இந்தி படங்களும் உள்ளன. இதில் அபிஷேக் பச்சன் நடித்த டெல்லி 6 படம் ஏப்ரல் 30ம் தேதி நெட்ப்ளிக்ஸில் இருந்து நீக்கப்படும். இந்த படம் 2009ல் வெளியானது. சோனம் கபூர் இந்த படத்தில் அபிஷேக் பச்சனுடன் நடித்துள்ளார்.
ஷாஹித் கபூர் நடித்த ஹைதர் படமும் ஏப்ரல் 30ம் தேதி நெட்ப்ளிக்ஸில் இருந்து நீக்கப்படும். இதோடு, அவர் நடித்த மற்றொரு படம் கமினே நெட்ப்ளிக்ஸில் இனி பார்க்க முடியாது. ரன்பீர் கபூர் நடித்த ‘ஜக்கா ஜாசூஸ்’ படமும் இந்த பட்டியலில் உள்ளது.
சுஷாந்த் சிங்கின் படங்கள்
ஏப்ரல் 30 ஆம் தேதி லைஃப் இன் எ மெட்ரோ (Life in a Metro) படத்துக்கும் கடைசி நாள். இவற்றைத் தவிர, திஸ் இஸ் தி எண்ட் (This is the End), ப்ர்ஃபி (Barfi), அண்டர் வேர்ல்டு வார்ஸ் (Underworld Blood Wars), வீ ஆர் ஃபேமிலி (We Are Family), ஆல்பா (Alpha), சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த கை போ சே (Kai Po Che), தி வெட்டிங் கெஸ்ட் (The Wedding Guest), சீச்சோர் (Chhichhore), மற்றும் 2 ஸ்டேட்ஸ் (2 States) போன்ற படங்கள் ஏப்ரல் 30ம் தேதி வரை மட்டுமே நெட்ப்ளிக்ஸில் பார்க்க கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
