நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்ட அதிரடி அனொன்ஸ்மெண்ட்.. த்ரில் சீரிஸ் வென்ஸ்டேவின் 2வது சீசன் எப்போ ரிலீஸ் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்ட அதிரடி அனொன்ஸ்மெண்ட்.. த்ரில் சீரிஸ் வென்ஸ்டேவின் 2வது சீசன் எப்போ ரிலீஸ் தெரியுமா?

நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்ட அதிரடி அனொன்ஸ்மெண்ட்.. த்ரில் சீரிஸ் வென்ஸ்டேவின் 2வது சீசன் எப்போ ரிலீஸ் தெரியுமா?

Malavica Natarajan HT Tamil
Published Jun 05, 2025 05:13 PM IST

நெட்ஃபிளிக்ஸின் மிகப்பெரிய வெற்றித் திகில் தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகிறது. முன்னதாகவே ட்ரெய்லர் வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ், தற்போது முதல் 6 நிமிட வீடியோவை வெளியிட்டுள்ளது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் பயங்கரமாக இருக்கும் என்பதை இந்த வீடியோ காட்டுகிறது.

நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்ட அதிரடி அனொன்ஸ்மெண்ட்.. த்ரில் சீரிஸ் வென்ஸ்டேவின் 2வது சீசன் எப்போ ரிலீஸ் தெரியுமா?
நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்ட அதிரடி அனொன்ஸ்மெண்ட்.. த்ரில் சீரிஸ் வென்ஸ்டேவின் 2வது சீசன் எப்போ ரிலீஸ் தெரியுமா?

வென்ஸ்‌டே இரண்டாம் பாகம்

நெட்ஃபிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட வென்ஸ்‌டே தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. IMDb இல் 8 ரேட்டிங்கைப் பெற்றது. இதனால் இந்த சீரிஸின் இரண்டாம் பாகத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், நெட்ஃபிளிக்ஸ் வியாழக்கிழமை முதல் 6 நிமிட வீடியோவை வெளியிட்டுள்ளது.

தொடர் கொலைகாரனின் பிடியில் வென்ஸ்டே

இந்த வீடியோவில், வென்ஸ்‌டே என்ற பெண் ஒரு நாற்காலியில் கட்டப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். தான் ஒரு தொடர் கொலைகாரனின் பதுங்குமிடத்தில் இருப்பதாகவும், அடுத்த இலக்கு தான்தான் என்று அந்த கொலைகாரன் நினைப்பதாகவும் அவள் குரல் ஒலிக்கிறது. அந்த காட்சி முடிந்து, ஆறு வாரங்கள் முன்னதாக செல்கிறது. அவளுக்கு அந்த நிலைமை ஏன் ஏற்பட்டது என்பதை விளக்கும் ஃபிளாஷ்பேக் அது.

வென்ஸ்‌டே 2வது பாகம் எப்போது?

வென்ஸ்‌டே இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அப்போதே இந்த புதிய பாகத்தின் ஸ்ட்ரீமிங் தேதிகளை நெட்ஃபிளிக்ஸ் அறிவித்தது. இந்தத் தொடரின் முக்கிய கதாபாத்திரமான வென்ஸ்‌டே ஆடம்ஸ், இந்த புதிய பாகத்தில் மிகவும் ஆபத்தானவளாக மாறி பயமுறுத்த வருகிறாள் என்பதை ட்ரெய்லர் காட்டுகிறது.

“உங்கள் காலண்டரை இப்போதே காலியாக்கி வையுங்கள். வென்ஸ்‌டே 2வது பாகம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி அன்று நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது” என்று கூறும் டைட்டிலுடன் அப்போது ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. வென்ஸ்‌டே இரண்டாம் பாகம் இரண்டு பகுதிகளாக வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பகுதி ஆகஸ்ட் 6 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படும். இரண்டாம் பகுதி செப்டம்பர் 3 அன்று வெளியாகும் என்று நெட்ஃபிளிக்ஸ் தெரிவித்துள்ளது.

வென்ஸ்‌டே வெப் சீரிஸ்

வென்ஸ்‌டே என்பது ஒரு அமெரிக்க சூப்பர்நேச்சுரல் திகில் நகைச்சுவை தொடர். சார்லஸ் ஆடம்ஸ் உருவாக்கிய வென்ஸ்‌டே ஆடம்ஸ் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட தொடர் இது. ஜென்னா ஆர்டெகா இந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு சில அமானுஷ்ய சக்திகள் உள்ளன. தனது சகோதரனை பாய்ஸ் போலோ அணியினர் துன்புறுத்தியதை அறிந்து, அவர்களை நீச்சல் குளத்தில் தள்ளி பிராணிகளை விட்டு விடுகிறாள்.

ஆவலில் ரசிகர்கள்

இதை அறிந்த பள்ளி நிர்வாகம் அவளை பள்ளியில் இருந்து நீக்குகிறது. அங்கிருந்து அவள் வெர்மாண்டில் உள்ள ஜெரிகோவில் உள்ள நெவர்மோர் அகாடமிக்கு செல்கிறாள். அங்கு கூட அவளது நடத்தை மற்ற மாணவர்களுக்கு வித்தியாசமாகத் தெரிகிறது. ஆனால், தனது சக்திகளைப் பயன்படுத்தி அங்கு நடக்கும் ஒரு கொலை மர்மத்தை தீர்க்கிறாள். முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் ஆகஸ்டில் வெளியாகவிருக்கும் வென்ஸ்‌டே இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.