Nenjathai Killathe Serial: நிச்சயதார்த்த மேடையில் நடுங்கிய கௌதம் கைகள்.. விலகி நின்ற மதுமிதா
Nenjathai Killathe Serial: அதிதி போட்டோ எடுத்து கொண்டு இருக்க அவளது மாமா உனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கா என்று கேட்க இல்லை அக்காவுக்கு இது சரியான வாழ்க்கை தான் என்று சொல்கிறாள். அடுத்து போட்டோ எடுக்க போட்டோகிராபர் இருவரை நெருங்கி நிற்க சொல்கிறார்.

Nenjathai Killathe Serial: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலின் இன்றைய ( ஆகஸ்ட் 1 ) எபிசோட் அப்டேட் பற்றி பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நெஞ்சத்தை கிள்ளாதே. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மதுமிதா, கௌதம் நிச்சயத்திற்கு மோதிரம் எடுத்து தயாரான நிலையில் இன்று ( ஆகஸ்ட் 1 ) நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அரைகுறை மனதுடன் நிச்சயதார்த்தம்
அதாவது, நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகள் நடக்க இரண்டு குடும்பமும் கௌதம் வீட்டில் ஒன்று சேர்க்கின்றனர், அதன் பிறகு மதுமிதா, கௌதமை மேடைக்கு ஏற்றுகின்றனர். இருவரும் அரைகுறை மனதுடன் நிச்சயதார்த்த மேடையில் ஏறுகின்றனர்.
அதன் பிறகு மாலை மாற்றி கொள்ள சொல்ல முதலில் மதுமிதா மாலை போட கௌதம் மாலை போட தயங்குகிறான், நடுக்கத்துடன் மாலை போடுகிறான், அதனை தொடர்ந்து இருவரும் மோதிரம் மாற்றி கொள்கின்றனர்.
சரியான வாழ்க்கை
இதையெல்லாம் அதிதி போட்டோ எடுத்து கொண்டு இருக்க அவளது மாமா உனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கா என்று கேட்க இல்லை அக்காவுக்கு இது சரியான வாழ்க்கை தான் என்று சொல்கிறாள். அடுத்து போட்டோ எடுக்க போட்டோகிராபர் இருவரை நெருங்கி நிற்க சொல்கிறார்.
இருவரும் நெருக்கம்
ஆனால் இருவரும் நெருக்கம் காட்ட தயங்கி கொண்டு தள்ளி நிற்கின்றனர், சந்தோஷ் மற்றும் அவனது மனைவி கௌதமை தள்ளி நிற்க சொல்லியும் அவன் கேட்காத நிலையில் அவனை பிடித்து தள்ளி விட அவன் மதுமிதா மீது மோதி கொள்ள இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
அடுத்து நடக்க போவது என்ன
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
நேற்றைய எபிசோட்
மீனாட்சி தீபாவின் மீது மீனாட்சி காலை தூக்கி போட, அவள் தூக்கம் கலைந்து தூங்க முடியாமல் தவிக்கிறாள். இதனால் தீபா வெளியே வர கார்த்திக் அங்கே நின்று கொண்டிருந்தான். தீபாவை பார்த்ததும் தூங்கலையா என்று கேட்க, உங்களை பார்க்கணும் போல இருந்தது. அதனாலதான் வெளியில வந்தேன் என்று சொல்கிறாள்.
பிறகு உங்களுக்கு ஏதாவது வேணுமா என்று கேட்க கார்த்திக் எனக்கு குல்பி வேண்டும் என்று சொல்கிறான். தீபா உடனே கொண்டு வந்து தரேன் என்று வேக வேகமாக சென்று ரம்யாவுக்கு போன் போட்டு குல்பி வாங்கிட்டு வந்து கொடுக்கும்படி உதவி கேட்கிறாள்.
ரம்யாவும் அதைக் கொண்டு வந்து கொடுக்க, தீபா நானே உங்களுக்காக வெளில போய் வாங்கிட்டு வந்தேன் என்று பொய் சொல்லி, கார்த்திக்கிடம் கொடுத்தாள். அதை வாங்கிக் கொள்ளும் கார்த்திக் நீங்க சொன்னத நான் நம்பிட்டேன். ரம்யா கார் வந்து போனதை நானும் கவனிச்சேன் என்று சொல்கிறான்.
ரம்யா வேறு வழியின்றி கொஞ்சம் பணத்தை கொடுத்து ஒழுங்கு மரியாதையா வெளியூர் ஓடிப் போயிடு என்று திட்டி அனுப்புகிறாள். இதை ரம்யாவின் அப்பா பார்த்து விடுகிறார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்