NEEK Review: ‘கோல்டன் ஸ்பேரோ.. ‘ என்னா டைரக்ஷன்… எப்படி தனுஷ்?’; ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படம் எப்படி இருக்கு?
NEEK Review: தனுஷின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

பிரபல நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா, தனுஷ் இயக்கி இருக்கும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
படம் எப்படி?
அந்தப்பதிவில், ‘உலக அளவில் கவனம் பெற்ற நடிகர் மற்றும் இயக்குநர் தனுஷ் இயக்கி இருக்கும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
என்ன ஒரு அருமையான பொழுதுபோக்கு திரைப்படம், இக்கால தலைமுறைக்கான படமாக இந்தப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது; செம ஜாலியாக நகரும் இந்தப்படம் எமோஷனலாகவும், அதே நேரம், தனித்துவமாகவும் இருக்கிறது. ஆனால், தனுஷ் சார் எனக்கு ஒரு கேள்வி.. ?
நீங்கள் இருக்கும் பிசியான வேலைகளுக்கிடையே எப்படி இப்படி ஒரு தென்றல் போன்ற படத்தை எடுத்தீர்கள்; அதுவும் ராயன் படத்தை இயக்கிய உடனே... என்ன ஒரு டைரக்ஷன்.. படத்தில் மிகச்சரியான, கவனம் ஈர்க்கும் இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நடிகர், நடிகைகளுக்கு என்னுடைய வாழ்த்துகள்.’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
களம் 3
‘பவர் பாண்டி’, ‘ராயன்’ ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கியிருக்கும் புதிய படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’.இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருடன் மலையாள நடிகர் மாத்யூ தாமஸ், மலையாள நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர், அனிகா சுரேந்திரன், , வெங்கடேஷ் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை தனுஷ் தன்னுடைய வொண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்திருக்கிறார். இந்தப்படத்தில் இருந்து முன்னதாக வெளியான ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
இரண்டாவது சிங்கிளான ‘காதல் ஃபெயில்’ தனுஷ் குரலில் வெளியானது. முன்னதாக இந்தப்படம் அடுத்தமாதம் பிப்ரவரி 6ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதற்கிடையே பொங்கலுக்கு வருவதாக சொன்ன விடாமுயற்சி திரைப்படம், பிப்ரவரி 6ம் தேதி வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில்,‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படம் பிப்ரவரி 21ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே தான் இயக்கும் இட்லிகடை படத்தின் போஸ்டரையும் அண்மையில் தனுஷ் வெளியிட்டார். இந்தப்படத்தில் அவருடன் ராஜ்கிரண், நித்யாமேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்