‘2 பேரில் இருந்து 4 பேராக.. இதற்கு மேலே என்ன வேண்டும் பார்ட்னர்’ -திருமண நாளில் எமோஷனலாக பதிவிட்ட நயன்தாரா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘2 பேரில் இருந்து 4 பேராக.. இதற்கு மேலே என்ன வேண்டும் பார்ட்னர்’ -திருமண நாளில் எமோஷனலாக பதிவிட்ட நயன்தாரா!

‘2 பேரில் இருந்து 4 பேராக.. இதற்கு மேலே என்ன வேண்டும் பார்ட்னர்’ -திருமண நாளில் எமோஷனலாக பதிவிட்ட நயன்தாரா!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 09, 2025 04:40 PM IST

நயன்தாரா தனது திருமண ஆண்டு விழாவில் விஷ்ணு விஷாலுக்கு அழகான பதிவை பகிர்ந்துள்ளார். அவர்கள் ஜூன் 2022 இல் திருமணம் செய்து கொண்டனர்.

‘2 பேரில் இருந்து 4 பேராக.. இதற்கு மேலே என்ன வேண்டும் பார்ட்னர்’ -திருமண நாளில் எமோஷனலாக பதிவிட்ட நயன்தாரா!
‘2 பேரில் இருந்து 4 பேராக.. இதற்கு மேலே என்ன வேண்டும் பார்ட்னர்’ -திருமண நாளில் எமோஷனலாக பதிவிட்ட நயன்தாரா!

கவிதை எழுதிய நயன்தாரா

அதில் அவர், ‘ எங்களை வேறு எப்படி விவரிப்பது என்று எனக்குத் தெரியவில்லை (சிவப்பு இதயம்). நீங்கள் என் ஆன்மா எப்போதும் விரும்பியவர் (ஹாலோ முகம்).

இரண்டு பேரில் இருந்து நான்கு பேராக…இதைவிட அதிகமாக கேட்க முடியாது.. நீங்கள் எனக்கு அன்பு எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டினீர்கள்’ இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் பாட்னர். உன்னை, எப்போதும் என்றென்றும் நேசிக்கிறேன்' என்று பதிவிட்டு இருக்கிறார்.

வாடகைத்தாய் மூலம் குழந்தைகள்

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஜூன் 2022 -ல் திருமணம் செய்து கொண்டனர். அதே ஆண்டின் அக்டோபரில், அவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். அவர்கள்தான் உயிர் மற்றும் உலகு.

நயன்தாரா கடைசியாக வெளியான மாதவன், சித்தார்த் நடித்து சசிகாந்த் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 4ம் தேதி வெளியா (ஓடிடி) டெஸ்ட் படத்தில் நடித்திருந்தார். தற்போது சீரஞ்சீவியின் 157 வது படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார். அனில் ரவிபுடி இயக்கிய இந்த படம் 2026-ம் ஆண்டு வெளியாக உள்ளது.

அத்துடன் செந்தில் நல்லசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ராக்காயி படமும் கைவசம் இருக்கிறது. மலையாளத்தில் மகேஷ் நாராயணனின் மிகவும் எதிர்பார்க்கப்படும் மலையாள படமான MMMN (மோகன் லால் மற்றும் மம்முட்டி இணைந்து நடிக்கும் படம்) நிவின் பவுலியுடன் ஒரு படம் ஆகியவையும் லைன் அப்பில் இருக்கிறது.