Nayanthara: ‘அந்த படத்தில் நடித்தது தவறு.. ’ இன்றும் நினைத்து கவலைப்படும் நயன்தாரா!
Nayanthara: நயன்தாரா ஒரு பேட்டியில், கஜினி படத்தில் தனக்கு முக்கியத்துவம் இல்லை என்று வெளிப்படையாகப் பேசி உள்ளார்.

‘அந்த படத்தில் நடித்தது தவறு.. ’ இன்றும் நினைத்து கவலைப்படும் நயன்தாரா! (Instagram)
Nayanthara: தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நயன்தாரா, புதிய தலைமுறை நடிகைகளுக்கு பெரும் உத்வேகமாக இருந்து வருகிறார்.
நயன்தாராவுக்கு இன்றும் தமிழில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறார்கள். அவரை தேடி சூப்பர் ஸ்டார் படங்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த நேரத்தில், அவர் மிகவும் கிளாமராக நடிக்க தயாராக இருந்தார்.
நயன்தாரா எடுத்த முடிவில் வந்த தவறு
இன்று நயன்தாரா தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்கிறார். பெண்களை மையமாக கொண்ட திரைப்படங்களுக்கு பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைத் தரும் சில பெண் முன்னணி நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர். நயன்தாரா தனது வாழ்க்கையில் சில தவறுகளை செய்து உள்ளார். அப்போது கஜினி படத்தில் நடித்தது தவறு என்று நயன்தாரா கருதினார்.