Nayanatara: 15 ஆண்டுகள் கழித்து கன்னட சினிமாவில் மீண்டும் நயன்தாரா.. கன்பார்ம் செய்த வில்லன் நடிகர்
Actress Nayantara: தமிழ், தெலுங்கு, தாய் மொழி மலையாளம் என மாறி மாறி நடித்து வந்த நயன்தாரா 15 ஆண்டுகள் கழித்து கன்னட சினிமாவில் மீண்டும் நடிக்கிறார். இது அவரது இரண்டாவது கன்னட படமாக அமைகிறது.

15 ஆண்டுகள் கழித்து கன்னட சினிமாவில் மீண்டும் நயன்தாரா.. கன்பார்ம் செய்த வில்லன் நடிகர்
கேஜிஎஃப் சீரிஸ் படங்களின் வெற்றியை தொடர்ந்து கன்னட நடிகர் யாஷ் நடித்து வரும் புதிய படம் டாக்ஸிக். மலையாள சினிமாக்களில் ஹீரோயினாக நடித்த கீது மோகன் தாஸ் இந்த படத்தை இயக்குகிறார். இவர் தமிழில் சத்யராஜ் - சுஹாசினி நடித்த என் பொம்மகுட்டி அம்மாவுக்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார்.
டாக்ஸிக் படத்துக்காக கர்நாடக வனப்பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களை படக்குழுவினர் வெட்டி சாய்த்துள்ளது தொடர்பாக விளக்கம் கேட்டு கர்நாடக அரசாங்கம் சார்பில் படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையே படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது தெரியவந்துள்ளது.
