தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Nayanthara Gets 50 Crore Rupees For Acting New Ad

Nayanthara Salary: போதுமா நயன்தாரா.. 50 நொடி விளம்பரத்திற்கு ரூ. 50 கோடி சம்பளமா?

Aarthi Balaji HT Tamil
Mar 18, 2024 12:45 PM IST

Nayanthara New Ad: திரையுலகில் ஃபுல் டிமாண்டில் இருக்கும் நயன்தாரா, ஒரு விளம்பரம் செய்ய எவ்வளவு டிமாண்ட் செய்கிறார் என தெரிந்தால் அதிர்ச்சியாகும்.

நயன்தாரா
நயன்தாரா

ட்ரெண்டிங் செய்திகள்

பெரிய வாய்ப்புகள் வந்தால் அதை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ள இவர், சமீபத்தில் ஒரு விளம்பரத்தில் 50 நொடிகள் நடித்து பெரும் சம்பளம் வாங்கியதாக பேச்சு அடிப்பட்டு உள்ளது.

50 வினாடிகள் மட்டுமே நீளும் விளம்பரத்தில் நடித்ததற்காக நயன்தாரா பெற்ற சம்பளம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் தன்னை தேடி வரும் விளம்பர வாய்ப்புகளுக்கு நோ சொல்லாத நயன் 5 கோடி சம்பளம் கேட்கிறாராம்.

இவர் சமீபத்தில் டாடா ஸ்கை நிறுவனத்தின் விளம்பரத்திலும் , 50 நொடிகள் நடித்த மேங்கோ ஜூஸ் நிறுவனத்தின் விளம்பரத்திலும் நடித்ததற்காக 50 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது . 1 நிமிடம் கூட வராத விளம்பரத்துக்கு இத்தனை கோடியா? என சக நடிகைகள் நயனை பார்த்து வாய் பிளந்து இருக்கிறார்கள்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா விளம்பரங்களில் அதிகம் நடிப்பதில்லை. அவர் மிகக் குறைந்த சதவீத விளம்பரங்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார். 

நயன்தாரா எந்த ஒரு பிரபல நிறுவனம் தொடர்பான விளம்பரங்களையும் பிராண்ட் அம்பாசிடராக நடித்தால் மட்டுமே செய்வார். திரையுலகில் ஃபுல் டிமாண்டில் இருக்கும் நயன்தாரா, ஒரு விளம்பரம் செய்ய எவ்வளவு டிமாண்ட் செய்கிறார் என்பது தான் அனைவரின் ஆர்வமான விஷயம்.

ஒரு நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக நடித்த நயன்தாரா, அந்த விளம்பரத்திற்காக அதிக கட்டணம் வசூலித்ததாக இண்டஸ்ட்ரியில் பேசப்படுகிறது. 

நடிகை நயன்தாரா கடந்த ஆண்டு ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் நுழைந்தார். பாலிவுட் கிங் கான் ஷாருக்கானுடன் நடிக்க நயன்தாரா 10 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டாராம். முதல் இந்தி படத்திற்கே நயன்தாரா சம்பளத்தை உயர்த்தி இருந்தாலும் அவருக்கான மார்க்கெட் காரணமாக  தயாரிப்பாளர்கள் அவர் கேட்ட சம்பளத்தை கொடுத்தனர். ஜவான் திரைப்படம் வெளியான நேரத்தில் நயன்தாராவின் சம்பளம் ஹாட் டாபிக் ஆனது. அட்லீ இந்த படத்தை இயக்கி இருந்தார்.

லேடி ஓரியண்டட் படங்களில் நடித்துக்கொண்டே, ஸ்டார் ஹீரோ படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். தங்கள் படத்தில் நயன் இருந்தால் வசூல் தானாக வரும் என்ற நம்பிக்கை தயாரிப்பாளர்களுக்கும் உள்ளது.

ஒரு பக்கம் படங்களில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பிஸியாக இருந்தாலும் விளம்பரங்கள், தன்னுடைய பிஸின்ஸ்கள், புதியதாக விளம்பரங்கள், குடும்ப வாழ்க்கை அனைத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.

நேரம் கிடைக்கும் போது தன் கணவர் விக்னேஷ் சிவன், மகன்கள் உயிர் மற்றும் உலகமுடன் சுற்றுலா சென்று வருகிறார். அது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களும் வெளியீட்டு வருகிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்