கம்பி கட்டுற கதை விடும் நயன்! ரஜினிய பத்தியே இப்படியா! கோபத்தின் உச்சத்தில் ரஜினி ரசிகர்கள்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கம்பி கட்டுற கதை விடும் நயன்! ரஜினிய பத்தியே இப்படியா! கோபத்தின் உச்சத்தில் ரஜினி ரசிகர்கள்!

கம்பி கட்டுற கதை விடும் நயன்! ரஜினிய பத்தியே இப்படியா! கோபத்தின் உச்சத்தில் ரஜினி ரசிகர்கள்!

Suguna Devi P HT Tamil
Dec 20, 2024 09:56 AM IST

கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் நயன்தாரா மீண்டும் அவர் வாயை கொடுத்து புண்ணாக்கியுள்ளார். ரஜினி குறித்து சமீபத்தில் அவர் கூறியது ரஜினி ரசிகர்களை கோபாமடைய செய்துள்ளது.

கம்பி கட்டுற கதை விடும் நயன்! ரஜினிய பத்தியே இப்படியா! கோபத்தின் உச்சத்தில் ரஜினி ரசிகர்கள்!
கம்பி கட்டுற கதை விடும் நயன்! ரஜினிய பத்தியே இப்படியா! கோபத்தின் உச்சத்தில் ரஜினி ரசிகர்கள்!

முதல் படத்திலேயே கோடி 

இவர் அறிமுகமான முதல் படமான ஐயா படத்திலேயே கோடிகளில் சம்பளம் வாங்கினார். அதுவரை தமிழ் கதாநாயகிகள் யாரும் அவ்வளவு சம்பளம் வாங்க வில்லை எனப் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து நயன்தாரா கமிட் ஆன படம் தான் சந்திரமுகி, இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் ஜோடி என நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகி ஆகிவிட்டார். 

இதனைத் தொடர்ந்து விஜய், சூர்யா, அஜித் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்தார். மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் தவிர்க்க முடியாத ஹீரோயின் ஆக உருவெடுத்தார். மேலும் சிம்புவுடன் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டார். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த வல்லவன் திரைப்படத்தில் இருந்து காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. மேலும் பில்லா படத்தில் வரும் பிகினி காட்சிக்காக பெரிதும் பேசப்பட்டார். 

சர்ச்சையில் நயன்- விக்கி 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன், தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். இவர்களது திருமணம் வீடியோ நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது இதில் இடம்பெற்ற நானும் ரவுடிதான் படத்தின் சில நொடிகள் கிளிம்ப்ஸ் வீடியோவிற்கு நடிகர் தனுஷ் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்து இருந்தார். இது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

சமீபத்தில் புதுச்சேரி அரசின் ஹோட்டலை விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டதாகவும் ஒரு செய்தி வைரலானது. ஆனால் அது உண்மையில்லை என புதுச்சேரி அமைச்சரே விளக்கமும் அளித்தார். தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் நயன்தாரா.  

ரஜினியைத் தெரியாது

மலையாள மொழியில் வெற்றி பெற்ற  மணிச்சித்திரத்தாழு படத்தின் ரீமேக் தான் சந்திரமுகி, இப்படத்தை பி. வாசு இயக்கி இருந்தார். இதில் ரஜினி, பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேலு  மற்றும் நயன்தாரா எனப் பலர் நடித்து இருந்தனர். தமிழில் இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் நடித்தது குறித்து நடிகை நயன்தாரா சமீபத்தில் தி ஹாலிவுட் ரிப்போர்ட்டருடன் நடந்த உரையாடலில் பகிர்ந்துள்ளார். அதில்,  “சந்திரமுகி படத்தில்எனக்கு முதல் காட்சி ரஜினி சாருடன் தான் இருந்தது. அப்போது அவர் எவ்வளவு பெரிய நடிகர் என்பது எனக்கு தெரியாது. அதுதான் எனக்கு மிகவும் உதவியது என்று நினைக்கிறேன். அப்போது நான் அந்த அளவுக்கு சூப்பர் ஸ்டார்களுடன் மட்டுமே பணியாற்றியிருக்கிறேன். எனவே, அவர்களின் பிரபலம் குறித்தும், நச்சத்திரம் என்பது குறித்தும் அறியாமல் இருப்பது எனக்கு உதவியது என்று கூறியுள்ளார்.

இவ்வாறு நயன் கூறியது நெட்டிசன்கள் மற்றும் ரஜினி ரசிகர்களிடம் கோபத்தை உண்டாக்கியுள்ளது. முத்து படத்திலேயே ரஜினியின் புகழ் ஜப்பான் நாடு வரை சென்றது. மேலும் ரஜினியைத் தெரியாதவர்களே என்று இருந்தது. ஆனால் அண்டை மாநிலமான கேரலாவில் இருந்த நயன்தாரா, அதுவும் ஒரு டிவியின் தொகுப்பாளராக பணியாற்றிய ஒருவருக்கு எப்படி ரஜினிகாந்த் குறித்து தெரியாமல் இருக்கும் என கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுவும் மற்ற மாநிலங்களை விட கேரளாவில் பல தமிழ் படங்கள் நேரடியாக வெளியாகும் சூழல் இருந்து வருகிறது எனவும், பல மலையாளிகள் தமிழை சரளமாக பேசுகின்றனர். இவ்வாறு நயன்தாரா கூறி அவரை பெரிய நட்சத்திரமாக காட்ட முயற்சிக்கிறார் எனவும் குற்றம் சாத்தி வருகின்றனர். 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.