கூட்டத்தில் வைத்து அசிங்கப்படுத்திய நமீதா.. கோபத்தில் நயன் எடுத்த ரிவெஞ்ச்.. அஜித் படத்தில் நடத்த அட்ராசிட்டி!
பில்லா படத்தின் போது தனக்கும் நமீதாவிற்கும் இடையே நடந்த பிரச்சினை குறித்தும், அதற்கு நயன் எடுத்த ரிவெஞ்ச் என்ன என்பது குறித்து பார்க்கலாம்
பில்லா திரைப்படத்தின் போது தனக்கும், நமீதாவிற்கும் இடையே நடந்த மோதல் குறித்து நயன்தாராவே பல வருடங்களுக்கு முன்னதாக விஜய் டிவிக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருந்தார். அந்த பேட்டி இங்கே!
இது குறித்து அவர் பேசும் போது, “பில்லா திரைப்படத்தின் போது, ஆரம்பத்தில் நமீதாவுக்கும், எனக்குமான உறவு நன்றாகவே இருந்தது. முதலில் நானாகத்தான் அவரிடம் சென்று பேசினேன்.இருவரும் நன்றாகத்தான் பேசிக்கொண்டிருந்தோம். பழகிக்கொண்டிருந்தோம். முதல் சில நாட்கள் அப்படித்தான் போகும் என்று எனக்குத்தெரியும்.
திடீரென்று ஒரு நாள் என்னுடன் அவர் பேசுவதை நிறுத்திவிட்டார். இதற்கும், எனக்கும் அவருக்கும் பெரிதாக எந்த பிரச்சினையோ, சண்டையோ நடக்கவே இல்லை.. வருவார்.. கூட்டத்தில் இருக்கும் எல்லோருக்கும் ஹாய் சொல்வார்.. எனக்கு மட்டும் சொல்லமாட்டார். ஒரு கட்டத்தில் எனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. ஒரு கட்டத்தில் அதை நான் அப்படியே விட்டு விட்டேன். அவருடன் பேசுவதையும் நிறுத்திக்கொண்டேன். மற்றவர்களுக்கு நம்முடன் பிரச்சினை இருக்கும் பட்சத்தில், அது அவர்களின் பிரச்சினையாக மாறி விடுகிறது. ஆகையால் அதைப் பற்றி பெரிதாக நாம் கவலைக்கொள்ளத் தேவையில்லை.
த்ரிஷா உடனான உறவு குறித்து நயன்தாரா பேசும் போது, “த்ரிஷா, ஸ்ரேயா உள்ளிட்டோரை நான் நண்பர்கள் என்று சொல்லமாட்டேன். காரணம், நட்பு என்பது மிகப்பெரிய வார்த்தை. அதை அவர்களுக்கு பயன்படுத்த முடியாது. எங்களுக்குள் பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் இதுதான் அந்த பிரச்சினை என்று என்னால் அப்படியே பொதுவெளியில் அப்படியே போட்டு உடைக்க முடியாது.
ஹீரோயின்கள் என்றாலே அதெல்லாம் இருக்கத்தான் செய்யும். பொதுவாக கூட சொல்வார்களே.. ஒரு பெண்ணுக்கும், இன்னொரு பெண்ணுக்கும் ஆகாது என்று.. அது போலதான். அப்படியும் அவர்களிடம் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், அவர்களுக்கு என்னிடத்தில் பிரச்சினை இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் நான் அதனை பெரிதாக கண்டுகொள்ள மாட்டேன். அதே போல பிரச்சினை இருக்கிறது என்பதற்காக நானாக சென்றெல்லாம் அவர்களிடத்தில் பேசமாட்டேன்.
அது எனக்குத் தேவையே கிடையாது. உண்மையில், நண்பர் என்ற ஸ்தானத்தில் ஒருவர் இருந்தால் அவரிடத்தில் நிச்சயம் நான் சென்று பேசுவேன். அந்த பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி எடுப்பேன்.ஆனால், இவர்களிடத்தில் அந்தளவு பெரிய பிரச்சினை கிடையாது. த்ரிஷாவிற்கு என்னை பிடிக்காது. அவருக்கு பிடிக்காது என்றால் எனக்கும் பிடிக்காதுதான்” என்று பேசினார்.
பிரபல நடிகையான நயன்தாரா இன்று தன்னுடைய 40 வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நன்னாளில், தனுஷூடனான அவரது சர்ச்சையும் அவருடன் ஒட்டிக்கொண்டது. நயன்தாராவிற்கு சர்ச்சைகள் ஒன்றும் புதிதில்லை. அவர் நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே இது போன்ற பிரச்சினகள் அவருடன் பயணித்தே வந்திருக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு பிரச்சினை அவ்வளவுதான் வித்தியாசம்..
சினிமா துறையில் அவருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே போட்டியாக பார்க்கப்படுவர் நடிகை த்ரிஷா. நம்பர் 1 இடத்திற்கான இந்த போட்டியே, அவர்களது உறவில் போதுமான விரிசலை ஏற்படுத்த முழு முதற் காரணமாக அமைந்து விட்டதாக திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த நிலையில் அவருடனான உறவு குறித்து நடிகை நயன்தாரா பல வருடங்களுக்கு முன்னதாக விஜய் டிவிக்கு அளித்த பேட்டியில் பேசி இருந்தார். அந்த பேட்டியை இங்கே காணலாம்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்