Nayanthara: “அவள மாதிரி ஒரு நல்ல மனிஷிய..” - உருகி வழிந்த உயிர்.. சண்டக்கோழி சரிந்த கதை-nayanthara birthday wish for husband vignesh shivan is love nayanthara vignesh shivan love story here - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nayanthara: “அவள மாதிரி ஒரு நல்ல மனிஷிய..” - உருகி வழிந்த உயிர்.. சண்டக்கோழி சரிந்த கதை

Nayanthara: “அவள மாதிரி ஒரு நல்ல மனிஷிய..” - உருகி வழிந்த உயிர்.. சண்டக்கோழி சரிந்த கதை

Kalyani Pandiyan S HT Tamil
Sep 18, 2024 01:01 PM IST

Nayanthara: தன்னுடைய தொழில் சார்ந்த விஷயங்களில் மிகவும் சரியாக இருக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த நயன்தாரா, அதற்காக எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் போடுவதற்கு தயாராக இருந்தாராம். -விக்னேஷ் -நயன் காதல் கதை

Nayanthara: அவர மாதிரி ஒரு நல்ல மனிஷிய.. உருகி வழிந்த உயிர்.. சண்டக்கோழி சரிந்த கதை
Nayanthara: அவர மாதிரி ஒரு நல்ல மனிஷிய.. உருகி வழிந்த உயிர்.. சண்டக்கோழி சரிந்த கதை

கோலிவுட்டின் ஆதர்ச ஜோடியாக வளம் வரும் அவர்களின் காதல் பயணத்தை இங்கு பார்க்கலாம்.

சண்டை செய்ய தயார்

தமிழ் சினிமாவில் இன்று லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. அடிப்படையில் மலையாள குடும்பத்தைச் சேர்ந்த இவர், தமிழில் ' ஐயா ' திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். தன்னுடைய தொழில் சார்ந்த விஷயங்களில் மிகவும் சரியாக இருக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த நயன்தாரா, அதற்காக எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் போடுவதற்கு தயாராக இருந்தாராம்.

இதனை அந்தப் படத்தை இயக்கிய இயக்குனர் ஹரியே பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். மேலும் அதில் முதல் படத்திலேயே இந்தப்பெண் இவ்வளவு கறாராக இருக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டதாகவும், வரும் காலத்தில் இவர் மிகப்பெரிய நடிகையாக வருவார் என்று கணித்ததாகவும் கூறியிருந்தார்.

சிம்பு - பிரபுதேவா காதல்கள்

அந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்கள் ஹிட்டாக, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் வந்து சேர்ந்தார் நயன்தாரா. இந்த நிலையில்தான் ' வல்லவன் ' படத்தின் போது, நடிகர் சிம்புவுடன் காதல் வயப்பட்டார். அது அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால்,அந்த பரபரப்பு பேசி அடங்கி முடிவதற்கு உள்ளாகவே, அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். அதனைத் தொடர்ந்து வில்லு படத்தின் நடித்துக் கொண்டிருந்த பொழுது, நடிகரும் அந்த படத்தின் இயக்குருமான பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டார். இது பிரபு தேவாவின் குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கியது. நயன்தாராவை விட அவரின் குழந்தைகளுக்கு பிரபுதேவா அதிகமான கரிசனத்தை காட்டியது நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த பிரச்சினை பெரிதாக வெடிக்க இருவரும் பிரிந்து விட்டார்கள். இதனையடுத்துதான் 2015 ஆம் ஆண்டு 'நானும் ரவுடிதான் ' படத்தில் கமிட் ஆனார் நயன். அந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். அப்போது சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் அதிகப்படியான நேரத்தை செட்டில் கழித்தார்கள். இந்த தகவலாக வந்து கொண்டிருந்த நிலையில், நானும் ரவுடிதான் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, அந்த படத்தில் நடித்த நடிகர் மன்சூர் அலிகான் நயனும் விக்னேஷ் சிவனும் செட்டில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள் என்று சொல்ல, விக்னேஷ் சிவன் உட்பட பத்திரிக்கையாளர்கள் அனைவரும் சிரித்தனர்.

அப்போது விக்னேஷ் சிவனும், நயனும் காதலிக்கிறார்கள் என்பது கிட்டத்தட்ட முடிவாகி விட்டது.இதையடுத்து இருவரும் முதல் முறையாக சிங்கப்பூரில் நடந்த ஒரு விழா ஒன்றிற்கு ஜோடியாக வந்திருந்தனர். அந்த விழாவில் விக்னேஷ் சிவனுக்கு நானும் ரவுடிதான் படத்திற்காக, சிறந்த இயக்குனர் விருது வழங்கப்பட்டிருந்தது. விருதை வாங்கிய விக்னேஷ் சிவன் நயன் மீது இருந்த காதலை வெளிப்படுத்தியதோடு, "அவரை போன்ற ஒரு நல்ல மனிதரை தன் வாழ்நாளிலேயே பார்த்தது இல்லை" என்றார்.

அதேபோல நயனுக்கு அந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்ட போது, தன்னை நம்பியதற்காக விக்னேஷ் சிவனுக்கு நன்றி என்று தெரிவித்தார்.அப்போது நயன்தாரா சோசியல் மீடியாவில் இல்லை. ஆனால் விக்னேஷ் இவன் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்தார். இதனையடுத்து தொடர்ந்து அவர் நயனுடன் தான் இருப்பது தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

கடந்த 2021 மார்ச் 21ஆம் தேதி நயனின் கையில் மோதிரம் ஒன்று தென்பட்டது. இதையடுத்து அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா என்ற கேள்வி எழுந்த நிலையில், அவரது நெற்றிக்கண் படத்தின் புரோ மோஷனில் அதற்கு பதில் அளித்த அவர், "இது என்னுடைய நிச்சயதார்த்த மோதிரம் தான். இது எங்களுடைய தனிப்பட்ட விஷயம். அதனால் இதனை நாங்கள் பெரிய கொண்டாட்டமாக கொண்டாடவில்லை. நாங்கள் திருமணத்தைப் பற்றி இன்னும் யோசிக்கவில்லை. திருமணம் செய்து கொள்ளும் பொழுது நிச்சயமாக எங்களது ரசிகர்களுக்கு நாங்கள் அதை தெரிவிப்போம்" என்று கூறியிருந்தார்.

இதையடுத்து தொடர்ந்து பார்ட்டி கோயில்கள், வெளிநாடுகள் என இருந்த அவர்கள், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அவரது திருமணத்திற்கு ஷாருக்கான் உட்பட பல திரைப்பட பிரபலங்கள் வந்து வாழ்த்துகளை தெரிவித்தனர். தொடர்ந்து வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்ட நயன்தாராவுக்கு தற்போது இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.