OTT Release Tomorrow: நயன்தாராவின் த்ரில்லர் படம், கனா காணும் காலங்கள்..நாளை ஓடிடி ரிலீஸ் லிஸ்ட் இதோ
நயன்தாராவின் த்ரில்லர் படம், கனா காணும் காலங்கள் வெப் சீரிஸ் உள்பட ஓடிடியில் நாளை வெளியாக இருக்கும் படங்கள், வெப்சீரிஸ் லிஸ்ட்களை பார்க்கலாம்
நயன்தாராவின் த்ரில்லர் படம், கனா காணும் காலங்கள் வெப் சீரிஸ் உள்பட ஓடிடியில் நாளை வெளியாக இருக்கும் படங்கள், வெப்சீரிஸ் லிஸ்ட்களை பார்க்கலாம்
ஆகஸ்ட் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையாகவும், மாதத்தின் கடைசி நாளுக்கு முந்தையா நாளாகவும் ஆக்ஸ்ட் 30ஆம் தேதி உள்ளது. இதையடுத்து இந்த நாளில் பிரபல ஓடிடி தளங்களில் புதிய படம், வெப்சீரிஸ் ஆகியவை வெளியாக இருக்கின்றன. அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் கடைசி வீக்கெண்ட் ஸ்பெஷலாக ஓடிடி ரிலீஸ்களின் லிஸ்ட் இதோ
மாய நிழல்
நயன்தாரா, குஞ்சாக்கா பூபன் நடித்திருக்கும் மலையாள த்ரில்லர் படம் மாய நிழல். 2021இல் மலையாளத்தில் வெளியான இந்த பம் நல்ல வரவேற்பை பெற்றது, இதையடுத்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இதன் தமிழ் பதிப்பு ஆஹா ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 30 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது.
கனா காணும் காலங்கள்
இளம் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வரும் கனா காணும் காலங்கள் சீசன் 3 தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஆக்ஸ்ட் 30 முதல் ஒளிபரப்பாகிறது.
பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட கதையம்சத்தில் இந்த சீசன் 3 புத்தம் புது நடிகர்களுடன் உருவாகியுள்ளது
பட்டி
தமிழில் ஆர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான டெடி திரைப்படம் தெலுங்கில் அல்லு சிரீஷ், காயத்ரி பரத்வாஜ் நடிப்பில் பட்டி என்ற பெயரில் உருவாகியுள்ளது. சாம் ஆண்டன் படத்தை இயக்கியுள்ளார்.
கடந்த 2ஆம் தேதி தெலுங்கில் வெளியான இந்த படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தெலுங்கு தவிர தமிழ், மலையாளம், கன்னடா பதிப்பிலும் வெளியாகிறது
இன்ட்ராகேஷன்
இந்தியில் உருவாகியிருக்கும் க்ரைம் த்ரில்லர் படமான இன்ட்ராகேஷன் ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. ஓய்வு பெற்ற நீதிபதியின் கொலை மற்றும் அதன் விசாரணையை மையப்படுத்திய கதையாக இன்ட்ராகேஷன் படம் அமைந்துள்ளது.
ப்ரீத்லெஸ்
ஸ்பெயின் மொழி மெடிக்கல் டிராமா படமாக இருக்கும் ப்ரீத்லெஸ், வலென்சியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடக்கும் பதட்டமான சூழ்நிலைகள், தனிப்பட்ட மோதல்கள் மற்றும் காதல், உயிரைக் காப்பாற்றும் போராட்டத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழு ஈடுபடுவதை விறுவிறுப்பான திரைக்கதையுடன் காட்டுகிறது.
ஐசி 814: தி கந்தஹார் ஹைஜாக்
கந்தஹார் விமானக் கடத்தல் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ஐசி 814: தி கந்தஹார் ஹைஜாக் வெப் சீரிஸாக உருவாகியுள்ளது. இந்த தொடரை அனுபவ் சின்ஹா இயக்கியுள்ளார். விஜய் வர்மா, நஸ்ருதீன் ஷா, அரவிந்த் சாமி, தியா மிர்சா பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். மொத்தம் 6 எபிசோடுகளை கொண்டதாக இந்த சீசன் அமைந்துள்ளது
இது தவிர சைதன்யா ராவ், ஹெபா படேல், சுகாசினி மணிரத்னம் நடித்த ஹனிமூன் எக்ஸ்பிரஸ் என்ற தெலுங்கு படம், கன்னட மொழியில் வெளியாகி வரவேற்பை பெற்ற சில்லி சிக்கன் படம் அமேசான் ப்ரைம் விடியோ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/