Nayantara : ‘ஊரெல்லாம் உன்னைக்கண்டு வியந்தாரா?’ 50 நொடி விளம்பரத்துக்கு நயன் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nayantara : ‘ஊரெல்லாம் உன்னைக்கண்டு வியந்தாரா?’ 50 நொடி விளம்பரத்துக்கு நயன் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Nayantara : ‘ஊரெல்லாம் உன்னைக்கண்டு வியந்தாரா?’ 50 நொடி விளம்பரத்துக்கு நயன் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Mar 20, 2024 11:11 AM IST

Nayantara : நயன்தாரா ஒரு விளம்பரத்தில் நடிப்பதற்கு ரூ.5 கோடி பெற்றார் என்ற செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Nayantara : 50 நொடிக்கு இத்தனை கோடியா? நயன்தாரா ஒரு விளம்பரத்துக்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Nayantara : 50 நொடிக்கு இத்தனை கோடியா? நயன்தாரா ஒரு விளம்பரத்துக்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்திய அளவுக்கு புகழ்பெற்ற நடிகையாக நயன்தாரா உள்ளார். இவர் தனது திரைப்பயணத்தை, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக துவங்கினார். சின்னத்திரையில் வெற்றி பெற்றவுடன், இவர் பெரிய திரையில் உச்ச நட்சத்திரம் ஆனார்.

இவர் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடத்துள்ளார். இந்தியாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவர். தமிழ் சினிமாவில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இவரது பெயர் தொடர்ந்து செய்திகளில், இவரது படம் மற்றும் விக்னேஷ் சிவனுடனான இவரது உறவு, பெண்கள் முன்னேற்றம் என பல விஷயங்களுக்காக வரும். மிகவும் திறமையான நடிகை, முதலில் சிம்புவுடன் கிசுகிசுக்கப்பட்டார். 

அப்போது அவர்கள் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னர் இவர் சிம்புவுடனான உறவை முறித்துக்கொண்டார். பின்னர் பிரபுதேவாவுடனான காதல், இதையடுத்து பிரபுதேவா தனது முதல் மனைவி ரம்லத்தை விவகாரத்து செய்தார். டயானா மரியம் குரியன் என்பது இவரது இயற்பெயர். 

சினிமாவுக்காக நயன்தாராவாக மாறியவர், அப்படியே மதத்தையும் மாற்றிக்கொண்டு நயன்தாராவாகவே தொடரந்தார். இவர் பிரபுதேவாவை திருமணம் செய்துகொண்டு நடிப்பில் இருந்து விலகப்போகிறார் என்ற செய்தி வெளியானது. 

ஆனால் பிரபு தேவாவுடனான உறவும் பிரிவில்தான் முடிவடைந்தது. பின்னர் மீண்டும் சினிமாவுக்கு வந்து, வழக்கம்போல் படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் ஆனார். அடுத்து விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளைப் பெற்றுக்கொண்டார். காதல் மற்றும் காதல் முறிவு எல்லாம் இவரது கடந்த கால கசப்பான பக்கங்கள்.

ஆனால் அவற்றில் இருந்து எல்லாம் மீண்டு தற்போது நயன்தாரா உச்சபட்ச நடிகையாகவும் இருக்கிறார். மேலும் இவர் சினிமா மட்டுமின்றி பெண் தொழில்முனைவோராகி பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறார்.

இவர் குறித்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது. அது அவர் ஒரு விளம்பர படத்தில் நடிக்க ரூ.5 கோடி பெற்றுள்ளார். இதுகுறித்த செய்தியை நியூஸ் 18 வெளியிட்டுள்ளது.

இவர் ஒரு சாட்டிலைட் டிஷ் கனெக்ஷன் விளம்பர செய்தியில் நடிப்பதற்கு இவர் ரூ.5 கோடி பெற்றுள்ளார் என்று தெரிவித்துள்ளது. 50 நொடி விளம்பரத்தில் வருவதற்கு நயன்தாரா ரூ. 5 கோடி பெற்றுள்ளார். இவர் ஒரு படத்தில் நடிப்பதற்கு ரூ.10 கோடி பெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நயன்தாரா கடைசியாக அன்னபூரணி என்ற படத்தில் நடித்திருந்தார். அந்தப்படம் வெளியாகி, ஓடிடி தளத்தில் இருந்து, குறிப்பிட்ட மதத்தினரின் நம்பிக்கை புண்படுத்துவதாக கூறி நீக்கப்பட்டது. இவர் தற்போது டெஸ்ட், என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தயாரிப்பாளர் சஷிகாந்த், இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். மாதவன் மற்றும் சித்தார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 என்ற படத்திலும் அவர் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது விளம்பர வருமானம் குறித்த செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.