Nayantara: ஓராண்டுக்கு பிறகு நயன்தாரவின் புதிய படம்.. ரசிகர்கள் ஆசையா பார்க்க விரும்பிய ஜோடி.. நேரடியாக ஓடிடி ரிலீஸ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nayantara: ஓராண்டுக்கு பிறகு நயன்தாரவின் புதிய படம்.. ரசிகர்கள் ஆசையா பார்க்க விரும்பிய ஜோடி.. நேரடியாக ஓடிடி ரிலீஸ்

Nayantara: ஓராண்டுக்கு பிறகு நயன்தாரவின் புதிய படம்.. ரசிகர்கள் ஆசையா பார்க்க விரும்பிய ஜோடி.. நேரடியாக ஓடிடி ரிலீஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 16, 2025 10:56 AM IST

Nayantara: கடந்த 2024இல் நயன்தாரா நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. அந்த வகையில் அன்னப்பூர்னா படத்துக்கு பின்னர் நயன்தாரா, மாதவன் நடித்திருக்கும் படமான டெஸ்ட் தற்போது வெளியாக இருக்கிறது.

ஓராண்டுக்கு பிறகு நயன்தாரவின் புதிய படம்.. ரசிகர்கள் ஆசையா பார்க்க விரும்பிய ஜோடி.. நேரடியாக ஓடிடி ரிலீஸ்
ஓராண்டுக்கு பிறகு நயன்தாரவின் புதிய படம்.. ரசிகர்கள் ஆசையா பார்க்க விரும்பிய ஜோடி.. நேரடியாக ஓடிடி ரிலீஸ்

நயன்தாரா - மாதவன் நடித்த படம்

தமிழ் சினிமாவில் அதிக பெண் ரசிகர்களை கொண்ட நடிகராகவும், சாக்லேட் பாய் என்ற அழைக்கப்பட்ட மாதவன், நயன்தாரா முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் டெஸ்ட். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என ரசிகர்களின் ஆசையாக இருந்து வந்த நிலையில், தற்போது முதல் முறையாக நயன்தாரா - மாதவன் ஆகியோர் நடித்துள்ளனர்.

பிரபல தயாரிப்பாளர் சஷிகாந்த் இயக்கியிருக்கும் இந்த படம் ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் உருவாகியுள்ளது.

சித்தார்த், மீரா ஜாஸ்மின், காளி வெங்கட் உள்பட பலரும் நடித்திருக்கும் இந்த படம் மூலம் பிரபல பின்னணி பாடகி ஷக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். டெஸ்ட் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம். விரைவில் படம் எந்த ஓடிடியில் வெளியாகும் என்கிற அறிவிப்பு வரும் என தகவல்கள் உலா வருகின்றன.

ஓராண்டுக்கு பிறகு நயன்தாரா படம் ரிலீஸ்

நயன்தாரா நடிப்பில் கடைசியாக கடந்த 2023 டிசம்பரில் அன்னப்பூர்னா படம் வெளியானது. நயன்தாரா கதையின் நாயகியாக நடித்திருந்த இந்த படத்தில் ஜெய், சத்யராஜ், கார்த்திக் குமார் உள்பட பலரும் நடித்திருந்தார்கள். படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தபோதிலும் மழை, புயல் காரணமாக பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கோட்டை விட்டது.

நயன்தாராவின் 75வது படமாக இருந்த அன்னப்பூர்னா படத்தின் சில காட்சிகள் இந்து மதத்தினரை இழிவுபடுத்தும் விதமாக சர்ச்சை எழுந்த நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெயான சில நாள்களில் இருந்து நீக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் கடந்த 2024இல் எந்த படமும் வெளியாகவில்லை. அவரது திருமண டாக்குமென்ட்ரியான நாயன்தாரா: பியாண்ட் தி பேரிடேல் நெட்பிளிக்ஸில் வெளியானது.

இதன் பின்னர் ஓராண்டு கழித்து நயன்தாரா நடிப்பில் வெளியாகும் படமாக இருக்கும் டெஸ்ட், நேரடியாக ஓடிடியில் வெளியாக இருப்பதாக உலா வரும் தகவல் ரசிகர்களுக்கு ஷாக்காக அமைந்துள்ளது.

வரிசை கட்டும் நயன்தாரா படங்கள்

மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளாராம் நயன்தாரா. ராக்காயி என்ற படத்தில் நடித்து வரும் நயன்தாரா, விஷ்ணு எடவன் இயக்கத்தில் புதிய படத்திலும் நடிக்கவுள்ளார்.

இது தவிர டியர் ஸ்டூடண்ட்ஸ் என்கிற மலையாள படம், டாக்சிக்: ஏ பேரி டைல் பார் கிரெளவுன் அப்ஸ் என்ற கன்னட படத்திலும் நடிக்கிறார். கடந்த ஆண்டு முழுவதும் நயன்தாரா படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் இந்த ஆண்டில் அவரது படங்கள் அரை டஜனுக்கு மேல் வெளியாகி விருந்து படைக்க உள்ளது.

தனுஷ் - நயன்தாரா வழக்கு

முன்னதாக, தனது டாக்குமென்டரி ரிலீஸ் சமயத்தில் நடிகர் தனுஷ் மீது குற்றச்சாட்டு ஒன்றை வைத்தார் நயன்தார். இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் தனக்கு காதல் ஏற்பட காரணமாக இருந்த நானும் ரெளடிதான் படத்தின் மேக்கிங் காட்சிகளை பயன்படுத்த ரூ. 10 கோடி வரை தனுஷ் கேட்டதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இருப்பினும் நயன்தாரா டாக்குமென்டரியில் நானும் ரெளடிதான் காட்சிகள் இடம்பிடித்திருந்த நிலையில், நயன்தாரா மீது நஷ்ட் ஈடு கேட்டு தனுஷ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நயன்தாரா மற்றும் டாக்குமென்டரி வெளியிட்ட நெட்பிளிக்ஸ் தரப்பு விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனுஷ் - நயன்தாரா இடையிலான இந்த மோதல் கடந்த ஆண்டில் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.